Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துவந்தார் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி

நியூஸ் எம்பஸி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துவந்தார் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

மாட்டிக்கொண்ட பைடன்!

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்த நிகழ்வு முடிந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியேறிக்கொண்டிருந்த சமயத்தில், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த நிருபர், ``அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் பற்றி உங்கள் கருத்து?’’ என்று பைடனை நோக்கிக் கேள்வியெழுப்பினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததால், மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என நினைத்த பைடன், ``பணவீக்கமா... நீ ஒரு முட்டாள்’’ என்று சொன்னதோடு, தகாத வார்த்தை ஒன்றையும் சொல்லி நிருபரைத் திட்டினார். ஆனால், மைக் ஆஃப் செய்யப்படவில்லை என்பதால், பைடன் பேசியது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த நிருபரைத் தொலைபேசியில் அழைத்து, ``தனிப்பட்ட முறையில் நான் எதுவும் கூறவில்லை நண்பரே!’’ என்று பைடன் வருத்தம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன!

நியூஸ் எம்பஸி

விமர்சனம்... சிறை... பயங்கரவாதி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துவந்தார் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி. கடந்த 2020-ம் ஆண்டு, விமான நிலையத்தில் நாவல்னி குடித்த டீயில் விஷம் கலக்கப்பட்டது. தீவிர சிகிச்சையின் பின்னரே உயிர்பிழைத்தார் நாவல்னி. இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், ரஷ்ய அதிபர் புதின் இருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில், பழைய பண மோசடி வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்ட நாவல்னிக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர், தேர்தலில் போட்டியிடவும் தடைவிதிக்கப்பட்டது. `இந்தச் செயல்கள் அனைத்துக்கும் புதின்தான் காரணம்’ என அமெரிக்காவின் உளவு அமைப்புகள் குற்றம்சாட்டின. நாவல்னியின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், சிறையில் இருந்துவரும் நாவல்னியையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் பயங்கரவாதிகளாக அறிவித்திருக்கிறது ரஷ்ய அரசு. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன!

நியூஸ் எம்பஸி

145 பத்திரிகையாளர்கள் கொலை!

மெக்ஸிகோவில் கடந்த ஜனவரி 23-ம் தேதி அன்று, காரில் சென்றுகொண்டிருந்த மூத்த பெண் பத்திரிகையாளர் மல்டோனாடோவை (Maldonado) மர்ம நபர்கள் சிலர் சுட்டுக் கொன்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபரிடம் தெரிவித்திருந்தார் மல்டோனாடோ. இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சில தினங்களுக்கு முன்பாகத்தான், மெக்ஸிகோவில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மல்டோனாடோவின் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருக்கும் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் (Andres Manuel Lopez), ``கடந்த 21 ஆண்டுகளில் 145 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்’’ என உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையில், தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் கொலைகளைக் கண்டித்தும், தங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் மெக்ஸிகோ பத்திரிகையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism