சில வருட இடைவெளிக்குப் பிறகு சேனல் மாறி மீண்டும் சீரியலுக்குள் வந்திருக்கிற அமித் பார்கவை ஷூட்டிங் ஸ்பாட் லஞ்ச் பிரேக்கில் சந்தித்தேன்.

டிவி ஏரியா முழுக்க ‘அமித் மாமனார் கேரக்டரில் நடிக்கிறார்’னு பேசிக்கறாங்களே, நிஜமா?

‘‘ ‘திருமதி ஹிட்லர்’ சீரியல் புரொமோ வெளியானதுல இருந்து எங்கிட்டயும் இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்டுட்டாங்க. சிலர் ‘என்னங்க, வயசா ஆகிடுச்சு? அதுக்குள்ள இந்த மாதிரி கேரக்டருக்கு ஏன் சம்மதிச்சீங்க’ன்னு சீரியஸாவே கேட்டாங்க. சீரியல்னா ஒரு ட்விஸ்ட் இருக்கணுமில்லையா, இந்த சீரியல்ல அந்த மாமனார்ங்கிற வார்த்தைக்குப் பின்னாடிதான் அந்த ட்விஸ்ட் இருக்கு. அதனால அதை இப்பவே உடைச்சிட வேண்டாமே!’’

விளம்பரப் படங்கள், சீரியல்னு நடிச்சுட்டு சினிமாப் பக்கம் போனீங்க. மறுபடியும் சீரியலுக்கே திரும்பியது பத்தி...

‘‘சினிமாவுல சில படங்கள் பண்ணினேன். விஜய் சாருக்கு வில்லனா பண்ணணும்கிறதெல்லாம் என் ஆசையாத்தான் இருக்கு. ஆனா நாம நினைக்கறதெல்லாம் நடக்குதா? யாருமே எதிர்பார்க்காத கோவிட் வந்த பிறகு சினிமாவைக் காட்டிலும் சீரியல் பாதுகாப்பா இருக்கும்னு தோணுது. அதனால கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கலாம்னுதான். பொண்ணு பிறந்திருக்கால்ல, அவளுக்கும் சேர்த்து வைக்கணுமில்லையா?’’

பொண்ணு எப்படி இருக்காங்க?

‘‘பயங்கர சேட்டை. ஒன்றரை வயசு ஆகுது. வீட்டுக்குள் ஒரு இடம் விடாம ஓடிட்டே இருக்கா. அவ பின்னாடி ஓடவே எனக்கு நேரம் சரியா இருக்கு. லாக் டௌன் முழுக்க அவ பின்னாடியேதான் ஓடிட்டிருந்தேன்.’’

பிக் பாஸா வாய்ஸ் தந்த அனுபவம் உங்களுக்கு இருக்கில்லையா?

‘‘கன்னட பிக் பாஸ்ல ஒரு சீசன்ல வாய்ஸ் தந்தேன். பிக் பாஸா ஆகணும்னா வாய்ஸ் மட்டுமே தகுதி இல்ல. பொறுமை ரொம்பவே வேணும். அந்த வீட்டுக்குள்ள என்னெல்லாம் நடக்குதுன்னு மணிக்கணக்குல கண் முழிச்சுப் பார்த்துட்டே இருக்கணும். ஆனாலும் அந்த நேரத்துல இண்ட்ரஸ்டிங்கா நிறைய விஷயங்கள் நடந்துச்சு.’’