Published:Updated:

"எண்ணத்தைக் கடத்துவதே மொழிபெயர்ப்பு!"

ஜெயஶ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயஶ்ரீ

நாவல், சிறுகதை, பயண நூல், கவிதை என இதுவரை 12 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

"எண்ணத்தைக் கடத்துவதே மொழிபெயர்ப்பு!"

நாவல், சிறுகதை, பயண நூல், கவிதை என இதுவரை 12 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

Published:Updated:
ஜெயஶ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
ஜெயஶ்ரீ

2019-ம் ஆண்டின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நூலுக்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“சங்க கால பாணர் கூட்டத்தின் கதைதான் `நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல். பாரியின் கொலையை ஒரு கண்ணியாக வைத்து அதைச் சுற்றிக் கதை நிகழும். தமிழ் இலக்கியத்தின் சாறு முழுவதும் அந்த நூலில் திளைத்து நிற்கும்.’’ தான் மொழிபெயர்த்த நாவல் பற்றிப் பெருமை பொங்கப் பேசுகிறார் ஜெயஶ்ரீ. நாவல், சிறுகதை, பயண நூல், கவிதை என இதுவரை 12 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து...

"எண்ணத்தைக் கடத்துவதே மொழிபெயர்ப்பு!"

“விருது அறிவிக்கப்பட்டவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என் மனதுக்கு நெருக்கமான, எனக்குப் பிடித்த ஒரு பணியாக அதைச் செய்கிறேன். அதற்கு விருதும் பாராட்டும் கிடைப்ப தென்பது கூடுதல் மகிழ்ச்சி.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மொழிபெயர்ப்பின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?”

“சிறுவயதில், அம்மா படித்துவிட்டுக் கொடுக்கும் புத்தகங்களை நானும் தங்கை ஷைலஜாவும் வாசிப்போம். அப்போது வாசிப்புதான் எங்களின் ஒரே பொழுதுபோக்கு. கல்லூரி படிக்கும் காலத்தில் மலையாளம், தமிழ் என இருமொழி இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது. புனைவுகளை எழுதத் தொடங்கும் முன் மலையாளத்திலுள்ள நல்ல கதைகளைத் தமிழில் மொழிபெயர்க் கலாம் எனத் தொடங்கினேன். பால் சக்காரியாவின் கதைகளை முதலில் மொழிபெயர்த்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சந்தோஷ் ஏச்சிக்கானம். ஏ.அய்யப்பன், சியாமளா சசிக்குமாரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.”

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

“நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை என்ன காரணத்திற்காக மொழிபெயர்க்கத் தேர்வு செய்தீர்கள்?”

“ஜெயமோகன் என்னை அழைத்து ‘என் நண்பர் மனோஜ் எழுதியிருக்கிற நாவல் ஒன்று நன்றாக இருக்கிறது. சங்க காலம் சார்ந்த கதை. அதை மொழிபெயர்க்கலாம்’ என்றார். அந்த நாவலைப் படித்தபோது தமிழர்களின் கதையை மலையாளத்தில் படிப்பது போல இருந்தது. அவசியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல் எனத் தோன்றியது. மலையாளத்தில் வெளியாகி ஆறு, ஏழு மாத இடை வெளிக்குள் மொழிபெயர்ப்புப் பணியை முடித்து வெளியிட்டோம். பெரும் வாசகப் பரப்பைச் சென்று சேர்ந்தது ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்.’ ’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மொழிபெயர்ப்புகள் அதன் மூலநூலின் கலையம்சத்தைச் சிதைக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளைப் பலர் முன்வைப்பதுண்டு. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மொழிபெயர்ப்பாளரின் பணி சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பதன்று. எழுத்தாளர் எதை வாசகரிடத்தில் கொண்டுசேர்க்க விரும்பினாரோ அதை உள்வாங்கிக் கொண்டு செய்ய வேண்டும். எழுத்தாளர் சொல்லாததைத் திணிப்பதோ, எழுதியதை வேண்டாமெனத் தவிர்ப்பதோ முறையில்லை. வேற்றுமொழிக் கதையையும் காட்சிப் பரப்பையும் நம் மொழியின் வழியே வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதும், மூல எழுத்தாளரின் எண்ணத்தைக் கடத்துவதும் மட்டுமே மொழிபெயர்ப்பாளரின் பணி.”

“நேரடியாக எழுதப்படும் நாவல், சிறுகதைகளுக்கு நிறைய வாசகர்களும் அங்கீகாரமும் கிடைப்பதுண்டு. மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாத்தியப்படுகிறதா?”

“நேரடி நாவல்களை மட்டும்தான் படிப்பேன். மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பதில்லை எனப் பலர் என்னிடமே கூறியிருக்கிறார்கள். அதேபோல் நான் மொழிபெயர்ப்பு மட்டும்தான் படிப்பேன். நேரடி நாவல்கள் படிப்பதில்லை எனக் கூறுபவர்களும் உண்டு. கடந்த 15 வருடங்களில் மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இருப்பதாக நான் பார்க்கிறேன். பிற மொழியிலிருந்து இவ்வாறு நூல்கள் இங்கு கொண்டு வரும்போது நம் இலக்கியத்துக்கு, மொழிக்கு அவை வலுச் சேர்ப்பதாகத்தான் இருந்திருக்கிறது.”

“அடுத்து மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் நூல்?”

“கே.வி.மோகன் குமார் என்ற மலையாள எழுத்தாளர் எழுதிய ‘உஷ்ண ராஷி’ என்ற நாவலை ஒரு வருடமாக மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நூறு வருட கம்யூனிச வரலாற்றைச் சமகாலத்திலிருந்து சொல்லும் நாவல் அது. முற்றிலும் புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism