தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”

கோவை ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை ஜாலி டே

‘ஜாலி டே’ நிகழ்ச்சியின் ஸ்பான்ஸர்கள் நடத்திய `ஆன் தி ஸ்பாட்’ போட்டிகளில், உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிச் சென்றனர் வாசகிகள்.

அவள் விகடன் மற்றும் ப்ரித்வி இன்னர் வேர்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கிய ‘ஜாலி டே’ செப்டம்பர் 24, 25-ம் தேதிகளில் கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் கோலாகலமாக நடந்தது. அரங்கம் நிரம்ப கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந் தனர் வாசகிகள்.

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் என்.ஆர்.அலமேலு, ப்ரித்வி இன்னர் வேர்ஸ் மேலாண் இயக்குநர் எஸ்.பாலன், எஸ்.ஆன்.ஆர் குழுமத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிரகதீஸ்வரன், விகடன் முகவர்களான ராதா, இந்திராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்ற, சிறப்பாகத் தொடங்கியது விழா. தேஜஸ்ஸ்ரீயின் வரவேற்பு நடனம் விழா மேடையை அழகாக்க, தொகுப்பாளர் தீபிகாஷி மேடையைக் கலகலப்பாக்கினார். `கை தட்டுறது எல்லாம் பழைய ஸ்டைலுங்க’ என விசில் தெறிக்கவிட்டனர் கோவை பெண்கள்.

முன்னதாக, முதல் நாள் செப்டம்பர் 24-ம் தேதி முன்தேர்வுப் போட்டிகள் நடந்தன. ரங்கோலி, மெஹந்தி, அடுப்பில்லா சமையல், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், நடிப்பு, நடனம், பாட்டு, பட்டிமன்றம், ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஆர்.ஜே/வி.ஜே எனப் பல பிரிவுகளிலும் கலக் கினர் பெண்கள். மறுநாள் செப்டம்பர் 25-ம் தேதி, இறுதிப் போட்டிகளும் பரிசுக் கொண் டாட்டங்களும் ஆரவாரத்துடன் நடந்தேறின.

“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”
“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”

`` `ஜாலி டே'ல முதல்முறையா கலந்து கிட்டேன். அதோட மட்டும் இல்லாம போட்டி கள்ல கலந்துகிட்டு பரிசும் வாங்கினேன். என்னோட திறமைகளை வெளிப்படுத்த சரியான மேடை கிடைச்சதுல ஹேப்பி'' என்றார் ஸ்ரீராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சௌமியா.

விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி பாலா மற்றும் விக்கி சிவா என்ட்ரி கொடுத்து, சிவாஜி முதல் ஷிவாங்கி வாய்ஸ் வரை பேசி அரங்கை அதிரச் செய் தனர். ஆனால், அவர்களையும் ஓவர்டேக் செய்து, ஓவர்லோடட் எனர்ஜியுடன் விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஜெயலட்சுமி பாட்டி. அரங்கில் பாட்டி டான்ஸ் ஆடி செய்த அட்ரா சிட்டியை பார்த்து பாலா அவரை மேடைக்கு அழைத்துப் பேசியபோது, ``நான் கோவையில `ஜாலி டே' நடக்கும்போதெல்லாம் தவறாம கலந்துக்குவேன். ஒரு வருஷத்துக்கான எனர்ஜியை அந்த ஒரே நாள்ல நமக்கு ஏத்திருவாங்க. ஆனா, கொரோனாவால ரெண்டு வருஷமா ஜாலி டே நடக்காத ஏக்கம் எனக்கு நிறையவே இருந்துச்சு. அந்த ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்துக் கொண்டாட வந்தேன் இன்னிக்கு’’ என்ற வர் துள்ளல் ஆட்டம் போட, அவருடன் ஜோடி போட்டு ஆடினார் வாசகி மீனா.

“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”
“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”

‘ஜாலி டே’ நிகழ்ச்சியின் ஸ்பான்ஸர்கள் நடத்திய `ஆன் தி ஸ்பாட்’ போட்டிகளில், உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிச் சென்றனர் வாசகிகள். கலர்ஸ் தமிழ் நடத்திய சீரியல் தொடர்பான கேள்விகளுக்கு கில்லியாக சொல்லி அடித்தனர் வாசகிகள். ப்ரித்வி இன்னர்வேர்ஸ் சார்பில் உள்ளாடை அணிவது பற்றிய விழிப்புணர்வு கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதில் அளித்த ஐந்து வாசகிகளுக்கு பரிசுக்கூப்பன்கள் வழங்கப் பட்டன. ‘ஆச்சி மசாலாவின் அனைத்துப் பொருள் களையும் ஒரு நிமிடத்தில் பார்த்துவிட்டு, பிறகு பார்க்காமல் எழுதிக் காட்டுங்கள்’ என்று அந்நிறுவனத் தினர் போட்டி வைக்க, கடகடவென பொருள்களை எழுதி பரிசுகளைத் தட்டிச் சென்றனர் தோழிகள். சுப்ரீம் ஃபர்னிச்சர்ஸ் நடத்திய ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டில், குழந்தை குதூகலத்துடன் விளையாடி மகிழ்ந்து, பரிசுகள் பெற்றனர். ஜி.ஆர்.டி சார்பில், தங்க வளையலைக் கையால் தூக்கிப் பார்த்து அதன் எடையை சரியாகக் கணிக்கும் போட்டியில், `கையில தூக்கிப் பார்க்கிறது என்ன... நாங்க கண்ணாலேயே எடை போடுவோம்’ என்பதுபோல, அசத்தலாக எடை யைக் கணித்துப் பரிசுகளை அள்ளினர் வாசகிகள். இப்படிப் பல போட்டிகள் நடக்க, நேரம் நகர நகர உற்சாகம் கூடிக்கொண்டே போனது.

“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”
“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”

`வள்ளி திருமணம்’ சீரியலின் ஹீரோ ஷியாம், ஹீரோயின் நட்சத்திரா மேடைக்கு வந்து கூட்டத்துக்கு ‘ஹாய்’ சொன்னார்கள். அரங்கின் ஒலி காதைக் கிழித்தது. ஷியாம், ``என் ஊர் கோவைதானுங்க’’ என்று சொல்ல, வாசகிகளின் உற்சாகம் இரண்டு மடங்கானது. ``இவர்களிடம் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். கேள்வி களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்’’ என்று தொகுப்பாளர் கூற, ‘கரும்பு தின்னக் கூலியா?!’ என்றபடியே, இன்ஸ்டன்ட் தொகுப்பாளராக மாறினர் நம் தோழிகள். கேள்விகள் பறந்தன. இறுதியில், ஷியாம், நட்சத்திராவுடன் ஆட்டம் போட்டும் அசத்தினர்.

இறுதியாக, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கும் தருணம். அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய வாசகி களுக்குப் பரிசுகள் கைக்கொள்ளாமல் வழங்கப்பட, க்ளை மாக்ஸில் அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த ‘த்ரில்’ நிமிடம்... `பம்பர் பரிசு பெறப்போகிறவர் யார்?’ அவ்வளவு நேரம் பேச்சொலியும் சிரிப்பொலியும் கேட்டுக் கொண்டிருந்த அரங்கம் அந்த நிமிடம் அமைதியானது.

அவள் விகடன் வழங்கிய, ரூ.20,000 மதிப்பிலான பம்பர் பரிசுக்குரிய கூப்பன், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டது. ‘யார்? அது யார்?’ என்று வாசகிகள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருக்க, கவுன்ட்டௌன் ஆரம்பித்தது. இறுதியில் ‘அமுதா...’ என்று தொகுப்பாளர் தீபிகாஷி பரிசுக்குரியர் பெயரை கூப்பன் எண்ணுடன் அறிவிக்க, ‘என்ன? நானா?!’ என்று நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் மேடைக்கு ஓடிவந்தார் அமுதா.

“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”
“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”
“பையன்தான் அனுப்பிவெச்சான், பம்பர் பரிசு கிடைச்சிருச்சு!”

“நான் இதுவரைக்கும் வெளிய இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் போனதில்ல. ’ஜாலி டே’க்குதான் முதல் முறையா வந்தேன். வீட்டுல, பேசக்கூட பயப்படு வேன். என் பையன்தான், `நீ போய் சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வாம்மா’னு அனுப்பிவெச்சான். காலையில வந்ததுல இருந்தே செம மகிழ்ச்சியா இருந்தது. நீங்க பேரு வெச்சிருக்கிற மாதிரி, இது செம்ம `ஜாலி டே'தான். இப்போ என் கை நிறைய பரிசும் கொடுத்திருக்கீங்க. என் னால நம்பவே முடியல” என்றார் ஆனந்தக் கண்ணீரோடு!

மீண்டும் மகிழ்வித்து மகிழ்வோம்... அடுத்த ‘ஜாலி டே’யில்!