Published:Updated:

நியூஸ் எம்பஸி

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் அமைந்திருக்கும் வேளாண் உற்பத்திகளைத் தரம் பிரிக்கும் அரசு அலுவலகத்தில், போடர் (Podder) என்ற மோப்ப நாய் பணிபுரிந்துவந்தது.

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் அமைந்திருக்கும் வேளாண் உற்பத்திகளைத் தரம் பிரிக்கும் அரசு அலுவலகத்தில், போடர் (Podder) என்ற மோப்ப நாய் பணிபுரிந்துவந்தது.

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை
நியூஸ் எம்பஸி

ஆப்கானிஸ்தான், தாலிபன்கள் கைகளுக்குச் சென்றதிலிருந்தே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்களை அமல்படுத்திவருகிறது தாலிபன் அரசு. அந்த வகையில் `ஆப்கன் நாட்டுப் பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது’ என்ற விதியை சமீபத்தில் அமல்படுத்தினார்கள் தாலிபன்கள். அதேபோல, `தாடி வைக்காத ஆண்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரியக் கூடாது’ என்ற விநோத விதியையும் தற்போது அறிவித்திருக்கிறது தாலிபன் அரசு. மேலும், `மேற்கத்திய உடைகள் அணியக் கூடாது’ என்றும், `பாரம்பர்ய உடைகளில்தான் அலுவலகங்களுக்கு வர வேண்டும்’ என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தாடியில்லாமல் அரசு அலுவலகங்களுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த உத்தரவுக்கு தாலிபன் படையைச் சேர்ந்தவர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துவருவது அங்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

நியூஸ் எம்பஸி

இலங்கை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் இலங்கையின் இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மருந்து, மாத்திரைகளுக்குக்கூட அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் இல்லாத காரணத்தால், பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுகிற அவலங்கள் அரங்கேறிவருகின்றன. ஏற்கெனவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை மின்வெட்டு அமலிலிருந்தது. இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடும் அதிகரித்திருப்பதால், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்திருக்கிறது. எனவே இலங்கையில், மின்வெட்டு நேரம் நாளொன்றுக்கு 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பல்வேறு தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடுகளால் இன்னல்களைச் சந்தித்துவரும் இலங்கை மக்கள், 10 மணி நேர மின்வெட்டால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் அமைந்திருக்கும் வேளாண் உற்பத்திகளைத் தரம் பிரிக்கும் அரசு அலுவலகத்தில், போடர் (Podder) என்ற மோப்ப நாய் பணிபுரிந்துவந்தது. நோய்கள், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட விளை பொருள்கள், தரமற்ற பயிர்கள், அளவுக்கு மீறிய பூச்சிக்கொல்லி பயன்பாடு உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்க இந்த போடர் நாய் பயன்படுத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்துவந்த போடர், 728 சம்பவங்களில் பயிர்களின் குறைகளைக் கண்டறிந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக போடருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவந்ததை அடுத்து, அதற்கு ஓய்வளிக்க அங்குள்ள அதிகாரிகள் முடிவுசெய்தனர். இதையடுத்து, போடருக்கு விமரிசையான பிரியாவிடை நிகழ்வு நடத்தப் பட்டது. சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் போடருக்கு சேவை விருதும் வழங்கப்பட்டது. கண்ணீர்மல்க போடரைக் காப்பகத்துக்கு வழியனுப்பிய அதிகாரிகள், ``இனி போடரை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். அவன் சிறப்பான வேலைக்காரன். சிறந்த மோப்பத்திறன் கொண்டவன்’’ என்றிருக்கிறார்கள்.