Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைகிறது?!

Petrol Price
News
Petrol Price

ஜார்கண்ட் முதலமைச்சரின் அதிரடி ஆஃபர்!

‘கச்சா எண்ணெய் உற்பத்தி விலை குறைந்தால்தான் பெட்ரோல்/டீசல் விலை குறையும்!’

‘பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசின் கையில் இல்லை!’

என்று நம் ஊரில் வெரைட்டியாக வாக்குமூலங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில்… ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேன், ஒரு ஜாக்பாட் பரிசொன்றை வாகன ஓட்டிகளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் போடும் வாகன ஓட்டிகளுக்கு அன்றைய பெட்ரோல் விலையில் இருந்து 25 ரூபாய் தள்ளுபடி’ என்று அறிவித்திருக்கிறார்.

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சொரேன்
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சொரேன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரும் குடியரசு தினமான புத்தாண்டின் ஜனவரி 26–ம் தேதியில் இருந்து இது ஜார்கண்டில் அமுலுக்கு வருகிறது. ஆனால், ஒரு விஷயம் – இது டூ–வீலர்களுக்கு மட்டும்தான். கார்கள் மற்றும் டீசலுக்கு இந்த டிஸ்கவுன்ட் கிடையாது. ‘இதற்குப் பின்னால் என்ன லாஜிக்’ இருக்கிறது என்பது கொஞ்சம் டச்சிங்காகவே இருக்கிறது.

‘‘பெட்ரோல் விலை நானும் குறையும் என்று எதிர்பார்த்தால்… அது ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் மிடில் க்ளாஸ் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். சில ஏழை வாகன ஓட்டிகள், பெட்ரோல் போடப் பயந்து தங்கள் டூ–வீலரை எடுக்கவே முடிவதில்லை. அதனால்தான் என் தலைமையிலான இந்த அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஜனவரி 26–ம் தேதியில் இருந்து இந்த 25 ரூபாய் தள்ளுபடி அமுலுக்கு வருகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேன்.

பெட்ரோல் போடும்போதே இந்தத் தள்ளுபடி கிடையாது. இந்தத் தள்ளுபடித் தொகையானது Cashback ஆஃபர் மாதிரி மக்களின் வங்கிக் கணக்குக்குப் போய்ச் சேருமாம். ஒருவருக்கு 10 லிட்டர் பெட்ரோல் வரை இந்த 25 ரூபாய்த் தள்ளுபடி பொருந்துமாம். ஆனால், இது ஒரு நாளைக்கா… வாரத்துக்கா… மாதத்துக்கா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த கேஷ்பேக் ஆஃபர், ஜார்கண்ட் மக்களுக்கு வரப்பிரசாதம்தான். ஆனால், இதன் மூலம் ஜார்கண்ட் அரசுக்குப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதை எப்படி ஜார்கண்ட் முதல்வர் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் மற்ற மாநில முதல்வர்களின் யோசனையாக இருக்கும்.