Published:Updated:

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கோனிகா தூக்கிட்டு தற்கொலை! -4 மாதங்களில் 4 பேர் தற்கொலையால் அதிர்ச்சி

கோனிகா லாயக்
News
கோனிகா லாயக்

வறுமையின் காரணமாகத் துப்பாக்கியைக் கடனாக வாங்கிகொண்டிருந்த கோனிகா, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்போது சில சிக்கல்களைச் சந்தித்தார். இதை அறிந்த நடிகர் சோனு சூட் கடந்த மார்ச் மாதம் ஒரு புத்தம் புதிய ஜெர்மன் துப்பாக்கியைப் பரிசாக வழங்கினார்.

தேசிய துப்பாக்கிச்சுடும் வீராங்கனையான கோனிகா லாயக் தனது விடுதியில் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு வீரர்கள் \ வீராங்கனைகள் தொடர்பாக நடந்த நான்காவது தற்கொலை மரணம் என்பதால் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது.

இது குறித்துக் கிடைத்திருக்கும் தகவலின்படி தற்போது கோனிகா, கொல்கத்தாவின் முன்னாள் ஒலிம்பியனும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்றுவந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``கடந்த 10 நாள்களாக கோனிகா பல பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவில்லை. சில காரணங்களால் அவர் தொந்தரவுக்கு ஆளாகியிருந்தார். அதுமட்டுமின்றி அக்டோபரில் நடந்த தேசிய தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்” என்றும் தெரிவித்தார்.

கோனிகா லாயக்
கோனிகா லாயக்

மேலும், கோனிகா இலக்கைச் சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு போட்டியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பேசிய ஜாய்தீப் கர்மாகர், ``துப்பாக்கிச்சுடுதலில் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. இது கோனிகாவைச் சற்றுச் சோர்வடையவைத்தது, எனினும், அதை மறந்து நன்றாகத் தேறிவந்தார். அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது, என்ன நடந்தது, எது அவளை இப்படியான நடவடிக்கைக்குத் தள்ளியது என்ற காரணம் ஏதும் எனக்குத் தெரியாது, நாங்களே இந்தச் செய்தியைக் கேட்டு மனமுடைந்துள்ளோம்" என்று கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வறுமையின் காரணமாக துப்பாக்கியைக் கடனாக வாங்கிக்கொண்டிருந்த கோனிகா, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்போது சில சிக்கல்களைச் சந்தித்தார். இதையறிந்த நடிகர் சோனு சூட், கடந்த மார்ச் மாதம் ஒரு புத்தம் புதிய ஜெர்மன் துப்பாக்கியைப் பரிசாக வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ட்விட்டரில் கோனிகா, தங்கள் குடும்பம் மற்றும் கிராமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்திருந்தார். கோனிகா, மாநிலங்கள் அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல மெடல்களை வாங்கியுள்ளார்.

துப்பாக்கிச்சுடுதல் வட்டாரத்தில் கடந்த நான்கு மாதங்களில் இதுவரை நான்கு தற்கொலை மரணங்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்று தற்கொலைகள் பஞ்சாப்பைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தைப் பல கோணங்களில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

சோனு சூட் - கோனிகா
சோனு சூட் - கோனிகா

மேலும் போலீஸார் கோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கோனிகா தற்கொலை செய்துகொண்ட அறையில் கடைசியாக எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர். அதில் தான் மிகுந்த மன வருத்ததில் இருப்பதாக அவர் கூறியிருந்தார் என்றும், உடற்கூறாய்வு முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.