தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் வெளியான ஐ.நா-வின் அறிக்கை ஒன்று `பகீர்’ கிளப்பியுள்ளது. கர்நாடகா, கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ள தாகவும், இந்தியாவைத் தாக்க அவர்கள் தீவிரமாகத் திட்டமிடுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலில், உலக தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐ.நா-வின் 26-வது தீவிரவாதத் தடுப்பு அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தான் மேற்சொன்ன விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன. அல்கொய்தா அமைப்புக்கான தெற்காசியப் பிரிவிலும் இந்தியர்கள் கணிசமாக இடம் பெற்றுள்ளதாக இடம்பெற்றிருக்கும் தகவல் அதிர்ச்சி ரேகையைப் படரவிட்டுள்ளது.

கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்

கேரளாவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்குமான தொடர்பு 2014 சிரியா போருக்குப் பின்னர் பலமாக வேரூன்றியது. அந்தக் காலகட்டத்தில் கேரளாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியாவுக்குப் போர் புரியச் சென்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததைக் குறிப்பிட்டு சி.ஐ.ஏ., மொசாட் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்தியாவை எச்சரித்தன.

கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை மூன்று கிளைகள்தான் முதலில் வளர்த்தன.

முதலாவது, காசர்கோடு கிளை. அப்துல் ரஷீத் என்பவரின் தலைமையில் இயங்கிய காசர்கோடு கிளை, மத மாற்றத்தையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் ஆட்களை இணைப்பதற்கான வேலையையும் பார்க்கிறது. ஜூலை 2016-ல் 20-க்கும் அதிகமான இளைஞர்கள் கேரளாவில் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் பெரும்பாலானோர் சிரியாவில் தீவிரவாதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த இந்திய உளவுத் துறையான ‘ரா’, இவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றியதன் பின்னணியில் அப்துல் ரஷீத் இருப்பதைக் கண்டுபிடித்தது. இந்திய உளவுத்துறை நெருங்குகிறது என்றவுடன் துபாய் வழியாக ஆப்கானிஸ்தான் தப்பிச் சென்ற அப்துல் ரஷீத், ஆப்கனின் நங்கர்ஹார் மாநிலத்திலிருந்து செயல்பட்டார். 2019-ல் நடைபெற்ற அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் அப்துல் ரஷீத் இறந்துவிட்டாலும், இன்றும் காசர்கோடு கிளையைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் சைலன்ட் ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது, கண்ணூர் கிளை. கேரளாவின் கடலோர மாவட்டமான கண்ணூரிலிருந்துதான் அதிகப்படியான இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றதாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது. கண்ணூர் கிளையின் முக்கிய மூளை யாகச் செயல்பட்டவர், ஷாஜகான் வல்லுவ கண்டி. குடும்பத்துடன் சிரியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டவரை, என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பெயரில், துருக்கி உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டு, அந்த நாட்டின் எல்லை வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணூர் கிளையைச் சேர்ந்த 16 பேர், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கிளையின் செயல்பாடுகள் பெருமளவு கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டாலும், தீவிரவாதக் கருத்துகளை ஆன்லைன் மூலமாகப் பரப்புவதில் இன்றும் இவர்களின் செயல்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறதாம்.

மூன்றாவது, உமர் அல்-ஹிந்தி கிளை. இந்தக் கிளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கண்ணூர், காசர்கோடுவாசிகள்தான். ஷாஜீர் மங்களாசேரி என்பவரின் தலைமையில் செயல்பட்ட இந்தக் கிளை, கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்த யூதர்களைக் கொல்ல திட்டம் தீட்டியிருந்தது. அக்டோபர் 2016-ல் கண்ணூரின் கனகமலா பகுதியில் என்.ஐ.ஏ திடீர் சோதனையில் ஈடுபட்டபோதுதான், இவர்களின் திட்டம் அம்பலமாகி, பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. உடனடியாக ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஆப்கானிஸ்தான் தப்பிச் சென்ற ஷாஜீர் மங்களாசேரி, 2017-ல் நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மூன்று கிளைகளின் வழியாகத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் திரட்டுவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது தென்னகத்தில் மட்டும் ஏறத்தாழ 110 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருப்ப தாகக் கூறுகிறது இந்திய உளவுத்துறை.

கண்காணிப்பில் 110 பேர்

உளவுத்துறையின் தென் பிராந்திய மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘ஏப்ரல் 2019-ல் இலங்கையில் நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கும், கேரளாவிலுள்ள அடிப்படைவாதி களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அந்தத் தாக்குதலுக்குத் தேவைப்பட்ட நிதி, தகவல் தொடர்புகளைக் கண்ணூரிலுள்ள சிலர் ஏற்படுத்தித் தந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த பத்து சதவிகிதத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில்தான் பணிபுரிகின்றனர். இவர்களில் யார் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக மாறியிருக்கின்றனர், இங்கே என்ன மாதிரியான திட்டத்தைத் தீட்டுகின்றனர் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பது சவாலான காரியம்தான். ஆனாலும் நாங்கள் கடுமையாக முயற்சி செய்கிறோம்.

சமீபத்தில் ஸ்வப்னா சுரேஷ் மூலமாக கொண்டுவரப்பட்ட தங்கமும் தீவிரவாத நடவடிக்கைக்காகத் திரட்டப்பட்ட நிதிதான். பல அமைப்புகள் மத விழிப்புணர்வு போர்வையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் திரட்டுவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளைச் செய்வதும் எங்களுக்குத் தெரியும். இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமே ஏறத்தாழ 110 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களாக அறியப்பட்டுள்ளனர். அவர்கள் முழுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் ஒருபோதும் இந்தியாவில் நாசக்கார வேலையை செய்ய முடியாது’’ என்றார்.

மே 2019-ல் ‘விலயாஹ் ஆஃப் ஹிந்த்’ என்கிற பெயரில் இந்தியாவுக்கான துணை அமைப்பைத் தொடங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், ஆயுதம் தாங்கிய போராட்டத்தை காஷ்மீரிலிருந்து தான் நடத்துகிறது. அதன் வீச்சு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு வரையில் சித்தாந்தரீதியாக நுழைந்து விட்டாலும், ஆயுத மேந்தும் நிலைக்கு இன்னும் தென்னகம் வரவில்லை. அந்த நிலை ஏற்படாமலிருக்க என்.ஐ.ஏ தன் பிடியை மேலும் இறுக்கும் என்பதே நமக்குக் கிடைக்கும் தகவல்.