Published:Updated:

சரியான மருத்துவக் காப்பீட்டு பாலிசி எது? - பதில் சொல்கிறார் எஸ்.பி.ஐ நிபுணர்...

INTERVIEW

பிரீமியம் ஸ்டோரி
காப்பீட்டுத் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும் எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரியுமான அமர் ஜோஷி, நாணயம் விகடன் இதழுக்கு அளித்த பேட்டி இனி...

கோவிட்-19-க்குப் பிறகு நம் நாட்டில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பது அதிகரித்திருக்கிறதா?

“கோவிட்-19, பொதுக் காப்பீட்டுத் துறையில் பல புதிய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. சிறப்பான செயல்பாடு, மற்றும் செலவுக் குறைப்பு போன்றவை முன்னுரிமையாக இருந்தன. தானியங்கி (automation) செயல்பாடுகள் இலக்காக மாறியது. பாலிசி விநியோகம், டிஜிட்டல் மற்றும் நேரில் எனக் கலவையாக இருக்கிறது. இதன்மூலம் கூடுதலாக பாலிசி விநியோகம் நடந்திருக்கிறது.

தொற்று நோயால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் எடுப்பது அதிகரித் திருக்கிறது. ஆயுள்சாரா காப்பீட்டு பாலிசிகளில் 2019-20-ம் நிதி ஆண்டில் முதல் காலாண்டில் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் பங்களிப்பு 26 சதவிகிதமாக இருந்தது. இது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 29.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மருத்துவக் காப்பீட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), ஆரோக்கிய சஞ்சீவனி மற்றும் கொரோனா கவாச், கொரோனா ரக் ஷக் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது அனைவராலும் பாராட்டுக்கு உரிய விஷயமாக அமைந்ததுடன், இந்த பாலிசிகளை எடுப்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.”

அனைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் கோவிட் 19 தொடர்பான செலவுகளை ஈடுசெய்கிறதா, இந்த விஷயத்தில் ஏதேனும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் உள்ளதா மற்றும் பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய விஷயம் ஏதாவது உள்ளதா?

“ஏற்கெனவே எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் கோவிட் -19 தொடர்பான மருத்துவமனை செலவுகளை ஈடுசெய்ய அனைத்து பொதுக் காப்பீட்டு மற்றும் ஆரோக்கிய காப்பீட்டு நிறுவனங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கட்டாயப்படுத்தியுள்ளது. தவிர, கோவிட் தொடர்பான இழப்பீடுகள் விரைந்து வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்குக் கட்டாயமாக மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான ஹெல்த் பாலிசிகள் எடுக்கப்பட்டிருக் கின்றன.”

புதிய இயல்பு நிலையில் (new normal) நீங்கள் மேற்கொண்டிருக்கும் டிஜிட்டல் புதுமைகள் என்னென்ன?

“கொரோனா பரவல் என்பது அனைத்துத் துறைகளையும் விரைவாக டிஜிட்டல் தளத்துக்கு மாறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது எங்கள் நிறுவனத்துக்கும் பொருந்தும்.பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலில் டிஜிட்டல் வழி செயல்பாடுகளுக்கு மாறியிருக்கிறோம். ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர் சேவைகளில் ஏற்பட்ட தாக்கத் தைக் குறைக்க டிஜிட்டல் மயமாக்கல் எங்களுக்குப் பெரிதும் உதவியது.

பாலிசிதாரர்களை நேருக்கு நேர் சந்தித்து பாலிசி எடுக்க வைப்பதற்குப் பதில், டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், இணைய தளங்கள் உள்ளிட்ட வழிகளில் டிஜிட்டல் முறையில் பாலிசிகள் விநியோகத் தைத் துரிதப்படுத்தத் திட்ட மிட்டுள்ளோம்.”

அமர் ஜோஷி
அமர் ஜோஷி

அடுத்த நிதி ஆண்டுக்கான உங்கள் வணிக எதிர்பார்ப்பு என்ன?

“தொற்றுநோயால் 2020-ம் ஆண்டு மந்தமாகத் தொடங்கியது. இருப்பினும், மருத்துவக் காப்பீட் டுக்கான தேவை திடீரென அதிகரித்தது. ஒட்டு மொத்தமாக, எங்கள் நிறுவனத்தில், 2020-21-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 17% வளர்ச்சி ஏற்பட்டது. தற்போது நாங்கள் புதிய உத்திகளை ஏற்படுத்தி யுள்ளோம். ஹெல்த் இன்ஷூ ரன்ஸ், ஹோம் இன்ஷூரன்ஸ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அதிக பேர் எடுப் பதற்காக வங்கிகள், ஏஜென்சி, நேரடி விற்பனை ஆகிய சேனல்களை விரிவுபடுத்தி யிருக்கிறோம். மேலும், அனைவரும் பாலிசி எடுக்கும் விதமாக பிரீமியம் குறைவான பாலிசி களையும் அறிமுகப்படுத்துகிறோம். கொரோனா பாதிப்பால் எங்கள் வணிகம் பாதிக்கப்படவில்லை. 2020-21-ம் ஆண்டின் அரையாண்டின் இரண்டாம் காலாண்டில் எங்கள் நிதி நிலை முடிவுகள் மேம்பட்டிருக்கின்றன.

கொரோனா பாதிப்பு ஆரோக்கிய காப்பீடு எடுப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. இதன் மூலம் காப்பீட்டு விழிப்புணர்வு அதிகரித்திருக் கிறது. இது டிஜிட்டல் தொடர்புகள் / பரிவர்த்தனைகள்மூலம் மக்களுக்கு அதிக வசதியையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி யுள்ளன. இந்தச் சூழல் நிறுவனங்கள் விரைவாக சிந்திக்கவும், புதுமைப் படுத்தவும், சிறப்பாகச் செயல்படவும் வழிவகுத்திருக்கிறது.”

மருத்துவக் காப்பீடு பாலிசிதாரர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

“எதிர்பாராத சூழ்நிலைகளில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதால் ஆரோக்கிய காப்பீடு அவசியம். தொற்றுநோய் முன்பைவிட மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது. இந்த அபாயங்களைப் போதுமான அளவு ஈடுசெய்ய விரிவான ஆரோக்கிய பாலிசிகளை (comprehensive health plans) போதிய கவரேஜுக்கு மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இன்று மருத்துவக் காப்பீட்டை வாங்க பல வழிகள் உள்ளன; மேலும், அதை எடுப்பது மிக சுலபமாகியிருக்கிறது. உங்கள் பாலிசியை அடிப்படை பாலிசி, டாப் அப் பாலிசி மற்றும் கிரிட்டிக்கல் பாலிசி எனச் சரியான கலவையை வைத்திருப்பது நல்லது. மேலும், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் உடல்நல ரிஸ்க்குகளை மதிப்பீடு செய்து, ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது புத்திசாலித்தனம்.’’

இவர் சொல்கிற மாதிரி நம்மிடம் பாலிசிகள் இருந்தால், நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை!

பிட்ஸ்

ந்தியா முழுக்க வீடுகளின் விற்பனை இந்த ஆண்டில் (2020) கடந்த ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. 2019-ல் சென்னையில் 11,820 வீடுகள் விற்பனை ஆனது; 2020-ல் 6,740 வீடுகளே விற்பனை ஆகியுள்ளது!

பிட்ஸ்

சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப் படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.99 என்ற அளவுக்குக் குறைந்து உள்ளது! கடந்த ஜூலையில் ஒரு யூனிட் சூரிய மின்சாரம் ரூ.2.36-க்கு விற்பனை ஆனது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு