Published:Updated:

ஐ.பி.ஓ வெளியீடு... விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

ஐ.பி.ஓ
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.ஓ

FAQ

ஐ.பி.ஓ வெளியீடு... விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

FAQ

Published:Updated:
ஐ.பி.ஓ
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.ஓ
ங்கு முதலீட்டில் அனை வருக்கும் பிடித்ததாகப் புதிய பங்கு வெளியீடு என்ற ஐ.பி.ஓ (IPO) உள்ளது. அது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்..!

ஐ.பி.ஓ என்றால் என்ன?

‘‘ஐ.பி.ஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் தன் பங்குகளை வெளியிடுவதாகும். தமிழில் புதிய பங்கு வெளியீடு. ஐ.பி.ஓ வெற்றிகரமாக முடிந்த பிறகு, நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தை களில் வர்த்தகம் செய்ய அனுமதிக் கப்படும்.’’

எஃப்.பி.ஓ (FPO) என்றால் என்ன ?

‘‘எஃப்.பி.ஓ என்பது ஏற்கெனவே பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்ட நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுதலாகும். தமிழில் இதைத் ‘தொடர் பங்கு வெளியீடு’ என்று அழைப்போம்.’’

ரைட்ஸ் இஷ்யூ (Rights Issue) என்றால் என்ன ?

‘‘ஏற்கெனவே பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்ட நிறுவனம், கூடுதல் பங்குகளைத் தனது பங்கு தாரர்களுக்கு மட்டும் கொடுப்பது ரைட்ஸ் இஷ்யூ எனப்படும். தமிழில் இதை ‘உரிமைப் பங்கு வெளியீடு’ என்று அழைக்கிறோம்.’’

ஐ.பி.ஓ-வில் எத்தனை வகைகள் உள்ளன?

‘‘புது பங்கு வெளியீடு (Fresh Issue), கையிருப்பு பங்கு விற்பனை (Offer For Sale - ஓ.எஃப்.எஸ்), கலப்பு வெளியீடு (Hybrid Offer).

புது பங்கு வெளியீட்டு முறையில், நிறுவனம் புதிய பங்குகளைப் பொது மக்களுக்கு வெளியிட்டு மூலதனம் திரட்டும். பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் நிறுவனத்துக்குச் செல்லும். இதனால் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மொத்த மூலதனம் அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மாறாமல் இருக்கும்; ஆனால், மொத்த மூலதனத்தில் அவர்களின் பங்களிப்பு சதவிகிதம் குறையும்.’’

கையிருப்பு பங்கு விற்பனை என்றால் என்ன?

‘‘தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளின் ஒரு பகுதியையோ, முழுமை யாகவோ விற்க முனைவது ‘கையிருப்பு பங்கு விற்பனை’ என அழைக்கப்படும். நிறுவனத்தின் மொத்த மூலதனம் மாறாமல் இருக்கும்; ஆனால், தற்போ துள்ள பங்குதாரர்களின் பங்களிப்பு சதவிகிதம் குறையும்.’’

கலப்பு வெளியீடு என்றால் என்ன?

‘‘இதில் புதுப் பங்கு வெளியீடும் கையிருப்பு பங்கு விற்பனையும் கலந்து இருக்கும். இம்முறையில், நிறுவனத்தின் மொத்த மூலதனம் புதிய பங்கு வெளியீடு காரணமாக அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பங்களிப்பு சதவிகிதம் குறையும். சமீபகாலத்தில் வெளிவந்த நிறைய ஐ.பி.ஓ-க்கள் இந்த வகையைச் சார்ந்தவை.’’

எஸ்.வெங்கட்ராமன்  நிறுவனர், 
6sigmawealth.com
எஸ்.வெங்கட்ராமன்  நிறுவனர், 6sigmawealth.com

ஒரு நிறுவனம் எப்போது ஐ.பி.ஓ வெளியிடும்?

‘‘பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட முடிவு செய்த நிறுவனம் தக்க சமயத்துக்காகக் காத்திருக்கும். பங்கு வெளியீட்டுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் காலகட்டத்தில்தான் அந்த நிறுவனம் பங்குகளை வெளியிட முன்வரும். அதனால்தான் பெரும்பாலான ஐ.பி.ஓ-க்கள் பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போதுதான் வெளி வருகின்றன. ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது ஒரு ஐ.பி.ஓ-வும் வரவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் செப்டம்பர் முதல் இதுவரை 21 ஐ.பி.ஓ-க்கள் வந்துள்ளன.’’

ஐ.பி.ஓ வெளிவரும் நிறுவனம் பற்றி எப்படி அறிந்துகொள்வது?

‘‘ஒரு ஐ.பி.ஓ-வில், நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் முதலீட் டாளர்கள் பங்குச் சந்தையில் வெளியிடப்படாத பங்குகளை விற்பனை செய்ய முற்படுகின்றனர். பொதுக்களத்தில் அத்தகைய நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இருப்பதில்லை. அந்த நிறுவனம் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரே ஆவணம், அந்த நிறுவனம் செபியில் தாக்கல் செய்துள்ள பிராஸ்பக்டஸ் ஆகும். ஆனால், பிராஸ்பக்டஸ் என்பது சிக்கலான சட்ட ஆவணம்; அது பல நூறு பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால், அதை முழுமையாகப் படித்து புரிந்து கொள்வது கடினம்.’’

ஐ.பி.ஓ விலையை எப்படி நிர்ணயக் கிறார்கள்?

‘‘ஐ.பி.ஓ விலையை இரண்டு வகையில் நிர்ணயம் செய்வார்கள். ஒன்று, நிலையான விலை (Fixed Price) – அனைத்து விண்ணப்பங் களும் இந்தக் குறிப்பிட்ட விலையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இரண்டாவது, விலைப்பட்டை (Price Band) நிர்ணயித்தல் – இதில் குறைந்தபட்ச விலையும் அதிகபட்ச விலையும் குறிப்பிடப்படும்; ஒவ்வொரு விலையிலும் எவ்வளவு விண்ணப் பங்கள் குவிகின்றன என்பதைப் பொறுத்து முடிவு விலை (Final Price) நிர்ணயம் செய்யப்படும். இத்தகைய ஐ.பி.ஓ-க்கு ‘புக் பில்டிங் இஷ்யூ’ (Book Building Issue) என்று பெயர்.

நிலையான விலை பங்கு வெளியீட்டில் 50% பங்குகள், ரூ.2 லட்சம் மற்றும் குறைவான மதிப்புள்ள விண்ணப்பங்களுக்கு ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.’’

பங்கு வெளியீட்டில் ஒதுக்கீடு உண்டா?

ஐ.பி.ஓ-வில் விண்ணப்பம் செய்வோர் மூன்று வகையாகப் பிரிக்கப்படுவார்கள். 1.சிறு முதலீட்டாளர்கள் (Retail Investors) - இவர்கள் அதிக பட்சம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பங்குகள் வரை விண்ணப்பிக்கலாம். வெளியிடப்படும் பங்குகளில் குறைந்தது 35% இந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

2. நிறுவனம்சாரா பெரு முதலீட்டார்கள் (Non-institutional Investors) – இப்பிரிவில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக விண்ணப்பம் செய்வோர் அடங்குவர். கூட்டு நிறுவனங்கள் (Partnership Firms), நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் இந்தப் பிரிவில் அடங்கும். வெளியிடப்படும் பங்குகளில் குறைந்தது 15% இப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

3. செபி அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த நிறுவனங்கள் (QIB) – மியூச்சுவல் ஃபண்டுகள், வங்கிகள் இப்பிரிவில் அடங்கும். அதிகபட்சம் 50% இந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்படலாம்.’’

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

கட் ஆஃப் விலை என்றால் என்ன?

‘‘விலை வரம்பு வெளியீட்டில் (Book Building Issue) குறிப்பிடப் பட்ட விலைவரம்புக்குள், எந்த விலையிலும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விலையிலும் எவ்வளவு பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிகின்றன என்பதைப் பொறுத்து முடிவு விலையை நிறுவனம் நிர்ண யிக்கும். ஆனால், முடிவு விலை கடைசி நாளுக்குப் பின்னர்தான் தெரியவரும். ‘‘முடிவு விலை எதுவாக இருந்தாலும் அந்த விலையில் பங்குகளை வாங்கத் தயார்” என்று தீர்மானிக்கும் சிறு முதலீட்டாளர்கள் ‘கட் ஆஃப் விலை’ என்று படிவத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். ‘கட் ஆஃப் விலை’-க்குக் கீழே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படும். ‘கட் ஆஃப் விலை’-க்கு மேலே உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும், ‘கட் ஆஃப் விலை’யில் பங்குகள் ஒதுக்கப்படும். மீதி இரு பிரிவினரும் ‘கட் ஆஃப் விலை’யில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.’’

ஐ.பி.ஓ என்று தொடங்கும்?

‘‘ஐ.பி.ஓ தொடங்கும் நாளும், முடியும் நாளும் நிறுவனம் அறிவிக்கும். குறைந்தது மூன்று நாள்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கடைசி நாள் முடிவில், வெளியிடப்படும் பங்குகளைவிட குறைவாக விண்ணப்பங்கள் குவிந்தால், செபி வரம்புகளுக்கு உட்பட்டு கடைசி தேதியை நீடிக்க இயலும்.

ஓ.எஃப்.எஸ் பொதுவாக இரண்டு நாள்கள் திறந்திருக்கும். முதல் நாள் சிறு முதலீட்டாளரைத் தவிர, மற்றவர்கள் (ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு விண்ணப்பிப்போர்) விண்ணப்பிக்கலாம். இரண்டாம் நாள் சிறு முதலீட்டாளர்களும், முதல் நாள் பங்குகள் கிடைக்காதவரும் விண்ணப்பிக்கலாம்.’’

ஐ.பி.ஓ-வில் லாட் என்றால் என்ன?

‘‘ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எத்தனை பங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து முன்னரே அறிவித்துவிட வேண்டும். குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை 15,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. விலை வரம்பின் உயர்ந்தபட்ச விலையைக் கணக்கில்கொண்டு, குறைந்தபட்ச விண்ணப்ப பங்குகள் நிர்ணயிக்கப்படும்.’’

ஐ.பி.ஒ-க்கு எப்படி விண்ணப்பிப்பது?

‘‘ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பம் செய்ய வங்கிக் கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கு ஆகிய மூன்றும் தேவை. இன்டர்நெட் மூலம் உங்கள் புரோக்கர் கணக்கில் ‘லாக்-இன்’ (log in) செய்து சுலபமாக விண்ணப்பித்துவிடலாம். அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஐ.பி.ஓ தரகர் அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

பிட்ஸ்

’’நம் நாட்டில் மிக அதிகமான மக்கள் பார்க்கும் ஓ.டி.டி தளமாக யூடியூப் இருக்கிறது. இந்த அக்டோபர் வரை 38.3 கோடி பேர் யூடியூப் இணைய தளத்தைப் பார்த்து இருக்கின்றனர்!

பிட்ஸ்

மேசான் நிறுவனம், சிறு தொழில் நிறுவனங் களுக்காக வழங்கிவரும் ஆன்லைன் சேவைப் பயன்படுத்தி 4,152 ஏற்றுமதி யாளர்கள் ரூ.1 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்திருக் கின்றனர்!