சின்னத்திரையிலிருந்து ஒதுங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகச் சொல்லியிருந்த ராதிகா சரத்குமார், ‘சித்தி 2’ சீரியலில் நடிப்பதிலிருந்து விலகியிருக்கிறார். கால் நூற்றாண்டுக்கால சீரியல் நடிப்புக்கு விடை கொடுத்தது, அரசியல் பயணம், தேர்தல் கூட்டணி, கமலின் அரசியல் என்ட்ரி, சசிகலாவின் வருகை என்று ராதிகாவிடம் பேச நிறைய இருக்கின்றன.

``சீரியலிலிருந்து வெளியேறியதற்கு ‘முழுநேர அரசியல்’ங்கிற ஒரே காரணம்தானா? வேறு காரணங்கள் இருக்கா?’’

“தமிழக அரசியல்ல நான் 1989-ல் இருந்தே இருக்கேன். என் கணவர் கட்சியிலும் பணிகள் செய்தேன். ஆனால், அதை முழுமையாக செய்தேனா என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதைச் சரிசெய்யத்தான் இப்போ களமிறங்கியிருக்கேன்.

இரண்டாவது காரணம், கொஞ்ச காலமாகவே சீரியல்ல ஒரு வட்டத்துக்குள் மாட்டிக்கிட்ட மாதிரி உணர்வு. வெளிப்படையா சொல்லணும்னா ‘வாணி ராணி’ சீரியலோடு சீரியல் நடிப்புல எனக்கிருந்த திருப்தி முடிஞ்சிடுச்சு. ஏன்னா, ‘வாணி ராணி’க்குப் பிறகு தயாரிப்பு, கதை, கதையின் போக்கைத் தீர்மானிக்கிற சுதந்திரம்னு சீரியல்ல எல்லாமே சேனல் வசமாகிடுச்சு. திருப்தி இல்லாம ஒரு வேலையை எத்தனை நாள் தொடர்ந்து செய்ய முடியும்?

இன்னொருபுறம் சினிமா, வெப்சீரிஸ்னு வர்ற வாய்ப்புகளையும் சீரியல்ல இருக்கிறதாலேயே பண்ண முடியாத ஒரு சூழல் இருந்திச்சு. எல்லாத்தையும் மனசுல வச்சுத்தான் இந்த முடிவு. ‘ராடான்’ நிறுவனத்தை இன்னும் வலுப்படுத்தணும். சீரியல் தயாரிப்பு, சினிமா, வெப்சீரிஸ்னு தொய்வு இல்லாம பல வேலைகள் செய்யணும். அதுக்கு என்னுடைய நேரமும் கொஞ்சம் தேவைப்படுது.”

``2021 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சீரியல்ல நடிக்க வாய்ப்பிருக்கா?’’

‘‘என் வாழ்க்கையில எதுவுமே நான் திட்டமிட்டு நடந்ததில்லை. நடிக்க வருவேன்னு நினைச்சுப்பார்த்ததே இல்லை; வந்தேன். அதேபோல ஃபீல்டுல நிலைச்சு நிப்பேனான்னும் தெரியாத மனநிலையில இருந்திருக்கேன். ஆனா என்னோடு வந்தவங்க மட்டுமல்லாம, பின்னாடி வந்தவங்களையே இன்னைக்குப் பார்க்க முடியாத சூழல்ல நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு இப்ப வரைக்கும் கிடைச்சிட்டே தான் இருக்கு. அதேபோலத்தான் இப்ப எடுத்திருக்கிற முடிவுலயும் மாற்றம் இருக்கு மான்னா காலம்தான் தீர்மானிக்கணும். ஆனா இது ஒரே நாள்ல எடுத்த முடிவில்லை.”

``சமத்துவ மக்கள் கட்சிக்காக தமிழ்நாடு முழுக்க ஒரு சுற்றுப் பிரசாரம் முடிச்சிட்டு வந்திருக்கீங்க. மக்கள் மனநிலை எப்படி இருக்கு?’’

“கொரோனாவால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டி ருக்காங்க. கொரோனா அவங்களை மனரீதியா, பொருளாதார ரீதியா முடக்கிப் போட்டிருக்கு. தங்களுடைய பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறாங்க. ஒரு விஷயத்தை மட்டும் என்னால உறுதியாச் சொல்ல முடியும். அது, பத்தாண்டு ஆட்சியில இருக்கிறபோதும் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லை.”

``பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை இங்க வலுவா இருக்கே... பா.ஜ.க அங்கம் வகிக்கிற கூட்டணி யிலிருந்து கொண்டு மக்களை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க?’’

“அ.தி.மு.க கூட்டணியில ச.ம.க இருக்கறதா முதலமைச்சரே சொல்லி யிருக்கார். மத்தபடி கூட்டணி இன்னும் உறுதியாகலை.பேச்சுவார்த்தைகள் போயிட் டிருக்கு. எல்லாம் முடிவடைஞ்ச பிறகு இதுபத்தி விரிவாப் பேசலாமே.”

``சசிகலா வருகை, அதன் பிறகு அ.தி.மு.க-வில் நீடிக்கும் குழப்பம் குறித்து...’’

“இன்னொரு கட்சியின் உள்கட்சி விவகாரத்துல நாம கருத்து சொல்றது முறையில்லை. அதனால இந்தக் கேள்வியை விட்டுடலாம்.”

``வரப்போகும் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல். ‘அரசியலில் வெற்றிடம்’கிற பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?’’

“ரியாலிட்டியை நாம ஏத்துக்கணும். கருணாநிதி, ஜெயலலிதா ரெண்டு பேரும் இப்போ இல்லை. ஆனா கோடிக்கணக்கான மக்கள் இருக்காங்க. அவங்களுக்குப் பிரச்னைகள் நிறைய இருக்கு. அதைத் தீர்க்கணுமே. அப்படித் தீர்த்து வைக்கிறவங்களை மக்களே தேர்ந்தெடுப் பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”

``கமலின் அரசியல் வருகை, ரஜினி வராதது குறித்து...’’

“கமலின் நடிப்பு, சிந்தனை எல்லாமே முற்போக்கானது. அதேபோல அரசியலையும் ஒரு கை பார்த்துடணும்னு அவர் ஆசைப்பட்டிருக்கார். அவருக்கு என் வாழ்த்துகள். ரஜினி சார்தான் வரலைன்னு சொல்லிட்டாரே, அதன்பிறகு இதுல நான் சொல்ல என்ன இருக்கு?”