Published:Updated:

பொருளாதாரம் உண்மையிலேயே முன்னேறுகிறதா? - புள்ளிவிவரங்களின் மறுபக்கம்..!

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

செப்டம்பரில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலாகி இருக்கிறது. இது கடந்த ஏழு மாதங்களைவிட அதிகம்!

பொருளாதாரம் உண்மையிலேயே முன்னேறுகிறதா? - புள்ளிவிவரங்களின் மறுபக்கம்..!

செப்டம்பரில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலாகி இருக்கிறது. இது கடந்த ஏழு மாதங்களைவிட அதிகம்!

Published:Updated:
பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்
ந்த மாதம் அக்டோபர் 1-ம் தேதி முதல் வெளியாகிவரும் புள்ளிவிவரங்கள் நம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவதாக இருக்கிறது. காரணம், கோவிட்-19 தொற்று நோயால் பெரும் பாதிப்புக்கு உள்ளான நமது பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியிருப்பதாகத் தற்போது வெளியாகும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இதைத் தொடர்ந்து, ‘பொருளாதாரச் சரிவு என்பது முடிந்துவிட்டது. எனவே, யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது’ எனப் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். அதே சமயம், நம் பொருளாதாரம் உண்மையிலேயே வளரத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பவே செய்கின்றனர்.

பொருளாதாரம் உண்மையிலேயே முன்னேறுகிறதா? - புள்ளிவிவரங்களின் மறுபக்கம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?

1. கடந்த செப்டம்பரில் ரூ.95,480 கோடி சரக்கு மற்று சேவை வரியாக வசூலாகி இருக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகம். கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.86,449 கோடி மட்டுமே வசூலானது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.91,916 கோடி மட்டும் வசூலானது.

2. தொழில்துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ (Purchase Manager Index) புள்ளிகளானது 56.8 என்ற அளவை, கடந்த செப்டம்பரில் தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 30 புள்ளிகளுக்குக்கீழே இருந்த இந்தக் குறியீடு, இப்போது 55 புள்ளிகளுக்குமேல் வளர்ந்திருக்கிறது.

3. கடந்த ஆறு மாதங்களாகக் குறைந்துகொண்டே வந்த நமது ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 5.27% அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதே சமயம் இறக்குமதி 19% அளவுக்குக் குறைந்துள்ளது.

4. ரொக்கப் புழக்கமானது நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியுடன் (Cash to GDP Ratio) ஒப்பிடும்போது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொருளாதார வளர்ச்சியையே காட்டுகிறது..!

‘‘நமது பொருளாதாரம் வளர்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. கோவிட் காலத்தில் மத்திய அரசு எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்’’ என ஆளும்கட்சியினர் தற்போது சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். அண்மையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாகவே உள்ளது. இனிவரும் காலத்திலும் நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

‘‘பொருளாதாரச் சிக்கலைச் சரிசெய்யத் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கோவிட் சிக்கலை வாய்ப்பாக மாற்றிக்கொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். வளர்ச்சிக்குத் தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்படும்’’ என்றும் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை..!

பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதாக பங்கு முதலீட்டாளர்கள் கருதுவதால், பங்குச் சந்தைப் புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றன. மும்பை பங்குச் சந்தை கடந்த மூன்று மாதங்களில் 10.18 சதவிகிதமும் ஒரு மாதத்தில் 5.85 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

இந்த மாதம் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு பலவிதமான பண்டிகைகள் வரவிருப்பதால், மக்கள் ஓரளவுக்கு நிறையவே செலவு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் நன்றாகவே இருக்கும்!

இது தொடக்கம் மட்டுமே..!

புள்ளிவிவரங்கள் நமது பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும், இது ஒரு சிறிய மாற்றமே. இந்த விவரங்களை வைத்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்று சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் சிலர். அவர்கள் முன்வைக்கும் கருத்துகள் என்ன?

பொருளாதாரம் உண்மையிலேயே முன்னேறுகிறதா? - புள்ளிவிவரங்களின் மறுபக்கம்..!

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை, செப்டம்பரில் வசூலாகி இருக்கும் தொகை அதிகம்தான். ஆனால், இந்தத் தொகை பற்றி சில கேள்விகள் எழுப்பாமல் இருக்க முடிய வில்லை. காரணம், கோவிட்-19-க்குப் பிறகு, இன்னும்கூட பல துறைகள் செயல்படாமலே இருக்கின்றன.

உதாரணமாக, விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து செயல்படவில்லை. பெரிய அளவில் வருமானம் தரும் விடுதிகள், ஹோட்டல்கள் இயங்கவில்லை. தொழில் நிறுவனங்களின் விற்பனையும் பெரியளவில் உயரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, ஜி.எஸ்.டி வரி மட்டும் உயர்ந்திருப்பதாகச் சொல்வது எப்படி என்று கேட்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

கடந்த ஆறு மாதங்களாகத் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் உற்பத்தி ஏதும் செய்யாமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது. பண்டிகைக் காலத்தையொட்டி பலரும் பொருள்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தொழில் நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்கி யுள்ளன. எனவேதான் பி.எம்.ஐ குறியீடு அதிகம் உயர்ந்திருக்கிறது. இது அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் உயருமா என்று பார்ப்பது அவசியம்.

ஏற்றுமதி கொஞ்சம் அதிகரித்திருப்பதும் இறக்குமதி கொஞ்சம் குறைந்திருப்பதும் நல்ல விஷயமே. ஆனால், இவை இரண்டும் இனிவரும் நாள்களிலும் தொடருமா என்பதே முக்கியமான கேள்வி. உதாரணமாக, கச்சா எண்ணெய்யும் தங்கமும்தான் நம் இறக்குமதியில் கணிசமான பங்கை வகிக்கிறது. கோவிட்டுக்குப் பின் போக்குவரத்தானது இன்னும் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை. பல லட்சம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து, இறக்குமதியும் குறைந்துள்ளது. இதே போல, தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகமாக இருப்பதாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவாக இருப்பதாலும் நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. இதனால் பலரும் தங்கம் வாங்க விரும்பவில்லை. எனவே, அதன் இறக்குமதியும் குறைந்திருக்கிறது. இந்தப் போக்கு எதிர்காலத்திலும் தொடருமா என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

நெகட்டிவான புள்ளிவிவரங்கள்..!

நமது பொருளாதார வளர்ச்சி குறித்து பாசிட்டிவான சில புள்ளிவிவரங்கள் வந்திருக்கும் அதே நேரத்தில், சில நெகட்டிவ் புள்ளிவிவரங்கள் வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, முக்கியத் துறைகளின் வளர்ச்சியானது (Core sector growth) சொல்லிக்கொள்ளும்படி இன்னும் உயரவில்லை. இந்தத் துறையின் வளர்ச்சி கடந்த ஆறு மாதங்களாகவே சரிவில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கியத் துறைகளின் வளர்ச்சி 8% அளவுக்குக் குறைந்த நிலையில், செப்டம்பரில் 8.5% அளவுக்கு குறைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

புதிய திட்டங்களுக்கான மூலதனச் செலவும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (2020 ஜனவரி - மார்ச்) ரூ.3.9 லட்சம் கோடியாக இருந்த மூலதனச் செலவு, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.70,000 கோடியாகவும் இரண்டாம் காலாண்டில் ரூ.60,000 கோடியாகவும் உள்ளது. ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்ட இரண்டாம் காலாண்டில் புதிய திட்டங்களுக்கான மூலதனச் செலவு குறைந்திருப்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இது ஒரு நல்ல தொடக்கமே..!

எனினும், பொருளாதார வளர்ச்சி குறித்து நெகட்டிவ் புள்ளிவிவரங்களைவிட பாசிட்டிவ் புள்ளிவிவரங்கள் அதிகம் வந்திருப்பது நல்ல விஷயம்தான். இது சிறிய அளவிலான முன்னேற்றம்தான். இந்த முன்னேற்றம் இனிவரும் மாதங்களிலும் தொடர வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் செய்ய வேண்டும்.

இந்த மாதம் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு பலவிதமான பண்டிகைகள் வரவிருப்பதால், மக்கள் ஓரளவுக்கு நிறையவே செலவு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கடுத்து வரும் மாதங்களிலும் செலவு செய்வதற்கு மக்களிடம் பணம் இருக்கிறதா என்பதை வைத்தே முன்னேற்றம் ஏற்படும்!