Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஓலஃப் ஷோட்ஸின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.

ஃபின்லாந்து நாட்டில், சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த சன்னா மரின் என்பவர்தான் பிரதமர். அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவரோடு தொடர்பிலிருந்தவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது ஃபின்லாந்து சுகாதாரத்துறை. இந்த நிலையில், பிரதமர் சன்னா இதைப் பின்பற்றாமல் கடந்த வார இறுதியில், தலைநகர் ஹெல்சிங்கி நகரிலுள்ள இரவு விடுதியில், அதிகாலை 4 மணிவரை நடனமாடிப் பொழுதைக் கழித்திருக்கிறார். நைட் கிளப்பில் இவர் விடிய விடிய நடனமாடிய வீடியோ வைரலானதால், கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கின. இதையடுத்து, ``நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என்று சமாளித்தார் சன்னா. இருந்தும், எதிர்ப்புகள் குறையாத காரணத்தால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``என்னை மன்னித்துவிடுங்கள். தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி எனது அலுவலக செல்போனுக்கு மெசேஜ் வந்திருந்தது. அதை நான் வீட்டில் வைத்துவிட்டதால், அடுத்த நாள்தான் பார்த்தேன். இப்போது கொரோனா பரிசோதனை செய்துவிட்டேன். தொற்றில்லை என முடிவு வந்திருக்கிறது’’ என விளக்கமளித்திருக்கிறார். #ரொம்ப ‘ஆடாதீங்க’ மேடம்!

நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனாவை கெளரவப்படுத்தும் வகையில், 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது, சிறப்புக் கைக்கடிகார மாடல் ஒன்றை வெளியிட்டது ஹப்லாட் (Hublot) நிறுவனம். ரூ.20 லட்சம் மதிப்புகொண்ட அந்தக் கடிகாரத்தில், மரடோனாவின் புகைப்படம், கையெழுத்து, ஜெர்சி நம்பர் ஆகியவை இடம்பெற்றிருந்தன. லிமிடெட் எடிஷனான இதில் ஒன்றைக் கையில் கட்டியிருந்தார் மரடோனா. அவரது மறைவுக்குப் பிறகு, அந்தக் கடிகாரம் துபாயிலுள்ள மரடோனாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு, அது காணாமல் போனது. போலீஸார் நடத்திய விசாரணையில், விடுமுறையில் சென்ற மரடோனா வீட்டின் பாதுகாவலர் வாசித் ஹூசைன் திரும்பாதது கண்டறியப் பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் வாசித் ஹூசைன். திருட்டு குறித்து அஸ்ஸாம் போலீஸுக்கு துபாய் காவல்துறை தகவல் அளிக்க, ஷிவசாகர் மாவட்டத்தில் அவரைக் கைதுசெய்திருக் கிறது அஸ்ஸாம் போலீஸ். அவரிட மிருந்து மரடோனாவின் கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. #காலத்திடம் தப்ப முடியாது!

நியூஸ் எம்பஸி

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஓலஃப் ஷோட்ஸின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இருந்தும் ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லாததால், சிக்கல் நீடித்துவந்தது. தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்ததை அடுத்து, கடந்த வாரம் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தமிருக்கும் 707 வாக்குகளில், 395 பேரின் ஆதரவைப்பெற்று புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஷோட்ஸ். இதன் மூலம், ஜெர்மனியின் இரும்புப் பெண்மணியான ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டுக்கால பிரதமர் பதவி முடிவுக்கு வந்திருக்கிறது. #மாற்றம் ஒன்றே மாறாதது!