Published:Updated:

நியூஸ் எம்பஸி

எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்

இரண்டாம் உலகப்போரில், தனது நாஜி கொள்கைகளை முன்வைத்து ஜெர்மனியிலுள்ள 60 லட்சம் யூதர்களைக் கொன்றுகுவித்தார் ஹிட்லர்.

நியூஸ் எம்பஸி

இரண்டாம் உலகப்போரில், தனது நாஜி கொள்கைகளை முன்வைத்து ஜெர்மனியிலுள்ள 60 லட்சம் யூதர்களைக் கொன்றுகுவித்தார் ஹிட்லர்.

Published:Updated:
எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்
நியூஸ் எம்பஸி

“குடும்பம் நடத்தச் சிறந்த ஒருவர் தேவை!”

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கைல் கார்டிக்கு, 47 குழந்தைகள் இருக்கின்றனர். வரும் மாதங்களில் மேலும் 10 குழந்தைகளுக்குத் தந்தையாகவிருக்கிறார். இத்தனை குழந்தைகள் இருந்தும், வாழ்க்கைத்துணை கிடைக்காமல் திண்டாடுகிறார் கார்டி. அதிசயமாக இருக்கிறதா... இந்த 47 குழந்தைகளும் அவர் விந்தணு தானம் செய்ததன் மூலம் பிறந்த குழந்தைகள். இது குறித்துப் பேசிய கார்டி, ``என் விருப்பத்தோடுதான் இந்த விந்தணு தானத்தைச் செய்துவருகிறேன். பல பெண்கள் என்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு விந்தணு தானம் பற்றி விசாரிக்கிறார்கள். ஆனால், யாரும் என்னுடன் டேட்டிங் வருவதற்குத் தயாராக இல்லை. எனக்கு வாழ்க்கைத்துணையாக வரவும் யாரும் விருப்பப்படவில்லை. என் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு என்னுடன் குடும்பத்தைத் தொடங்க சிறந்த ஒருவர் தேவை” என்றிருக்கிறார் வருத்தத்துடன். அமெரிக்கா மட்டுமின்றி லண்டன், ஸ்காட்லாந்து, ஜெர்மனி என உலக நாடுகள் பலவற்றிலும் விந்தணு தானம் செய்துவரும் கார்டிக்கு, விரைவில் நல்ல துணை கிடைப்பார் என்று நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்!

நியூஸ் எம்பஸி

“அபத்தமானவை, ஆபத்தானவை, கண்டனத்துக்குரியவை!”

இரண்டாம் உலகப்போரில், தனது நாஜி கொள்கைகளை முன்வைத்து ஜெர்மனியிலுள்ள 60 லட்சம் யூதர்களைக் கொன்றுகுவித்தார் ஹிட்லர். தற்போது, உக்ரைனில் நாஜி கோட்பாடுகள் தலைதூக்குவதாக அங்கு போரைத் தொடங்கிய சில தினங்களில் தெரிவித்திருந்தது ரஷ்யா. ஆனால், ஹிட்லரின் நாஜி கோட்பாடுகளால் பாதிக்கப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இது குறித்து இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``ஹிட்லரும் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். மிகப்பெரிய யூத எதிர்ப்பாளர்கள், யூதர்களாகத்தான் இருப்பார்கள் என்று அறிவார்ந்த யூத மக்கள் சொல்கிறார்கள்’’ என்று கூறினார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், ``யூதர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களை யூதர்களே செய்ததுபோலக் குற்றம்சாட்டுவது மிகப்பெரிய பொய். லாவ்ரோவ் பேசியவை அபத்தமானவை, ஆபத்தானவை, கண்டனத்துக்குரியவை’’ என்று கொந்தளித்திருக்கிறார்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

“ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்!”

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினார். இந்த நிறுவனம் எலான் மஸ்க் கைக்குச் சென்றதையடுத்து, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று செய்திகள் வெளியாகின. அதில் முதலாவதாக, ``சாதாரண பயனாளர்களுக்கு ட்விட்டர் எப்போதுமே இலவசம்தான். ஆனால், வணிகரீதியாகவும், அரசு சார்ந்தும் ட்விட்டரைப் பயன்படுத்துபவர்களிடம் சிறிய கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism