Published:Updated:

விதிகளை மீறி முதுமலையில் கேபிள் பதிக்கிறதா ஜியோ?

முதுமலை
பிரீமியம் ஸ்டோரி
News
முதுமலை

அரிய வகைத் தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ்வன, நீர்-நில வாழ்வன, ஊர்வன என எண்ணிலடங்கா காட்டுயிர்கள் இங்கே பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

‘‘புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, மசினகுடி மற்றும் மாயார் வனப்பகுதியில் 15 கி.மீ பள்ளம் தோண்ட ஜியோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சட்ட மீறல், பூர்வீகமாக இந்தக் காட்டில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின் அடிப்படை உரிமைகளையும் கருத்தையும் பறிக்கும் நடவடிக்கை’’ என்று தகிக்கிறது முதுமலை.
விதிகளை மீறி முதுமலையில் கேபிள் பதிக்கிறதா ஜியோ?

முதுமலை புலிகள் காப்பகம் வெறுமனே புலிகளுக்கான காப்பகம் மட்டுமல்ல... அழிவின் விளிம்பில் தவிக்கும் எண்ணற்ற காட்டுயிர்களின் கடைசிப் புகலிடம். பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து 321 சதுர கி.மீ பரப்பளவில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இந்தச் சரணாலயம், தற்போது 688 சதுர கி.மீ பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரிய வகைத் தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ்வன, நீர்-நில வாழ்வன, ஊர்வன என எண்ணிலடங்கா காட்டுயிர்கள் இங்கே பாதுகாக்கப்பட்டுவருகின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்தை மீறி 15 கி.மீ தொலைவுக்கு கேபிள் பதிக்க ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார் கிளம்பியுள்ளது.

விதிகளை மீறி முதுமலையில் கேபிள் பதிக்கிறதா ஜியோ?

இந்த விவகாரம் குறித்து முதுமலை பழங்குடிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘வன நிலங்களில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி உள்ளூர் கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். இதை நன்கு அறிந்திருந்தும், பழங்குடி மக்களின் கருத்தைக் கேட்காமலேயே ஜியோ நிறுவனத்தின் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காகச் சில அதிகாரிகள் சட்டத்தை மீறி இதற்கு அனுமதியளித்துள்ளனர். எனவே, இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த்திடம் கேட்டோம், ‘‘கேபிள் பதிக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனம் இணையத்தில் விண்ணப்பித்திருந்தனர். புதிதாக வனத்துக்குள் எந்தப் பணியும் மேற்கொள்ள அனுமதி வழங்குவதில்லை. ஏற்கெனவே உள்ள சாலை ஓரத்தில்தான் கேபிள் பதிக்கவிருக்கிறார்கள். இதனால் மரங்களுக்கோ வன விலங்குகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

விதிகளை மீறி முதுமலையில் கேபிள் பதிக்கிறதா ஜியோ?

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அது சம்பந்தமாக எந்தக் கோப்பும் எங்கள் பார்வைக்கு வரவில்லை. வந்ததும் உரிய முடிவு எடுக்கப்படும்’’ என்றார்கள்.