Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

மிடோ நகரில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு, ஜப்பானிய விளையாட்டு வீரர் ஒருவர் வலம்வந்தார்.

நியூஸ் எம்பஸி

மிடோ நகரில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு, ஜப்பானிய விளையாட்டு வீரர் ஒருவர் வலம்வந்தார்.

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வசித்துவரும் 35 வயதான பெண் ஜீன் ராபின்சன். நிதி ஆராய்ச்சியாளரான இவருக்கு 20 வயதிலிருந்து முகம், மார்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் முடி வளரத் தொடங்கியிருக்கிறது. இவரைச் சோதித்த மருத்துவர்கள், ஹார்மோன் பாதிப்பால்தான் ஆண்களைப்போல தாடி, மீசை வளர்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் இதை நினைத்து வேதனையடைந்த ஜீன், வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் இருந்திருக்கிறார். அப்படியே சென்றாலும் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை மூடியே வைத்திருப்பாராம். `அதிக முடி வளர்வதால் எனக்குக் காதலரே இல்லை; நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ என்று ஆரம்பத்தில் வேதனைப்பட்டுவந்த ஜீன், தற்போது தன்னையே காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். தனது குறையை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு தாடி, மீசையோடு இருக்கும் தனது புகைப்படங்களையும், முடியை அகற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகிவருகிறார் ஜீன். இதனால் தனக்கு வருமானம் கிடைப்பதாகக் கூறுபவர், `யூ லுக் பியூட்டிஃபுல்’ என்பது போன்ற கமென்ட்டுகளையும், ஃபாலோயர்களின் ஹார்ட்டின்களையும் பரிசாகப் பெற்றுவருகிறார். #அழகே என்னை ஆராதிக்கிறேன்!

நியூஸ் எம்பஸி

கடந்த மார்ச் மாதம், சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர் கிவன் சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றதால், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டைச் சரிக்கட்ட கப்பல் நிறுவனத்திடம் சுமார் 6,830 கோடி ரூபாய் அபராதம் கேட்டது சூயஸ் கால்வாய் ஆணையம். மூன்று மாதக் காலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தொகை 4,108 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், ஜப்பானைச் சேர்ந்த எவர் கிவன் கப்பலின் உரிமையாளர் ஷோயி கிசென் கைஷா கையெழுத்திட்டதால், ஜூலை 7 அன்று விடுவிக்கப்பட்டது எவர் கிவன் கப்பல். #விடுதலை

நியூஸ் எம்பஸி

ஜப்பானின் டோக்கியோ நகரில், வரும் ஜூலை 23-ம் தேதியிலிருந்து ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதையொட்டி மிடோ நகரில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு, ஜப்பானிய விளையாட்டு வீரர் ஒருவர் வலம்வந்தார். அப்போது கயோகோ தாகாஹஷி என்கிற 53 வயதான பெண்மணி, பொம்மைத் துப்பாக்கியால் தண்ணீர் பாய்ச்சி ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்றதுடன், `ஜப்பானில் ஒலிம்பிக் வேண்டாம்’ என்று கோஷமிட்டதால், அந்த இடமே பரபரப்பானது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படையினர், அவரைக் கைதுசெய்தனர். கொரோனா பரவல் காரணமாக, ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு ஜப்பானியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. #உசுரு முக்கியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism