Published:Updated:

`இது என் கடமை; கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண்காவலர்’-ட்ரம்ப் வருகை... பரபரக்கும் அகமதாபாத்

பெண் காவலர்
பெண் காவலர் ( ANI )

இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக, அகமதாபாத்தில் சுவர்கள் எல்லாம் வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளன.

`நமஸ்தே ட்ரம்ப் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது குஜராத். அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ள ட்ரம்ப், குஜராத்தின் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைக்கிறார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் இங்கு உரையாற்ற உள்ளனர். ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக, சுவர்கள் எல்லாம் வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளன.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

ட்ரம்ப் இந்தியா வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்தியா வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். ட்ரம்ப் செல்லும் இடங்கள், கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள் என அனைத்துப் பகுதிகளையும் கண்காணித்துவருகின்றனர். அகமதாபாத் நகரம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அந்தப் பெண் காவலரின் பெயர், சங்கீதா பர்மார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில்,``இது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஒரு தாயாகவும் பொறுப்புள்ள காவலராகவும் என்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும். என் குழந்தைக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அவனுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், என்னுடன் அழைத்துவந்தேன்” என்றார்.

பெண் காவலர் சங்கீதா
பெண் காவலர் சங்கீதா
அகமதாபாத் சுவர் அரசியல்... எதிர்ப்பும், மறுப்பும்!

மோடி- ட்ரம்ப் இருவரும் உரையாற்றவுள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தற்காலிக வரவேற்பு நுழைவுவாயில் ஒன்று சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காற்றின் வேகத்தால் இந்த நுழைவுவாயில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு