Published:Updated:

நியூஸ் எம்பஸி

புதின்
பிரீமியம் ஸ்டோரி
புதின்

இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
புதின்
பிரீமியம் ஸ்டோரி
புதின்
நியூஸ் எம்பஸி

பெண் கல்வி சர்ச்சை!

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், பெண்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ``பெண்கள் கல்வியைத் தொடருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பாக ஆலோசனை செய்த பின்னர் பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும்’’ என்று அறிவித்தது தாலிபன் அரசு. இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீனிடம், ``உங்கள் மகள்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ``நிச்சயமாக. அவர்கள் ஹிஜாபைச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதால் கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்கள்’’ என்றார். இதையடுத்து, `நாடு முழுவதும் பெண் கல்வி தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இவரின் மகள்களுக்கு மட்டும் தனியாகப் பள்ளி நடத்தப்படுகிறதா?’ என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. கூடவே, `ஆப்கனில் ஹிஜாப் அணிந்தாலும், 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை’ என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன!

நியூஸ் எம்பஸி

ரஷ்யாவில் ஆட்சி மாற்றம்?!

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த உக்ரைன் ராணுவத் தளபதி கிரிலோ, ``இந்தப் போரில், வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு முக்கியத் திருப்பம் நிகழும். இந்த ஆண்டே போர் நிறைவடையும். இந்தப் போரில் ரஷ்யா தோற்கும் பட்சத்தில், புதின் அதிபர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார். ரஷ்யாவில் புதிய தலைமைக்கான சூழல் உருவாகும். அதற்கான வேலைகள் இப்போதே ரஷ்யாவில் தொடங்கிவிட்டன. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிக மோசமான நிலைமையில் இருக்கிறார் புதின். எனவே, ஆட்சி மாற்றம் என்பதைத் தடுக்கவே முடியாது. ரஷ்யா பெரும் சக்தி என்ற பிம்பம், இந்தப் போரின் இறுதியில் உடையும்’’ என்று பேசி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்!

நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

`வழுக்கைத்தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றமே!’

இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த ஊழியர், இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், ``எனது வழுக்கைத்தலையைச் சுட்டிக்காட்டி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் அடிக்கடி என்னை கேலி செய்துவந்தார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள் ``பெண்களின் உடல் பாகங்கள் குறித்து கேலி செய்வது எப்படிப் பாலியல் குற்றமோ, அதுபோலத்தான் ஆண்களின் உடலுருவம், பாகங்கள் குறித்து கேலி செய்வதும். எனவே, நிறுவனத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism