Published:Updated:

“ஊரடங்கே எங்களுக்குத் தெரியாது!”

ஜவ்வாது மலைவாழ் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலைவாழ் மக்கள்

கர்நாடகாவில் தவிக்கும் ஜவ்வாது மலைவாழ் மக்கள்

“ஊரடங்கே எங்களுக்குத் தெரியாது!”

கர்நாடகாவில் தவிக்கும் ஜவ்வாது மலைவாழ் மக்கள்

Published:Updated:
ஜவ்வாது மலைவாழ் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலைவாழ் மக்கள்
மிளகு மற்றும் காபி தோட்டங் களில் பணிபுரிவதற்காக கர்நாடகா மலை எஸ்டேட்களுக்குச் சென்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைவாழ் மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர், ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ``பசியும் பட்டினியுமாகத் தவிக்கும் தங்களை எப்படியாவது சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்புங்கள்’’ என்கிறார்கள் அவர்கள்.

ஜவ்வாது மலைப்பகுதி, வானம் பார்த்த பூமி. பெரியதாக விவசாயம் கிடையாது. வேலை வாய்ப்புகளும் இல்லை. மூன்று மாதப் பயிரான சாமை மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்கின்றனர். பலரும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படித்தான் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மிளகு மற்றும் காபிக் கொட்டைகள் பறிக்கும் தினக்கூலி வேலைக்கு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு குடும்பமாகச் சென்று, நான்கு மாதங்கள் எஸ்டேட்களிலேயே தங்கி வேலைசெய்வார்கள்.

அப்படிச் செல்லும் சிலரின் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தால், அவர்களை வீட்டில் உள்ள வயதானவர்களிடமோ அல்லது அரசுப் பள்ளி உறைவிடங்களிலோ விட்டுச் செல்வார்கள். வேலை முடிந்ததும் ஏப்ரல், மே மாதங்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலான ஜவ்வாது மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை.

ஜவ்வாது மலைவாழ் மக்கள்
ஜவ்வாது மலைவாழ் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டு அப்படிச் சென்றவர்கள் பலர், கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீடு திரும்பி விட்டனர். ஆனால், தகவல் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கர்நாடக எஸ்டேட்களில் மாட்டிக்கொண்டு, உணவுக்கே வழியில்லாமல் பசியும் பட்டினியுமாக கைக்குழந்தைகளுடன் தவித்துவருகின்றனர்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம் ஆஞ்சி பகுதியில் மிளகு எஸ்டேட்களில் தங்கியிருக்கும் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். “நாங்க போன டிசம்பர் மாசம் கடைசியில இங்கே வந்தோம். வந்து ஒரு மாசம்தான் முழுசா வேலை செஞ்சோம். கொரோனா நோயால ஊரடங்கு உத்தரவு போட்டது எங்களுக்குத் தெரியாது. ஊரடங்கு உத்தரவால வேலை இல்லைன்னு முதலாளிங்க சொன்னதுக்கு அப்புறம்தான் விஷயமே எங்களுக்குத் தெரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏப்ரல் 14-ம் தேதியோடு ஊரடங்கு முடிஞ்சிடும்னு சொன்னதால, கையில இருந்த பணத்தைவெச்சு இவ்வளவு நாள் ஓட்டிட்டோம். ஆனா, இப்போ ஊரடங்கை நீட்டிச்சதால என்ன செய்யறதுன்னே தெரியலை. கையில பணமும் இல்லை; அரிசி பருப்பும் தீர்ந்துப்போச்சு. அக்கம்பக்கம் கொஞ்சம் மாவு வாங்கி குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுத்துட்டு, நாங்க அரை வயித்தோடு பட்டினியா கிடக்குறோம். இப்ப அக்கம்பக்கமும் உதவி கிடைக்கலை. கொரோனா தொற்று பயத்தால எங்களை ஊருக்குள்ள வராதீங்கன்னுட்டாங்க. கர்நாடகா அரசும் எந்த உதவியும் செய்யல. தமிழ்நாடு அரசுதான் எங்களை எப்படியாச்சும் காப்பாத்தணும். நாங்க ஊர் திரும்ப ஏற்பாடு பண்ணுங்க” என்று கலங்கினார்கள்.

ஜவ்வாது மலைவாழ் மக்கள்
ஜவ்வாது மலைவாழ் மக்கள்

சகுந்தலா என்பவர், “எங்க ரெண்டு சின்னப் பசங்களும் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க. ‘ஹாஸ்டலை மூடிட்டாங்கம்மா. நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுல தனியா இருக்க பயமா இருக்கு. பசிக்குது... எப்பம்மா வீட்டுக்கு வருவீங்க?’ன்னு கேட்டு போன்ல அழுவுதுங்க சார். பக்கத்து வீட்டுல சொல்லி சாப்பாடு கொடுக்கச் சொல்லியிருக்கேன். அதுங்க என்ன பண்ணுதுங்களோ தெரியலை” என்றவர் பிரிவு தாள முடியாமல் கதறி அழுதார்.

அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் தகவல் சொன்னோம். “மற்ற மாநில அரசுகளிடம் நம் மாநில மக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஏற்கெனவே எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் கர்நாடகா மிளகு எஸ்டேட்டில் இருக்கும் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர அங்கு உள்ள அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன். தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எப்படியாவது வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதை தவறு எனச் சொல்ல முடியாது. இரண்டு மாநிலங்களின் செக்போஸ்ட், பத்து - பதினைந்து மாவட்ட செக்போஸ்ட்களைக் கடந்து அவர்களை அழைத்துவருவது நோய்த்தொற்று சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்றார்.

அம்மாவும் அப்பாவும் எப்போது வருவார்கள் என ஏங்கும் குழந்தைகளுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism