Published:Updated:

நியூஸ் எம்பஸி!

நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி!

ஆப்பிரிக்கத் தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரின் வடகிழக்குக் கடற்பகுதியில், 130 பயணிகளோடு சென்ற கப்பல் ஒன்று சமீபத்தில் விபத்துக்குள்ளானது

நியூஸ் எம்பஸி!

1992-ம் ஆண்டு வோடஃபோன் நிறுவன நெட்வொர்க்கிலிருந்து, அந்நிறுவன ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு உலகின் முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 14 வார்த்தைகள்கொண்ட அந்தக் குறுஞ்செய்தியில், `Merry Christmas’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் குறுஞ்செய்தியை டிஜிட்டல் வடிவில் ஏலம்விட முடிவுசெய்தது வோடஃபோன் நிறுவனம். கிறிஸ்துமஸையொட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த இந்த ஏலத்தில், இந்திய மதிப்பில் சுமார் 91 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது அந்தக் குறுஞ்செய்தி. ஏலத்தொகை மொத்தத்தையும் ஐ.நா சபையின் அகதிகள் முகமைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்திருக்கிறது வோடஃபோன்.

நியூஸ் எம்பஸி!

ஆடம் என்பவர், அமெரிக்காவின் ஃபோர்ட் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன்னுக்கு விமானம் ஏறியிருக்கிறார். விமானத்தில் தனது உள்ளாடையை மாஸ்க்போல அணிந்திருக்கிறார் ஆடம். இதைப் பார்த்த பணிப்பெண், ‘‘நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடப்படுவீர்கள்’’ என்றிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, இறுதியில் கீழே இறக்கிவிடப்பட்டார் ஆடம். அவருக்கு ஆதரவாக, சில பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆடம், ‘‘விமானத்தில் ஏறும் வரைதான் மாஸ்க் அணிகிறார்கள். அதன் பிறகு, சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மாஸ்க்கைக் கழற்றிக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அந்த நேரத்தில் மாஸ்க் அணியவில்லையென்றால், பரவாயில்லையா... என்ன முரண்பாடு இது?’’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். உள்ளாடையை மாஸ்க்காக அணிந்த ஆடம்-ன் வீடியோ, அமெரிக்கா முழுவதும் வைரலாகிவருகிறது.

ஆப்பிரிக்கத் தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரின் வடகிழக்குக் கடற்பகுதியில், 130 பயணிகளோடு சென்ற கப்பல் ஒன்று சமீபத்தில் விபத்துக்குள்ளானது. 39 பேர் உயிரிழந்த இந்த விபத்தில், மற்றவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தது. அதைக் கண்காணிக்க டிசம்பர் 20-ம் தேதி இரவு ஹெலிகாப்டரில் கடற்பகுதிக்குச் சென்றிருக்கிறார் அந்நாட்டின் அமைச்சர் கேலே. எதிர்பாராதவிதமாக அவர் சென்ற ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கவே... கடலில் குதித்த அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி, கரையை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார். அவரோடு பயணித்த ஓர் அதிகாரியும் இதேபோல நீந்தி உயிர் தப்பியிருக்கிறார். ஹெலிகாப்டரில் பயணித்த மற்ற இருவரைத் தேடிவருகிறார்கள். 57 வயதான கேலேவிடம் இது பற்றிச் சிலர் கேட்டபோது, ‘‘நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை!’’ என்று கூறியிருக்கிறார்.