Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது

நியூஸ் எம்பஸி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

வடகொரியாவின் ‘ஏவுகணை’ அடாவடி!

உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி, அடிக்கடி ஏவுகணைச் சோதனைகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது வடகொரியா. அதிலும் குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் ஏழு ஏவுகணைகளைச் சோதனைகளைச் செய்திருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. ``ஜனவரி 30-ம் தேதி அன்று, கிழக்குக் கடற்பகுதியில் ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்திருக்கிறது வடகொரியா. இந்த ஏவுகணை 2,000 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியது. அரை மணி நேரத்தில் 800 கி.மீ தூரம் செல்லக்கூடியது. ஜப்பான் கடல் பகுதியில் இந்த ஏவுகணை கடைசியாக விழுந்தது’’ என்று கூறியிருக்கிறது தென்கொரியா. `2017-க்கு பின்னர், வடகொரியா சோதனை செய்யும் சக்திவாய்ந்த ஏவுகணை இதுதான்’ என்று தென்கொரிய, ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. அணு ஆயுதங்கள், ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ள வடகொரியாவுக்கு, ஐ.நா சபை தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

நியூஸ் எம்பஸி

துபாயில் பறக்கும் படகு!

`தி ஜெட் ஜீரோ எமிஷன்’ என்கிற சுவிட்சர்லாந்து நிறுவனம், ஜெனித் மெரைன் (Zenith marine) என்கிற ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் படகு ஒன்றை வடிவமைத்திருக்கிறது. `தி ஜெட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த சொகுசுப் படகு, ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்குகிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு இதுதான். இதில், ஒரே நேரத்தில் 12 பேர் வரை பயணிக்கலாம். தண்ணீருக்கு மேல் 80 செ.மீ உயரத்தில் பறக்கும் இந்தப் படகு, மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லுமாம். ‘‘ஹைட்ரஜனில் இயங்குவதால் இந்தப் பறக்கும் படகிலிருந்து புகை உள்ளிட்ட எந்தவொரு உமிழ்வும் வெளியேறாது. பறக்கும்போது சத்தமும் வராது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தப் பறக்கும் படகை, வெகு விரைவில் நீங்கள் துபாய் கடற்கரைகளில் காணலாம்’’ என்று கூறியிருக்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்!

நியூஸ் எம்பஸி

அனைவருக்கும் தூக்குத் தண்டனை!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு, அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர் குழுக்களுக்குமிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை குறித்து விசாரிக்க, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஷார்ப், ஸ்வீடனைச் சேர்ந்த சயிதா ஆகிய இரண்டு அதிகாரிகளை நியமித்தது ஐ.நா சபை. விசாரணை மேற்கொள்வதற்காக காங்கோ சென்ற இந்த இருவரையும் கடத்திச் சென்று, கொலை செய்தன கிளர்ச்சிப் படைகள். உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில், 54 பேர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தது காங்கோ. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில், கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட 54 பேரில் 51 பேர் குற்றவாளிகள் என்று உறுதிசெய்து, அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்கிறது காங்கோ நீதிமன்றம். இதில், 22 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை விரைந்து கைதுசெய்ய காவல்துறைக்கு காங்கோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism