Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

இன்னும் சில நாள்களில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கும் ரணில், அதிரடியாக வரிகளை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்

நியூஸ் எம்பஸி

இன்னும் சில நாள்களில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கும் ரணில், அதிரடியாக வரிகளை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

“பாகிஸ்தானியரைப்போல இம்ரான் பேசவில்லை!”

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப். இதையடுத்து, தொடர்ந்து ஷெரீப் அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார் இம்ரான் கான். அந்த வகையில், மூன்று நாள்களுக்கு முன்பு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டமைப்பில் பல பிரச்னைகள் இருக்கின்றன. எனவே, நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், நாடு மோசமான அழிவைச் சந்திக்கும். குறிப்பாக, நாட்டின் ராணுவம்தான் முதலில் பாதிக்கப்படும். இதனால், பாகிஸ்தான் மூன்றாகப் பிரியும் நிலை உருவாகும்’’ என்று பேசியிருந்தார். இம்ரானின் கருத்துக்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஆசிஃப் அலி, ``எந்தவொரு பாகிஸ்தானியரும், நமது நாடு பிரிந்துவிடும் எனப் பேச மாட்டார்கள். ஓர் உண்மையான பாகிஸ்தானியரைப்போல இம்ரான் பேசவில்லை’’ என்று கூறியிருக்கிறார்!

நியூஸ் எம்பஸி

அவதூறுக்கு 15 மில்லியன் டாலர் இழப்பீடு!

`பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் `ஜேக் ஸ்பாரோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் ஜானி டெப். இவர், 2015-ல் தன்னைவிட 25 வயது குறைந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்டை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 18 மாதங்களில் இருவரும் விவாகரத்து பெற்று, பிரிந்தனர். 2018-ல் ஆம்பர், `வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், ஜானி டெப்பின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது துன்புறுத்தல்களைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தார். இதனால் ஹாலிவுட்டில், ஜானி டெப் கட்டியெழுப்பியிருந்த சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. படங்கள் பலவும் அவர் கையைவிட்டுப் போயின. இதையடுத்து, அவதூறு பரப்பியதாக ஆம்பர் மீது நஷ்டஈடு வழக்கு ஒன்றைத் தொடுத்தார் ஜானி. ஜூன் 2-ம் தேதி வெளியான இந்த வழக்கின் தீர்ப்பு, ஜானிக்குச் சாதகமாக அமைந்தது. ஆம்பர், 10 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையையும், 5 மில்லியன் டாலர் தண்டனைக்குரிய இழப்பீட்டுத் தொகையையும் ஜானிக்கு வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. `உண்மை வென்றது’ என்று ஜானி டெப்பின் ரசிகர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிவருகிறார்கள்!

நியூஸ் எம்பஸி

வரி உயர்வு மூலம் 1,395 கோடி ரூபாய் வருமானம்!

கடந்த மாதம், இலங்கையின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, தற்போது நாட்டின் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். இன்னும் சில நாள்களில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கும் ரணில், அதிரடியாக வரிகளை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி, மதிப்புக்கூட்டு வரி எட்டு சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், தொலைத்தொடர்பு வரி 11.25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கின் வரம்பு, 30 லட்சத்திலிருந்து (இலங்கை ரூபாயில்) 18 லட்சமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பெருநிறுவன வரி 24 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரானிக் பொருள்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரி உயர்வு மூலம், கூடுதலாக 1,395 கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமென்றும், இதன்மூலம் ஓரளவுக்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியுமென்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது இலங்கை அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism