Published:Updated:

`நான் ஜெயிலுக்கு போறேன்' டிரெண்டாகும் ஜெயில் டூரிசம்... ஒருநாள் வாடகை ஜஸ்ட் ₹ 500!

உத்தரகாண்ட் ஹல்த்வானி சிறை

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, ``ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற தலைவிதி உள்ளவர்கள்” அதற்கான பரிகாரமாக இந்த சிறைத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்..

`நான் ஜெயிலுக்கு போறேன்' டிரெண்டாகும் ஜெயில் டூரிசம்... ஒருநாள் வாடகை ஜஸ்ட் ₹ 500!

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, ``ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற தலைவிதி உள்ளவர்கள்” அதற்கான பரிகாரமாக இந்த சிறைத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்..

Published:Updated:
உத்தரகாண்ட் ஹல்த்வானி சிறை

சிறைவாச சுற்றுலா...

சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி தற்போது வரை பல முக்கியப் பிரமுகர்கள் சிறைக்குச் சென்று வந்ததாகச் சொல்வதைக் கேட்க்கும் போது, பலருக்கும் சிறை எப்படி இருக்கும்... சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அதிகரிக்கவே செய்கிறது.

`நானும் ரவுடிதான்' என்று வடிவேலு சொல்வதைப்போல நானும் சிறைக்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக்கொள்ள ஓர் ஆசைதான். அதற்காக சிறைக்குச் செல்ல தரமான சம்பவங்களைச் செய்யவா முடியும்? முடியாது... ஆனாலும் சிறைவாசத்தை சுற்றுலாவைப்போல அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்காகவே ஒரு சில மாநிலங்களில் உள்ள சிறைத்துறை, ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது .

சிறை தண்டனை
சிறை தண்டனை
மாதிரி படம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மத்திய சிறையில் ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒருநாள் உள்ளே இருக்கலாம் என்று அந்த மாநில அரசு அறிவித்த போது, தினமும் நிறைய விண்ணப்பங்கள் குவிந்து வந்தன. பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அதே போல மகாராஷ்டிரா அரசு, அந்த மாநிலத்திலுள்ள பழைமையான சிறைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறையைப் பார்க்க `சிறைச் சுற்றுலா திட்டம்’ தொடங்கியபோது நல்ல வரவேற்பு இருந்தது.

ஓர் இரவுக்கு ₹ 500 வாடகை!

மக்களின் சிறை ஆர்வத்தைப் புரிந்து கொண்ட உத்தரகாண்ட் அரசு, மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சிறை அனுபவத்தைக் காட்டும் வகையில் வித்தியசமான புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில், சிறையில் அடைக்கப்படுவது எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பும் பயணிகளுக்காக ஒரு தனித்துவமான முயற்சியை உருவாக்கியுள்ளது. அதன்படி ஓர் இரவுக்கு ₹ 500 வாடகையாகப் பெற்றுக்கொண்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு 'உண்மையான சிறை' அனுபவத்தை வழங்குகிறது.

உத்தரகாண்ட்  ஹல்த்வானி சிறை
உத்தரகாண்ட் ஹல்த்வானி சிறை

ரூ.500 செலுத்தி, விருப்பமுள்ள பயணிகள் சிறையில் தங்கிக் கொள்ளலாம். இதற்காக சிறையில் கைவிடப்பட்ட பகுதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் மாதிரி சிறை வளாகமாக மாற்றப்படுகிறது. ஹல்த்வானி சிறை நிர்வாகம் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சிறையில் தங்கி, கைதிகள் அனுபவிக்கும் கஷ்டங்களைக் கண்டால், அவர்களுக்கு குற்றம் செய்யும் எண்ணம் தோன்றாது. சமூகத்தில் விழிப்புணர்வு, அமைதி உருவாகும். சிறையின் அனுபவத்தைப் பெறுவதன் மூலம் தனிநபர் குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்று சிறைத்துறை சார்பாக  சொல்லப்படுகிறது.

பணத்த கொடுத்து ஜெயிலுக்கு போக என்னதான் காரணம்?! 

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, ``ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின்படி கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற தலைவிதி உள்ளவர்கள்” அதற்கான பரிகாரமாக இந்த சிறைத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்..

உத்தரகாண்ட்  ஹல்த்வானி சிறை
உத்தரகாண்ட் ஹல்த்வானி சிறை

ஒருவருக்கு சிறைவாசத்தை முன்னறிவிக்கும் ஜாதகங்களில் ``பந்தன் யோகம்" படி சிறைத்தண்டனை தவிர்க்க முடியாதது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு அதைத் தவிர்ப்பதற்காக சிறையில் இருக்குமாறு ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதுவே சிறைக்கு வந்து தங்க முக்கிய காரணம் என்று செல்கிறார்கள்.

இப்படி சிறைக்கு வருபவர்களுக்கு கைதி எண், கைதிக்கான சீருடை, சிறை அறை எண் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, சிறையில் 24 மணி நேரம் கைதியைப்போல வாழ ஏற்பாடுகள் உள்ளன.

பரிகாரமோ.. சுற்றுலாவோ அரசுக்கு வருமானம் வந்தால் சரி!