Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

பன்ச் அடிக்கும் டி.எஸ்.பி!

ஜூனியர் வாக்கி டாக்கி

கொங்கு மண்டலத்தில் அதிகாரிகள் பலரும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க-வினர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொகுதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட யாரும் மாற்றப்படவில்லை. குறிப்பாக, அமைச்சருக்காக ரவுண்டுகட்டி வேலை பார்க்கும் டி.எஸ்.பி ஸ்ரீனிவாசலுவை ஒன்றும் செய்ய முடியவில்லையாம். “போலீஸ் கமிஷனர், எஸ்.பி-யையே மாத்தினாலும் நம்மள ஒண்ணும் பண்ண முடியாது” என்று பன்ச் அடித்துவருகிறாராம் டி.எஸ்.பி!

ஜூனியர் வாக்கி டாக்கி

அண்ணாமலையுடன் செல்ஃபி! - தூக்கியடிக்கப்பட்ட காவலர்...

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் குணசேகரன். இவர், தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதுவரை பிரச்னை எதுவுமில்லை. ஆனால், ஆர்வக்கோளாறால் செல்ஃபி படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சேலம் மாவட்ட எஸ்.பி தீபாகனிகருக்குத் தெரிந்ததும் கடுப்பானவர், ‘சீருடையில் பணியிலிருந்தபோது, அரசியல் கட்சி வேட்பாளருடன் செல்ஃபி எடுத்து விதிமீறலில் ஈடுபட்டார்’ என்று கூறி, குணசேகரனை ஆயுதப்படைக்குத் தூக்கியடித்திருக்கிறார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“ஆட்சிக்கே வரலை... அதுக்குள்ளயா?”

வேலூர் மாவட்டத்தில் பாண்டியன் என்பவர் சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினர் சிலரை போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்துவந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தி.மு.க உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் தி.மு.க வேட்பாளர் ஒருவர், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, “அடுத்தது எங்க ஆட்சிதான்.

பாண்டியன் கொலை வழக்குல நீங்க விசாரணைக்காக அழைச்சுட்டு வந்தவங்க எங்க கட்சிகாரங்க. அவங்களை விட்டுடுங்க” என்று அதட்டலாகக் கூறியிருக்கிறார். ‘நமக்கு ஏன் வம்பு?’ என்று இன்ஸ்பெக்டரும் அவர்களை அனுப்பிவிட்டார். அடுத்தநாளே கொலையாளிகள் நீதிமன்றத்திலும் சரண்டர் ஆகிவிட்டார்கள். “ஆட்சிக்கே இன்னும் வரலை... அதுக்குள்ள சட்டம் ஒழுங்கை கையில எடுத்துக்கிட்டாங்களே” என்று புலம்புகிறார்கள் வேலூர் காக்கிகள்!