Published:Updated:

சீனப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா?

சீனத் தயாரிப்புப் பொருள்கள்
பிரீமியம் ஸ்டோரி
சீனத் தயாரிப்புப் பொருள்கள்

இந்தியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் சந்தைகள் என எடுத்துக்கொண்டால், முக்கியமானதாக ஸ்மார்ட்போன் சந்தையைச் சொல்லலாம்.

சீனப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா?

இந்தியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் சந்தைகள் என எடுத்துக்கொண்டால், முக்கியமானதாக ஸ்மார்ட்போன் சந்தையைச் சொல்லலாம்.

Published:Updated:
சீனத் தயாரிப்புப் பொருள்கள்
பிரீமியம் ஸ்டோரி
சீனத் தயாரிப்புப் பொருள்கள்
வீடோ அலுவலகமோ... அப்படியே அமர்ந்த இடத்திலிருந்து கண்களை மெதுவாகச் சுழற்றுங்கள். நிச்சயம் சீனத் தயாரிப்புப் பொருள் ஒன்றேனும் உங்கள் பார்வைக்குச் சிக்காமலிருக்காது.

எதுவுமே சிக்கவில்லையா? உங்கள் கையிலிருக்கும் அலைபேசியைப் பாருங்கள். அநேகமாக அது சீனத் தயாரிப்பாக இருக்கலாம். ஆம், `சீனத் தயாரிப்புப் பொருள்கள் இல்லாத வீடுகளோ அலுவலகங்களோ... ஏன், தனிமனிதர்களோகூட இங்கு இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சீனப் பொருள்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. இப்படியான சூழலில்தான் இந்திய-சீன எல்லையில் நிலவும் போர்ப் பதற்றத்தை முன்வைத்து, `மொத்தமாக சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்’ என்கிற குரல்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. புறக்கணிப்பு என்பது எந்த அளவுக்குச் சாத்தியம்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019-2020 (ஏப்ரல் - பிப்ரவரி) காலத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது 5.3 சதவிகிதம் மட்டுமே. அதாவது, 1,09,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது 14.09 சதவிகிதம். அதாவது, 4,40,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சீனாவிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

சீனத் தயாரிப்புப் பொருள்கள்
சீனத் தயாரிப்புப் பொருள்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை... பெட்ரோலியப் பொருள்கள், இரும்புத்தாதுக்கள், பருத்தி, மசாலா பொருள்கள் உள்ளிட்டவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். சீனாவிலிருந்து எலெக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் உதிரி பாகங்கள், டெலிகாம் சாதனங்கள், கம்ப்யூட்டர், தொழிற்சாலை உபகரணங்கள், மருத்துவச் சாதனங்கள், மருந்துத் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறோம். இதன்படி பார்த்தால், சீனாவை நாம் சார்ந்திருக்கும் அளவுக்கு, சீனா நம்மைச் சார்ந்திருக்கவில்லை.

இந்தியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் சந்தைகள் என எடுத்துக்கொண்டால், முக்கியமானதாக ஸ்மார்ட்போன் சந்தையைச் சொல்லலாம்.

70 சதவிகிதத்துக்கு அதிகமான ஸ்மார்ட்போன் சந்தையை சீன நிறுவனங்கள் கைப்பற்றி வைத்துள்ளன. அதிலும் சீனாவின் ஷியாவ்மி (Xiomi) நிறுவனம் மட்டுமே சுமார் 30 சதவிகித சந்தையைக் கைப்பற்றியிருக்கிறது. பட்ஜெட் பிரிவு மொபைல்போன்களில் ஷியாவ்மி, விவோ, ரியல்மீ, ஆப்போ ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இவற்றுக்கு இணையான இந்திய மாற்று இல்லை. லாவா, மைக்ரோமேக்ஸ் போன்ற வெகு சில இந்திய நிறுவனங்கள் மட்டுமே ஓரளவுக்கு சுமாரான ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கின்றன.

இதுபோக ஸ்மார்ட் டி.வி., டெலிகாம் உபகரணங்கள் உட்பட பல எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறோம். இவையல்லாமல் சீனா அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவு என்றால் அது சூரிய மின்சக்தி உற்பத்திதான். சூரிய மின்சக்திக்குத் தேவையான 90 சதவிகித உபகரணங்களை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். ஃபார்மா துறையும் அப்படித்தான். மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களை 60 சதவிகிதம் வரை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறோம்.

பல முக்கிய இந்திய டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்களிலும் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. Byjus, Paytm, Ola, Oyo, Swiggy, Zomato, Dream11 எனப் பல முன்னணி ஸ்டார்ட்-அப்கள் இவற்றில் அடங்கும். இதனால் சீன நிறுவனங்களை உடனுக்குடன் புறக்கணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், சாத்தியமில்லாத ஒன்றல்ல என்பதும் உண்மையே.

இது குறித்து தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, ‘‘நம் கடைகளில் விற்கும் 80 சதவிகிதப் பொருள்கள் சீனத் தயாரிப்புகளே. இவற்றை உடனடியாக புறக்கணிக்க முடியாது. ஆனால், படிப்படியாகப் புறக்கணிக்கலாம். புறக்கணிப்பு என்பதைவிட தற்சார்பு என்று சொல்வதுதான் பொருத்தமானது. முதற்கட்டமாக, சீன பொம்மைகளைத் தவிர்க்க ஆரம்பித்து, இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க ஆரம்பிக்கலாம். அடுத்தகட்டமாக பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட அனைத்திலும் இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க ஆரம்பிக்கலாம். இந்த முயற்சி ஒருகட்டத்தில் மொத்தமாக இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதற்குப் பேருதவியாக இருக்கும்’’ என்று சொன்ன விக்கிரமராஜா, ‘‘ஆனால், இங்குள்ள விதிமுறைகளை எளிதாக்காமல், அனுமதிகளை விரைவுபடுத்தாமல் இது எதுவே சாத்தியமில்லை’’ என்பதையும் வலியுறுத்துகிறார்.

‘‘இங்கே ஒரு பொருளைத் தயாரித்து விற்பனை செய்ய அரசிடம் அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. பலகட்ட வழிமுறைகள், அனுமதிகள், லஞ்ச லாவண்யங்கள் என வியாபாரிகளும் தொழிலதிபர்களும் நொந்து நூலாகிவிடுகிறார்கள். இவற்றை அரசு இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே ‘சிங்கிள் விண்டோ’ முறையில் தமிழகத்தில் அனுமதிப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலும் ஏகப்பட்ட இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் களையெடுக்க வேண்டும்.

சீனத் தயாரிப்புப் பொருள்கள்
சீனத் தயாரிப்புப் பொருள்கள்

அதேசமயம், வணிகர் சங்கம் சார்பில் பத்து செயல்திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். ஊரடங்கு முடிந்தவுடன் அவற்றையெல்லாம் செயல்படுத்துவோம். பத்தாவது செயல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது சீனத் தயாரிப்புகளை முழுவதுமாக புறக்கணித் திருப்போம். அதேசமயம், யானை பலத்துடன் இருக்கும் சீன நிறுவனங்களை எதிர்கொள்ள அரசின் ஆதரவு மிக மிக அவசியம். அது இல்லாமல் எதையும் சாதிக்கவே முடியாது” என்றார்.

பொருளாதார நிபுணர் ஜோதிசிவஞானம், ‘‘உடனடியாக புறக்கணிப்பு என்று குதித்தால், நமக்குத்தான் பாதிப்பு. பிற நாடுகளை ஒப்பிடும்போது, சீனப் பொருள்களின் விலை 40 சதவிகிதம் வரை குறைவு. அதனால்தான் பல்வேறு துறைகளுக்கான உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து, பொருள்களைத் தயாரித்து விற்கிறோம். இதைத் தடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டி, அவற்றைப் படிப்படியாகச் செயல்படுத்தும் போது, நீண்டகாலத்துக்குப் பிறகு இந்த நிலையை மாற்ற முடியும்’’ என்று சொன்னார்.

உலகமயமாதலை, `போரின் மற்றொரு வடிவம்’ என்றும் சொல்லலாம். இந்தப் போருக்குத் தேவை, கத்தி அல்ல... புத்தி!