Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

தமிழ்நாட்டின் சேவல் சண்டையைப்போல, துருக்கியில் ஒட்டகச் சண்டை நடத்தப்படுவது வழக்கம்.

நியூஸ் எம்பஸி

தமிழ்நாட்டின் சேவல் சண்டையைப்போல, துருக்கியில் ஒட்டகச் சண்டை நடத்தப்படுவது வழக்கம்.

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

2020, மே மாதம் பிரிட்டனில் கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட தகவலை சமீபத்தில் அவரின் முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார். இதனால் பிரிட்டன் முழுவதும் பிரமதருக்கு எதிரான மனநிலை உருவாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும், அது எடுபடவில்லை. ஜான்சனின் சொந்தக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினரே, ``ஜான்சன், பிரிட்டன் மக்களுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், விருந்தில் கலந்துகொண்டதையும் மறைத்திருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும்’’ என்று நாடாளுமன்றத்தில் கொந்தளித்திருக்கிறார்கள். ஒருவேளை ஜான்சனின் பதவி பறிபோனால், தற்போதைய நிதியமைச்சராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், பிரதமராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது!

நியூஸ் எம்பஸி

1970-களில் மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானின், டார்வெசா பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இயற்கை எரிவாயு கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட வட்ட வடிவிலான பள்ளத்தில் மீத்தேன் வாயு இருந்தது. அது பரவாமல் இருப்பதற்காக அந்தப் பள்ளத்தில் தீ வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அணையாமல் எரிந்துவரும் அந்தப் பகுதியை `நரகத்தின் வாசல்’ என்றழைக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் பிரபல சுற்றுலாத்தலமாகவும் மாறிப்போன இந்தப் பள்ளத்தை மூட சமீபத்தில் துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது. ``டார்வெசா பகுதியில் இயற்கை எரிவாயு குறைந்துவருகிறது. இயற்கை எரிவாயு வீணாவதைத் தடுத்து, அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காகவே நரகத்தின் வாசலை மூடப்போகிறோம்’’ என்று துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பென்குலி விளக்கம் அளித்திருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

தமிழ்நாட்டின் சேவல் சண்டையைப்போல, துருக்கியில் ஒட்டகச் சண்டை நடத்தப்படுவது வழக்கம். ஜனவரி 16 அன்று துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் நடைபெற்ற 40-வது சர்வதேச ஒட்டகச் சண்டையில், அலங்கரிக்கப்பட்ட 152 ஒட்டகங்கள் கலந்துகொண்டு சண்டையிட்ட காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே, ``இந்தப் போட்டியின்போது ஒட்டகங்கள் துன்புறுத்தப்படுகின்றன; இந்தப் போட்டியைத் தடைசெய்ய வேண்டும்’’ என்று துருக்கியின் விலங்குகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். ஆனால், போட்டியை நடத்துபவர்களோ, ``இது சண்டையல்ல; மல்யுத்தம். மனிதர்கள் எப்படி மல்யுத்தம் செய்கிறார்களோ அதைப்போலவே ஒட்டகங்களும் செய்கின்றன. இந்தப் போட்டியின்போது ஒட்டகங்களுக்குக் காயம் ஏற்படாமலிருக்க, பாதுகாப்புக் கவசங்களை அவற்றுக்கு அணிவிக்கிறோம். அவற்றை நாங்கள் துன்புறுத்தவில்லை’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism