Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஸ்வீட்’ அதிகாரியை மிரளவைத்த பெண் அதிகாரி!

சென்னையின் ‘ஸ்வீட்’ ஐ.பி.எஸ் அதிகாரி, குறிப்பிட்ட பிரிவு அதிகாரிகளை அழைத்து பர்சனல் மீட்டிங் நடத்தியிருக்கிறார். அந்தப் பிரிவுக்குப் புகாராக வரும் டீலிங் மேட்டர்களில், ஸ்வீட் அதிகாரி கேட்கும் பங்குத் தொகையைக் கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். ‘எல்லாத்துலயும் பங்கு கேட்டா விசாரணை எப்படி நேர்மையா நடக்கும்?’ என்று அந்தப் பிரிவின் அதிகாரிகள் புலம்பிவந்த நிலையில்தான், இரண்டெழுத்து ரேங்க்கில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர், “எனக்குத் தெரியாம ரகசிய மீட்டிங் நடத்தினா எப்படி?’’ என்று ஓப்பனாகவே கேட்டு ஸ்வீட் அதிகாரியை மிரளவைத்திருக்கிறார். இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்னவாகுமோ என்று உள்ளுக்குள் கலக்கத்தில் இருக்கிறாராம் ஸ்வீட் அதிகாரி!

ஜூனியர் வாக்கி டாக்கி

கந்துவட்டி கும்பலுடன் கைகோத்த காக்கிகள்!

ஆரணி நகரில் கந்துவட்டி கும்பலுடன் கைகோத்து மிரட்டும் காக்கிகளால் பீதியில் உறைந்திருக்கிறார்கள் நெசவாளர்கள். கொரோனா முடக்கத்தால் தொழில் நசிந்துள்ள நெசவாளர்களின் வீடு தேடிப் போய் கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் கும்பல், பணத்தைத் திருப்பித் தர தாமதமானால் சொத்துகளை அபகரிப்பது, பெண்களை அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இது குறித்து ஆரணி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், “யாரைக் கேட்டு கடன் வாங்குனே?” என்று அலட்சியப்படுத்துகிறார்களாம். சமீபத்தில், 3,000 ரூபாய் கடனுக்காக நெசவாளர் ஒருவரை நடுத்தெருவில் வைத்து அவமானப்படுத்தியிருக்கிறது கந்துவட்டிக் கும்பல். இதில் மன உளைச்சல் அடைந்த அந்த நபர், தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, அந்தக் குடும்பத்தினரை மிரட்டி, புகாரை வாபஸ் வாங்கவைத்திருக்கிறார்கள் போலீஸார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

கணவருடன் செல்ஃபி... காதைக் கிழித்த பெண் போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு லட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த லட்டுகளைக் கொண்டு சென்ற பெண் காவலரின் கணவருடன், அங்கன்வாடியில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் செல்ஃபி எடுத்திருக்கிறார். அந்த செல்ஃபியைப் பார்த்த பெண் காவலர் ஆத்திரமடைந்து, சீருடையுடன் அந்தப் பெண் ஊழியரின் வீட்டுக்குச் சென்று, “என் புருஷன்கூட சேர்ந்து நின்னு போட்டோ எடுப்பியா... உனக்கு எவ்வளவு திமிரு” என்று கேட்டு, அவரை பெல்ட்டால் சரமாரியாக விளாசியிருக்கிறார். இதில் அந்தப் பெண் ஊழியரின் காது கிழிந்து தொங்கியிருக்கிறது. ரத்தம் சொட்டச் சொட்ட ஸ்டேஷனுக்கு வந்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், பெண் காவலர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை ஆயுதப்படைக்கு மாற்றியிருக்கிறார்கள் உயரதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism