Published:Updated:

`தடையை மீறி ட்ரெக்கிங்.. லைவ் கமென்ட்ரி’- ஃபுஜி மலையில் உயிரிழந்த வாலிபரின் கடைசி நிமிடங்கள்!

ஃபுஜி மலையில் லைவ் செய்த இளைஞர் ஒருவர், சறுக்கி விழுந்து உயிரிழந்தார்.

 ஃபுஜி மலை
ஃபுஜி மலை

ஜப்பானின் உயரமான ஃபுஜி மலையின் மீதிருந்து சூரிய உதயத்தைப் பார்த்தால் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். ஃபுஜி மலைக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். 12,388 அடி உயரம் கொண்ட இந்த மலையில், குளிர்காலத்தில் மலையேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையைப் பொருட்படுத்தாமல், ஜப்பானைச் சேர்ந்த டெட்ஜோ என்ற இளைஞர் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். திங்கள்கிழமை மதியம் மலையேற்றத்தில் ஈடுபடத் தொடங்கியவர், அதைத் தனது செல்போன்மூலம் யூடியூபில் லைவ் செய்தார்.

ஃபுஜி மலை
ஃபுஜி மலை

அந்த நேரலையில் பேசும் டெட்ஜோ, ''மலைச் சிகரத்தை நோக்கி பயணிக்கிறேன். இந்த இடம் பயங்கர குளிராக இருக்கிறது. எனது கைகளில் உணர்ச்சிகளே இல்லை. போன்களைக் கையில் பிடிப்பதற்காக ஒரு ஹோல்டரை நல்ல வேலையாக கையோடு கொண்டுவந்துள்ளேன். என் விரல்களே என்னைக் கொலை செய்கின்றன. அதைச் சூடுப்படுத்த வேண்டும். இந்தப் பாதை மிகவும் குறுகலாக இருக்கிறது. இடதுபக்கம் கொஞ்சம் சரிந்தாலும் பள்ளம்தான். இது வழுக்குகிறது... அபாயகரமானதாக இருக்கிறது. நல்ல வேளையாக இங்கு பாறைகள் இருக்கின்றன'' எனச் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்!'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்

'இந்தப் பாறையைப் பின்பற்றிச் செல்வோம். ஆனாலும் இது கடினமான ஒன்றுதான். சறுக்கிக்கொண்டே கீழே இறங்குவோம். இது செங்குத்தாக இருக்கிறது. இந்தப் பாதை பனியால் சூழ்ந்துள்ளது. நான் சரியான பாதையில்தான் இறங்குகிறேனா எனக் கேள்வி கேட்கிறார். நான் வழுக்குகிறேன். இந்த செங்குத்தான பாதை மிகவும் அபாயகரமானது. இறுதியாக வழுக்குகிறது' என்ற சத்தத்தோடு இந்த வீடியோவில் இருந்து டெட்ஜோ மறைந்துவிட்டார். அவருடைய சத்தம் மட்டுமே கேட்கிறது. நேரலையில் பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த நேரலை வீடியோவில் பனி மட்டுமே தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. இந்த வீடியோ தொடர்பாக காவல்நிலையத்துக்குப் புகார்கள் பறந்தன.

இதையடுத்து மீட்புப்பணிகள் வேகமெடுத்தது. டெட்ஜோவைத் தேடும் பணி ஆரம்பித்தது. 10 பேர் கொண்ட மீட்புக்குழு டெட்ஜோவை தேடும் பணியில் இறங்கியது. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்தது. ஆனால், அந்தப் பகுதியில் யாரும் இருப்பதாகத் தெரிவில்லை. அவரின் உடல், ஃபுஜி மலையின் ஷிஜுகோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.