Published:Updated:

உண்மையான இந்துக்களுக்கு பாஜக நிவாரண உதவி அறிவித்தது உண்மையா?! #FactCheck

பாஜக சார்பில் உண்மையான 2,000 இந்துக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்குவதாகக் கூறியுள்ளது உண்மையா?

கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளும் தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சி சார்பில் `பாஜக இளைஞரணி சார்பில் 2,000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படும்" என்றும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

BJP Original Poster
BJP Original Poster

இந்த புகைப்பட விவகாரம் குறித்து தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வத்திடம் பேசினோம். ``நான் கடந்த நவம்பர் 8-ம் தேதி 2,000 பேருக்கு நிவாரண உதவி என்று வெளியிடப் புகைப்படத்தை மாற்றி இணையத்தில் பரப்பிவருகிறார்கள். பாஜக வளர்ச்சியின் மீதி அச்சம் கொண்ட ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்கள் தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். நாங்கள் நிவாரணம் வழங்கிய முகாமில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வந்து பயனடைந்தார்கள். திட்டமிட்டே இப்படி எங்களுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். பாஜகவின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியாது" என்று பேசினார்.

2,000 இந்துக்களுக்கு வெள்ள நிவாரண உதவி என்று வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படம் போலியான ஒன்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு