வெயிலுக்கு இதமான சுற்றுலா தலத்தில், பிரதான இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் எதிரே அசைவ உணவகம் ஒன்று இருக்கிறது. ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வருபவர்களிடம், ‘‘பெரியய்யா, சின்னய்யா என எட்டு பேர் சாப்பிட சிக்கன், மட்டன் சாப்பாட்டுக்கு பில் கொடுத்துட்டுப் போங்க... மறக்காம அந்த காடை ரோஸ்ட் ஆர்டர் பண்ணிடுங்க’’ என்று ஸ்டேஷன் ரைட்டர் சொல்கிறாராம். புகார் கொடுக்க வருபவர்கள், வேறு வழியின்றி பில் கொடுத்துவிட்டு நொந்தபடி செல்கிறார்களாம். இது போதாதென்று ஸ்டேஷனில் இருக்கும் சிலர் அந்த அசைவ உணவகத்திலிருந்து வீட்டுக்கும் பார்சல் வாங்கிச் செல்கிறார்களாம். அதற்கும் புகார் கொடுக்க வருபவர்கள்தான் பில் கொடுக்கிறார்களாம். அதனால், ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

வெயிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டத்தில், ‘சத்தான’ காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டரின் லீலைகள் குறித்து 10.01.2021 தேதியிட்ட ஜூ.வி ‘வாக்கி டாக்கி’ பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். பெண் இன்ஸ்பெக்டரின் ‘புனித’மான செயல் விஸ்வரூபமெடுக்க, உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களையும் கண்களாலேயே வசியம் செய்த பெண் இன்ஸ்பெக்டர், ஸ்டைலான நடைபோட்டு காவல் நிலையத்துக்கு பவுசாக வந்துசேர்ந்திருக்கிறார். தகவல் வெளியில் தெரிந்ததற்குக் காரணம் ஜீப் டிரைவர்களாகத்தான் இருக்கும் என்று அவர்களைக் கடிந்துகொண்டதோடு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டாராம். தற்போதும் ஸ்டேஷனில் கண்கூசும் அளவுக்கு விஷயங்கள் கச்சிதமாக அரங்கேறுகின்றனவாம்.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஹேமந்த் மீது, மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது புதிய புகார் இல்லையாம். 2011-ம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள். சரி, இதில் என்ன விவகாரம் என்கிறீர்களா? இந்தப் புகாரில் ஹேமந்த் மட்டுமன்றி, கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரின் வாரிசுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், வாரிசை லூசில் விட்டுவிட்டதாம் போலீஸ். வழக்கிலிருந்து வாரிசு தப்பிக்க உதவிய பிரகாசமான அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு போனில் நன்றி தெரிவித்த குமரிப் பிரமுகர், அடுத்து ஆட்சிக்கு வந்தால், பவர்ஃபுல் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறாராம்.

டெல்டா மாவட்டத்தில் குழந்தையின் பெயரைக்கொண்ட காவல் நிலையத்தின் கட்டடம் பழுதடைந்திருப்பதால், அருகிலுள்ள காவலர்கள் குடியிருப்பில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டுவருகிறது. அங்கு பணியாற்றும் அதிகாரி ஒருவர், ‘ஸ்டேஷனைச் சீரமைக்க வேண்டும்’ என்று புகார் கொடுக்க வருபவர்களிடமும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களிடமும் வசூல் வேட்டை நடத்துகிறாராம். இதனால், அவரைக் கண்டாலே பதறும் பலரும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இதுவரை ஐந்து லகரத்துக்கும் மேல் வசூலித்த அந்த அதிகாரி, ஸ்டேஷனைக் கட்ட ஒரு செங்கல்லைக்கூட வாங்கவில்லையாம். இது குறித்து எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் சென்றும், எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த அளவுக்கு அதிகாரிக்கு எஸ்.பி அலுவலகத்தில் செல்வாக்கு என்கிறார்கள்.

புயல் அடிக்கடி கரையைக் கடக்கும் மாவட்டத்திலிருக்கும் கூரியர் நிறுவனத்துக்கு வந்த ஒரு பார்சலில் 250 கிலோ எடையுள்ள போதைப்பொருள்கள் இருந்திருக்கின்றன. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கூரியர் நிறுவன ஊழியர்கள் தகவல் தெரிவிக்க... பார்சலைப் பறிமுதல் செய்த போலீஸார், போதைப்பொருள்களை வாங்க வந்தவர்களிடம் பேரம் பேசி, கணிசமான பணத்தைக் கறந்திருக்கிறார்கள். பெயருக்கு வேறொரு நபர்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், போதைப்பொருளின் எடையையும் 80 கிலோ எனக் குறைத்து காண்பித்திருக்கிறார்களாம். ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா’ என்று மகிழ்ச்சியில் கூவுகிறார்கள் சம்பந்தப்பட்ட போலீஸார்!