Published:Updated:

`பரவும் வதந்திகள்...' - சாத்தான்குளம் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி?

`பென்னிக்ஸ் குடும்பத்தினர்’
`பென்னிக்ஸ் குடும்பத்தினர்’

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் செல்போனில் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீதர், "மரக்கடைக்காரனா... அவன்கிட்ட ஏற்கெனவே ஒரு விவகாரம் இருக்குது. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா” என்று உத்தரவு போட்டுள்ளார்.

சாத்தான்குளம் போலீஸார்மீதான இரட்டைக் கொலை வழக்கை முன்வைத்து கடந்த இதழில் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையில், 'ஆரம்ப ஜோரில் கைது, சிறையில் அடைப்பு என்றெல்லாம் வேகம் காட்டுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு மக்கள் இதை மறக்க ஆரம்பித்ததும், தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நீர்த்துப்போகும் அளவுக்கான சாட்சிகள், காரணங்களையெல்லாம் எடுத்துவைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் போகச் செய்துவிடுவார்கள்' என்று எழுதியிருந்தோம்.

ஆனால், மக்கள் மறக்க ஆரம்பிப்பதற்கு முன்னதாக... இப்போதே இந்த வழக்கை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி தரப்பிலிருந்து கசியவிடப்படும் தகவல்களைப் பார்ப்போம்...

ஜெயராஜ்,  பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

பென்னிக்ஸ் கடையை மூடாமல் இருந்ததால்தான் அவரின் தந்தைக்கும், சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்தச் சிறப்பு உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திலிருந்து சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் செல்போனில் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீதர், "மரக்கடைக்காரனா... அவன்கிட்ட ஏற்கெனவே ஒரு விவகாரம் இருக்குது. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா” என்று உத்தரவு போட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் டீம் அங்கு சென்று ஜெயராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது. அங்கு விசாரணை நடக்கும்போது ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்களிடம், "அவன்கிட்ட ஒரு வீடியோ சிக்கியிருக்கு. அதைப் பத்தி அவன் சொல்ற வரைக்கும் விடாதீங்க” என்று சொல்லியிருக்கிறார். 'நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி-யின் செல்போனில் இருந்த ரகசிய விவகாரம் பென்னிக்ஸ் கைக்குச் சென்றிருக்கிறது; அதை வாங்கவே ஸ்ரீதர் முயன்றுள்ளார்' என்று சி.பி.சி.ஐ.டி தரப்பில் சொல்கிறார்கள்.

கூடுதலாக, வி.ஐ.பி ஒருவரின் பேத்தியை பென்னிக்ஸ் காதலித்தார்; அதனால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு காதல் விவகாரத்தையும் கசியவிடுகிறார்கள்

பென்னிக்ஸுக்கு நெருக்கமான நண்பர்கள் ஏழு பேர். அவர்களில் இருவர் வழக்கறிஞர்கள். அவர்களிடம், `இந்தத் தகவல்கள் உண்மையா?' என்று கேட்டோம். "பென்னிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், எங்க ஏழு பேர்கிட்டதான் நெருக்கமாக இருப்பான். நாங்க தினமும் அவன் செல்போன் கடைக்குப் போவோம். டீ சாப்பிடுவோம். எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருந்ததில்லை.

செல்போன் வீடியோ அவன்கிட்ட சிக்கியிருக்கு, காதல் விவகாரம், கட்சிப் பின்னணி... இப்படி போலீஸ் கசியவிடுற தகவல்கள் எங்களுக்கும் வருது. இவை எல்லாமே வதந்தி. முழுக்க முழுக்கப் பொய். இட்டுக்கட்டி வழக்கை திசை திருப்புகிறார்கள்" என்றவர்கள் கண்கலங்க மேலும் பல தகவல்களைப் பகிர்ந்தனர்.

- சாதிச்சாயம், மனநோயாளி நாடகம், 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்பினர் பின்புலம், வாக்குவாதம் மட்டுமே காரணமா? சிறைக்குள் அத்துமீறிய ஸ்ரீதர்...

இப்படி பல தகவல்களை உள்ளடக்கிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > சாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்! https://bit.ly/3fbuMkL

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

சாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு