Published:Updated:

“அரசியலில் சேவை எங்கே இருக்கிறது?”

ஷ்ரத்தானந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்ரத்தானந்த்

ஷ்ரத்தானந்த் விறுவிறு பேட்டி

“அரசியலில் சேவை எங்கே இருக்கிறது?”

ஷ்ரத்தானந்த் விறுவிறு பேட்டி

Published:Updated:
ஷ்ரத்தானந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்ரத்தானந்த்
சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ரெபெல் ஷ்ரத்தானந்த் என்பவர் பேசிய வீடியோ இந்திய அளவில் வைரல் ஆனது. மத்திய நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் அவர் எழுப்பியிருந்த கேள்வி களில் அத்தனை கூர்மை! ஷ்ரத்தானந்தை விகடன் வெப் டி.வி-க்காக நேர்காணல் செய்தார், பொருளாதார ஆலோகர் வ.நாகப்பன். ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை நீண்ட அந்த நேர்காணலில், அழுத்தமாகவும் ஆழமாகவும் தன் பதில்களை எடுத்து வைத்தார் ஷ்ரத்தானந்த். அந்தப் பேட்டியிலிருந்து ஒரு துளி இங்கே தமிழில் இடம்பெறுகிறது.முழுமையான பேட்டியைக் காண: https://www.youtube.com/watch?v=-ubC_5kpB5E இதைச் சொடுக்கவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஷ்ரத்தானந்த்
ஷ்ரத்தானந்த்

“மத்திய நிதியமைச்சர் நடுத்தர வர்க்கத்துக்குக் கீழே உள்ளவர்களின் வருமானம் பற்றிக் குறிப்பிட்டதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்... உங்கள் கருத்துப்படி நடுத்தர வர்க்கத்துக்குக் கீழுள்ள மக்கள் யார்?”

“நமது நிதியமைச்சர், ‘வருடத்துக்கு ஆறு லட்சம் முதல் 18 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் நடுத்தர வர்க்கத்துக்குக் கீழுள்ள மக்கள்’ என்று வரையறுத்துள்ளார். இந்தியாவில் விமானப் படைத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், மாவட்ட நீதிபதி ஆகியோரின் மாத ஊதியம் தோராயமாக ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய்வரை. இவர்கள்தான் வருடத்துக்கு 18 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக சம்பாதிப்பார்கள். அப்படியெனில், இவர்கள்தான் நடுத்தர வர்க்கத்துக்கு கீழே உள்ள மக்களா? கேலிக்கூத்தல்லவா இது!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ `உரிய கல்வித் தகுதி உள்ளவர்கள்தான் அமைச்சர்களாக வேண்டும்’ என்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் முன்னேறிய சமூகத்தினர் மட்டும்தானே ஆளும் வாய்ப்பைப் பெறுவார்கள்?”

“சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டார். அவரின் கல்வித் தகுதி பற்றி நாடாளுமன்றத்திலேயே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அடிப்படைக் கல்வித் தகுதி இல்லாதவர்கள் எப்படிப் படித்த மக்களுடன் அறிவார்ந்த விவாதம் புரிய முடியும். அதனால் அமைச்சர்களுக்குக் கல்வித் தகுதி தேவை என்கிறேன்.”

“அரசியலில் சேவை எங்கே இருக்கிறது?”

“ஆனால், அரசியல் என்பது சேவைதானே... அதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே?”

“அரசியல் வேறு; அரசியல் அதிகாரம் வேறு. அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; ஏராளமான சலுகைகள் தரப்படுகின்றன. இதில் சேவை எங்கு வந்தது? மக்கள் பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியிலும் கொள்ளையடிக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்வதெல்லாம் சேவையே இல்லை. அவர்கள் பெறும் சம்பளத்துக்காகவாவது அவர் களுக்குக் கல்வித் தகுதி அவசியம்.”

“முத்ரா திட்டத்தில் ஐந்து கோடி மக்கள் பலன் அடைந்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது. எதன் அடிப்படையில் முத்ரா திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்கள்?”

“விடை எளிமையானது. தொழில் செய்ய விருப்பமுள்ள, பொருளாதார பின்புலம் இல்லாத, படித்த இளைஞர்கள் பத்துப் பேரை அழைத்துக்கொண்டு வங்கிகளுக்குச் சென்று முத்ரா திட்டத்தின்கீழ் கடன் கேட்போம். கடனுக்குப் பிணையாக ஏதேனும் பத்திரத்தைக் கேட்பார்கள். இல்லாதபட்சத்தில் கடன் கிடைக்காது. இதுதான் உண்மை. முத்ரா நிச்சயம் தோல்வி அடைந்த திட்டம்தான்.”

“கொரோனா பேரிடரை சமாளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கடந்த ஆறு வருடங்களாகவே மத்திய அரசின் பல்வேறு அறிவிப்பு களை நாம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நபருக்கும் கொடுப்பதாகச் சொன்ன 15 லட்சம் ரூபாயைப்போல இந்த 20 லட்சம் கோடி ரூபாயும் ஆகிவிடுமோ என்பதுதான் என் கவலை. ஒவ்வோர் இந்தியனுக்கும் நேரடியாகப் பணம் சென்றடையும் வரை இது வெறும் காகிதத் திட்டம் மட்டுமே.”

ஷ்ரத்தானந்த்
ஷ்ரத்தானந்த்

“இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம்?”

“அடிப்படையில் மாற்றம் வேண்டும். கல்வியில் தனியார் மயத்தைத் தகர்க்க வேண்டும். மருத்துவத்துறையையும் சீர்செய்ய வேண்டும். இந்தியாவின் ஏழைகள், நோயைவிட பணத்தைப் பற்றியே அதிகம் கவலைகொள்கின்றனர். `ஆயுஷ்மான் திட்டத்துக்கு ஆதார் மட்டுமே போதும்’ என்ற நிலையை உருவாக்க வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் இங்கு அந்நிய நேரடி முதலீடுதான் நடந்து வருகிறது. எனவே, ‘மேக் இன் இந்தியாவை’, ‘மேக் ஃபார் இந்தியா’ என்று மாற்றியமைக்க வேண்டும். விவசாயத்தையும் தொழில்துறையாக மாற்ற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் பொருளாதாரத்தில் உயர முடியும். ”

“நீங்கள் அரசியலுக்கு வர விரும்புவதுபோல் தெரிகிறதே?”

“நான் மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் ஆரம்பித்த கட்சியில் 2015-ம் ஆண்டு உறுப்பினராக இருந்தேன். அவர் விவசாயிகளின் கடவுளாகவே கருதப்பட்டார். நானும் ஒரு விவசாயிதான். அந்தக் கட்சியில் நல்ல பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் ஐந்து நாள்களில் நான் வெளியேறிவிட்டேன். காரணம், தலைமையும் மக்களும் இணைக்கப்படாமல் இருந்ததே. இப்போதும் எனக்கு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால், எதிலும் இணையப்போவதில்லை. நாடு முழுவதும் பயணித்து அனைத்துக் கட்சியினரையும் மக்களையும் சந்தித்து உரையாற்றுவேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism