Published:Updated:

நியூஸ் எம்பஸி

இங்கிலாந்து
பிரீமியம் ஸ்டோரி
இங்கிலாந்து

பொதுவாக அரச குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், ராஜ மரியாதையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இறுதி ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

நியூஸ் எம்பஸி

பொதுவாக அரச குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், ராஜ மரியாதையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இறுதி ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

Published:Updated:
இங்கிலாந்து
பிரீமியம் ஸ்டோரி
இங்கிலாந்து
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகையும், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான நாஸ்ட்யா இவ்லீவாவின் லம்போகினி சொகுசு காரை கைப்பற்றியிருக்கிறது ரஷ்யக் காவல்துறை. டி.வி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த நாஸ்ட்யாவை 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். கார் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர், ``என் வாழ்நாளில் முதன்முறையாக எனது கார் போலீஸாரால் தூக்கிச் செல்லப்படுகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்யப் பத்திரிகைகள், ``சாலை விதிமீறல், ஓவர் ஸ்பீடு, முறையற்ற பார்க்கிங் என 199 வழக்குகளில் அபராதத் தொகையைச் செலுத்தாமல் போலீஸாரை அலைக்கழித்து வந்திருக்கிறார். அதனால்தான் நாஸ்ட்யாவின் 1.94 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போகினி காரை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. #சட்டம் தன் கடமையை...

நியூஸ் எம்பஸி

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரக் கட்டடம் தகர்க்கப்பட்டது. இதற்கான திட்டத்தை அல்கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானிலிருந்துதான் வகுத்தது. அல்கொய்தா அமைப்பை வேரறுக்க 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், தங்களது படை வீரர்களைக் களமிறக்கியது அமெரிக்கா. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் அல்கொய்தா மற்றும் தாலிபன்களுக்கு எதிராகப் போர் புரிந்துவந்தன அமெரிக்கப் படைகள். இந்தநிலையில்தான், ஆப்கனிலுள்ள படைகளை செப்டம்பர் 11, 2021-க்குள்ளாக முழுமையாகத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ``எங்கள் வீரர்கள் போரைத் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது’’ என்று பைடன் அறிவித்திருப்பதன் மூலம் 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வரவிருக்கிறது. #அமைதி திரும்பட்டும்!

நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்டநாள் அரச பதவியிலிருந்தவர் இளவரசர் பிலிப். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இவர், ஏப்ரல் 9-ம் தேதி தனது 99-வது வயதில் உயிரிழந்தார். பொதுவாக அரச குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், ராஜ மரியாதையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இறுதி ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக, ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் உட்பட 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தான் நீண்டகாலம் பயணித்த லேண்ட் ரோவர் வாகனத்தில்தான் தனது இறுதி ஊர்வலம் நடைபெற வேண்டுமென்பது இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை. அதன்படி அவரது உடல் லேண்ட் ரோவர் காரில் வைத்து, கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. #அஞ்சலிகள்

நியூஸ் எம்பஸி

கடந்த மாத இறுதியில் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டிச் சிக்கிக்கொண்ட `எவர் கிவன்’ சரக்குக் கப்பல், பல நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தக் கப்பல், சூயஸ் கால்வாயைத் தாண்ட இன்னும் 90 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழலில், சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு இந்தக் கப்பலைக் கைப்பற்றி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. சூயஸ் கால்வாயின் அங்கமான கிரேட் பிட்டர் லேக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தக் கப்பலில் மாலுமிகள் உட்பட 25 இந்தியர்கள் இருக்கின்றனர். ‘எவர் கிவன்’ கப்பல் கால்வாயில் ஏற்படுத்தியிருக்கும் சேதம், தரைதட்டி நின்ற காலத்தில் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பு ஆகியவற்றுக்கான நஷ்ட ஈடாக, கப்பலின் உரிமையாளரான Shoei Kisen Kaish நிறுவனத்திடம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி கேட்டிருக்கிறது சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு. ‘காலநிலையால்தான் கப்பல் தரைதட்டியது’ என்று கப்பல் நிறுவனமும், ‘மனிதத் தவறு, கப்பலின் அளவில் உள்ள குறைகள்தான் காரணம்’ என்று சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பும் வாதிட்டுவருகின்றன. #அலட்சியத்தின் விலை...

நியூஸ் எம்பஸி

2011-ல் சுனாமியால் சேதமடைந்த ஜப்பானின் புகுஷிமா அணு உலையிலிருந்து காற்றில் பரவிய கதிர்வீச்சைத் தடுக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும் லட்சக்கணக்கான டன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. இப்படிப் பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு நிறைந்த 12.5 லட்சம் டன் கழிவுநீர் அணு உலை வளாகத்திலேயே சேமிக்கப்பட்டது. இதைக் கடலில் கலக்க முடிவு செய்திருக்கிறது ஜப்பான். ஆனால், ஜப்பானின் இந்த முடிவுக்கு சீனா, தென்கொரியா, ரஷ்யா, தைவான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கிறது. ``கதிர்வீச்சின் வீரியம் குறைக்கப்பட்டாலும், அதன் நீண்டகால விளைவுகள் எவ்வாறு இருக்கும் எனத் தெரியாது’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு உள்ளூர் மீனவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. #சுற்றுச்சூழல் முக்கியம் பிகிலே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism