Published:Updated:

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 4 -உயர் பதவிகள் உங்களுக்கும் சாத்தியமே...

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 4 -உயர் பதவிகள் உங்களுக்கும் சாத்தியமே...

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

Published:Updated:
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

சீதாவும், குமாரும் ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்து வருட அனுபவத்துக்குப் பிறகும் குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளும் உயர் பதவியும் சீதாவுக்கு மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால்.. ‘பெண்கள் எமோஷனல் ஆனவர்கள்’, ‘குடும்ப கமிட் மென்ட் அதிகம்’ என்று அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் பல. இதுபோன்ற முன்முடிவுகளைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் துறையில் உச்சம் தொடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மகேந்திரா வேர்ல்டு சிட்டி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாரதி.

பாரதி
பாரதி

“குடும்பம், குழந்தை, அலுவலகம் போன்ற கமிட்மென்ட்டுகளையும் சுமக்க வேண்டியதால் பெண்களுக்கு கரியரை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட முடிவதில்லை. அதனால்தான் பெண் களுக்கு உயர் பதவிகள் எளிதில் வாய்ப்ப தில்லை. ஆனாலும் இதை மிக எளிதாகக் கையாள முடியும்.

செய்ய வேண்டியவை:

குடும்ப பொறுப்புகளையும், அலுவலக பொறுப்புகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துசெய்வது அவசியம். ‘நானே செய்தால்தான் எனக்கு திருப்தி’ என்ற எண்ணம் தேவையில்லை.

பொறுப்புகளை பகிர்ந்துகொள்வதில் குடும்பத்தாருக்கு சிக்கல் இருந்தால், உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை ஒதுக்கி, வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் செய்ய ஒருவரை பணி அமர்த்தி, ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக இருங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை, அவர்களின் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என நினைத்தால், ஹோம் டியூஷனுக்கு ஏற்பாடு செய்யுங்கள். கிடைக்கும் சில மணி நேரத்தை குழந்தை களுடன் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்.

‘‘பெண்களுக்கு இது தெரியாது’, இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்’ என்ற விமர்சனங்களைத் தவிர்க்க, வேலையில் அப்டேட் ஆக வேண்டியது அவசியம்.

உங்களுக்கு தலைவராக இருப்பவர் மட்டுமன்றி உயர் பதவியில் இருப்பவர் களிடமும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். சின்ன வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கோபம், சந்தோஷம் எல்லாவற்றையும் சரியாகக் கையாளத் தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஆண், ஒரு பணியை முழுமையாகச் செய்ய வில்லை என்றால், அதற்காக கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை, உங்களின் கோபம், உங்கள் துறையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.

அலுவலகத்தில் அழுவது உங்களை பலவீன மானவராகக் காட்டும். ஆளுக்கோர் அறிவுரை சொல்வார்கள். அதைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் மற்றவர்களைப் பார்த்து எதையும் ஃபாலோ செய்யாதீர்கள். நீங்களே சுயமாக முடிவெடுங்கள்.

பெண் என்கிற காரணத்துக்காக பிறர் இரக்கப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள். ‘ஆணுக்கிங்கே இளைப்பில்லை காண்’ என்பதை எப்போதும் துணிந்து வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 4 -உயர் பதவிகள் உங்களுக்கும் சாத்தியமே...

குடும்பம், குழந்தை, அலுவலகம் என்று 360 டிகிரியில் சுழலும் பெண்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், பல கோணங்களில் ஆராய்வதால் முடிவு எடுக்க தாமதம் ஆகலாம். ஆனால் அந்த முடிவு தவறாகாது என்பதை உங்கள் ஆட்டிட்யூட் மூலம் வெளிப்படுத்துங்கள்.

உயர் பதவியில் இருந்தாலும், சில நேரங்களில் உங்கள் பதவிக்குக் கீழ் இருப்பவர்களின் ஐடியாக்கள், கருத்து களைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இறுதியாகத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பர் களாக இருந்தாலும், ஆவணங்களில் கையெ ழுத்து போடும் முன்பும், அலுவலக அறிவிப்பு களைத் தெரிவிக்கும் முன்பும் கவனமாக இருங்கள். வாய்மொழியாக இல்லாமல் எல்லா வற்றையும் மெயில் மூலம் பதிவிடுவது நல்லது.

பண்பில் ஆட்டிட்யூட் காட்ட வேண்டாம். தோழமை உணர்வுடன் தட்டிக்கொடுத்து எல்லோரிடமும் வேலை வாங்குங்கள்.

செய்யக்கூடாதவை:

* நெருங்கிய நட்பு வட்டத்திடம்கூட, உங்களின் பர்சனல் விஷயங்களை அலுவலகத்தில் பகிராதீர்கள்.

* மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது,தேவையில்லாத விமர்சனங் களைப் பகிர்வது போன்றவை வேண்டாம்.

* யாரிடமும் எமோஷனலாக கனெக்ட் ஆகாதீர்கள்.

* ஊதியப் பாகுபாடு நிகழும்போது, துணிந்து எதிர்த்துக் கேள்வி கேளுங்கள்.

* மற்றவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism