Published:Updated:

நியூஸ் எம்பஸி!

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் மலையின் புதிய உயரத்தை விரைவில் அறிவிக்கவிருக்கிறது நேபாளம்.

மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை. அவற்றிலிருந்து பல ஃபேஷன் துறை சார்ந்த பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
நியூஸ் எம்பஸி!

மிங்க் விலங்குகளிடையே வேகமாக கொரோனா பரவியதால், டென்மார்க் அரசு தங்கள் நாட்டில் வளர்க்கப்படும் 15 மில்லியனுக்கும் அதிகமான மிங்க்குகளைக் கொல்ல முடிவுசெய்தது. டென்மார்க் வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிக்கும் மிங்க்குகளை, பல ஆண்டுகளாக வளர்த்துவந்த விவசாயிகள் இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சென், பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தார். ``இது, மிங்க் வளர்க்கும் விவசாயிகளைப் பொறுத்தவரை உணர்ச்சி மிகுந்த தருணம். என்னை மன்னித்துவிடுங்கள்... நானும் எமோஷனலாக உணர்கிறேன்” என்று கலங்கினார். விவசாயிகளுக்கு உடனடியாக மாற்று வழிகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை! #கொரோனா கண்ணீர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஷ்ய, வட கொரிய அரசின் ஆதரவுபெற்ற ஹேக்கர்கள், ஏழு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களின் நெட்வொர்க்கை ஹேக் செய்ய முயன்றதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியிருந்தது மைக்ரோசாஃப்ட். பிரபல ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திலும் இந்த ஹேக்கிங் முயற்சி நடைபெற்றது. இந்நிலையில் வடகொரிய ஆதரவு ஹேக்கர்கள், தங்கள் நாட்டு மருந்து நிறுவனங்களைக் குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகளை மேற்கொண்டதாக தென் கொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனாலும், குற்றம்சாட்டிய அனைத்துத் தரப்பினரும், ஹேக்கிங் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவே தெரிவித்திருக்கிறார்கள். #ஆபரேஷன் `ஆன்டி வைரஸ்’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவின் ஷாங்காயில், 85 வருட பழைமையான ஐந்து மாடிகளைக்கொண்ட ஆரம்பப் பள்ளி ஒன்று சுமார் 200 அடிக்கு `வாக்கிங்’ செய்திருக்கிறது. பழைமையான கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, இடிக்கவிருந்த கட்டடத்தை நகர்த்தியிருக்கிறார்கள். `T’ வடிவமைப்பில் இருந்த கட்டடத்தை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 18 நாள்களில் 21 டிகிரி திருப்பியதுடன், சுமார் 203 அடி நகர்த்தியுள்ளனர். 7,600 டன் எடைகொண்ட இந்தக் கட்டடத்தை நகர்த்த, 198 கால்கள் போன்ற அமைப்புகொண்ட `வாக்கிங் மெஷின்’ எனும் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் பழைமையான கட்டடங்களைப் பாதுகாப்பதில் ஷாங்காய் உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்கிறார்கள். இங்கு கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இடிக்காமல், இப்படி வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறார்கள்! #முன்னுதாரணமாக `நகரும்’ நகரம்!

நியூஸ் எம்பஸி!

ன்னா மரின், உலகின் இளம்பெண் தலைவராக அறியப்படுபவர். ஃபின்லாந்து நாட்டின் பிரதமராக ஓர் ஆண்டை டிசம்பரில் நிறைவுசெய்யவிருக்கும் மரினின் செயல்பாடுகள், உலக கவனத்தை ஈர்த்துவருகின்றன. தற்போதைய ஃபின்லாந்து கூட்டணி அரசை வழிநடத்துவது ஐந்து பெண்கள்தான். அவர்களில் நான்கு பேர், 40 வயதுக்கும் குறைவான இளம்பெண்கள். பாலினச் சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தும் சன்னா மரின், அவரது குடும்பத்திலேயே முதன்முறையாகப் பல்கலைக்கழகம் சென்றவர். பிபிசி-யின் இந்த ஆண்டுக்கான ‘ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் சன்னா மரின்! #சிங்கப்பெண்!

நியூஸ் எம்பஸி!

நியூயார்க் நகருக்கு அருகில், 100 வருடங்கள் பழைமையான பங்களா ஒன்றை வாங்கிய நிக் ட்ரம்மோண்ட் - பேட்ரிக் பாக்கர் தம்பதியர், அதைப் புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். பழைமையான பொருள்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்களையும் அதிகம் நேசிக்கும் நிக், அந்த வீட்டைப் புதுப்பிக்கும்போது, வீட்டின் சுவரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பழைமையான விஸ்கி ரக மதுபாட்டில்களைக் கண்டுபிடித்தார். மொத்தம் 66-க்கும் அதிகமான பாட்டில்கள். தம்பதியருக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை. மதுவுக்குத் தடையிருந்த காலகட்டத்தில் அவை பதுக்கிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டைக் கட்டியவர், கள்ளச் சந்தையில் மதுவகைகளை விற்பவர் என்ற கதைகள் சொல்லப்பட்டனவாம். அது தற்போது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். `ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடால்ப் ஹம்ப்னெர் என்பவர் அந்த வீட்டை 1915 -ம் ஆண்டில் கட்டியிருக்கிறார். அப்போதைய செய்தித்தாள்களை ஆராய்ந்ததில், அவர் ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்திருக்கிறார்’ என்கிறார் நிக். பல கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய ஹம்ப்னெரின் திடீர் மரணத்திலும் பல மர்மங்கள் இருக்கலாம் என்கிறார்கள். #`மர்ம’ பங்களா!

நியூஸ் எம்பஸி!

லகின் உயரமான மலையான எவரெஸ்ட் மலையின் புதிய உயரத்தை விரைவில் அறிவிக்கவிருக்கிறது நேபாளம். கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் எவரெஸ்ட்டின் உயரத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்ற கருத்து எழுந்த நிலையில், 2017-ம் ஆண்டில் அதன் உயரத்தைக் கணக்கிடும் பணியைத் தொடங்கியது நேபாளம். தற்போது இந்தப் பணி முழுமையாக முடிவடைந்துவிட்டதாக நேபாளம் தெரிவித்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் புதிய உயரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்! #புதிய உச்சம் தொடுமா மவுன்ட் எவரெஸ்ட்?!