Published:Updated:

நியூஸ் எம்பஸி!

நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அவசியம்தான். அதேசமயம் மனிதகுலத்தின் கொண்டாட்டம், மற்ற உயிரினங்களைப் பாதிப்பது கொடும் வேதனை

நியூஸ் எம்பஸி!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அவசியம்தான். அதேசமயம் மனிதகுலத்தின் கொண்டாட்டம், மற்ற உயிரினங்களைப் பாதிப்பது கொடும் வேதனை

Published:Updated:
நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி!
நியூஸ் எம்பஸி!

ஸ்பெயின் நாட்டில், பிரபல பென்ஸ் கார் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், சினிமா வில்லன்போலப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் பணியிலிருந்து நீக்கப்பட்ட அந்த ஊழியர், சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து, புல்டோஸருடன் பென்ஸ் நிறுவனத்தில் புது கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். அவரைத் தடுத்து நிறுத்த முடியாமல் காவலர்கள் தவிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த புதிய எலெக்ட்ரிக் வேன்களை புல்டோஸர் உதவியுடன் தூக்கி வீசியெறிய ஆரம்பித்திருக்கிறார். ஒரு பாதுகாவலர் எச்சரிப்பதற்காக வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட பிறகே, பயந்து நிறுத்தியிருக்கிறார். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் அவர், அந்த புல்டோஸரையும் ஒரு கட்டுமானப் பகுதியிலிருந்து திருடி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதைத் திருடி ஓட்டிக்கொண்டுவந்த சுமார் 20 கி.மீ பயணத்திலும், பல வாகனங்களை அவர் சேதப்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவத்தில், மொத்தமாக இவர் சேதப்படுத்திய 69 வாகனங்களின் மதிப்பு, இந்திய அளவில் சுமார் 50 கோடியை நெருங்குகிறது! #காஸ்ட்லி ரிவெஞ்ச் பாஸ்!

நியூஸ் எம்பஸி!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அவசியம்தான். அதேசமயம் மனிதகுலத்தின் கொண்டாட்டம், மற்ற உயிரினங்களைப் பாதிப்பது கொடும் வேதனை. இத்தாலியின் ரோம் நகரிலுள்ள ஒரு வீதியில், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னிரவில், நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துகிடக்கும் காட்சி வெளியாகி, அனைவரது மனதையும் உலுக்கியிருக்கிறது.

நியூஸ் எம்பஸி!

சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான OIPA, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வெடித்த பட்டாசுகளே இந்தப் பறவைகளின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கிறது. ``திடீர் சத்தத்தால் மிரண்டுபோன பறவைகள், ஒரே நேரத்தில் பறந்து ஒன்றோடு ஒன்று மோதியும், கட்டடங்கள், எலெக்ட்ரிக் ஒயர்கள்மீது மோதியும் இந்தக் கொடுமை நடந்திருக்கலாம். நினைவில்கொள்ளுங்கள், பறவைகளுக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படும்” என்கிறார் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் லோரெடானா டிக்லியோ (Loredana Diglio) #இவ்வுலகம் அனைவருக்குமானது மக்களே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாகிஸ்தானின் டெர்ரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள, பழைமையான இந்து மதக் கோயிலைப் புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சியொன்றைச் சேர்ந்த சிலர், அந்தக் கோயிலைச் சேதப்படுத்தியதோடு, தீயும் வைத்தனர். இந்தச் சம்பவத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், உலெமா-ஏ-இஸ்லாம் என்ற அந்தக் கட்சியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மாகாண அரசாங்கமே, இந்தக் கோயிலை மீண்டும் தனது செலவில் கட்டித்தரும் என அறிவித்திருக்கிறது! #நல்லிணக்கம்!