Published:Updated:

ஷாருக்கான் மகனைக் கைது செய்த அதிகாரியின் மனைவிக்குக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பா?

நடிகர் ஷாருக்கானின் மகனைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேயின் நடிகை மனைவிக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்வதில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல அதிகாரி சமீர் வாங்கடே. சமீர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மஹாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சமீரும் தன்னை யாரோ பின்தொடர்வதாக மகாராஷ்டிரா போலீஸாரிடம் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது புதிய திருப்பமாக சமீர் மனைவி கிராந்தி ரெட்கருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை..." வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு?!
கிராந்தி
கிராந்தி

2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் கிராந்திக்குத் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு கிராந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``நான் ஏற்கனவே இந்த வழக்கில் கோர்ட் மூலம் வெற்றி பெற்றிருக்கேன். அப்படி இருக்கையில் ஒரு சில பார்வையாளர்களுக்காகத் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள். எனது வழக்கின் முழு விபரத்தை படித்துப் பாருங்கள். கோர்ட் தனது தீர்ப்பில் என்னை தவறாகத் தொடர்பு படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இது போன்ற ஒரு தலைப்பு கொடுக்கிறீர்கள்? எனது அல்லது சமீரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தவா அல்லது பணத்திற்காகவா என்றும் காட்டமாக கேட்டிருக்கிறார். அனைவரும் முழு அறிக்கையையும் படிப்பதில்லை. உங்களது கவனக்குறைவான செய்தியால் எங்களை மக்கள் தவறாக நினைக்கின்றனர். என்மீது தவறு இருந்தால் என் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வேன். ஆனால் தவறு செய்யவில்லையே என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகையான கிராந்தி, மராத்தி, இந்தி படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். 2017-ம் ஆண்டு சமீர் வாங்கடேயை திருமணம் செய்து கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு