நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும்விதத்தில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

`2022-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு குடியிருப்புகளுக்கான கட்டுமானத் திட்டங்களை ஊக்குவித்துவருகிறது. குறிப்பாக, நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, ரியல் எஸ்டேட் துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 1,600 கட்டுமானத் திட்டங்கள் முடங்கிப்போயிருக்கின்றன.

`இந்தத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்தத் தொகை, முடங்கியிருக்கும் கட்டுமானத் திட்டங்களில் 6% திட்டங்களுக்கு மட்டுமே பயன்படக்கூடும். இந்த நிதி, ‘மாற்று முதலீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. `இந்தத் தொகையில், ரூ.10,000 கோடியை மத்திய அரசும், மீதமுள்ள ரூ.15,000 கோடியை எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களும் அளிக்கும்’ எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொருளாதார மந்தநிலையால் முடங்கிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் துறை மீண்டெழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!