Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

கொடுக்குற காசுக்கு மேல...

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகாவைச் சேர்ந்த ‘வித்தியாசமான’ போலீஸ் உயரதிகாரி ஒருவர் விளம்பரப் பிரியராக இருக்கிறாராம். தன்னைப் பற்றி ஊருக்குள் நாலு பேர் நல்லவிதமாகப் பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவர், ‘‘எதைப் பண்ணினாலும் பிளான் பண்ணிப் பண்ணணும்!” என முடிவெடுத்திருக் கிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால், தன்னைத் தானே புரொமோட் செய்வதற்குத் தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறார். தான் எங்கு சென்றாலும், என்ன விசாரணை செய்தாலும் அதன் புகைப்படங்களை உடனே தனது புரொமோஷன் குழுவுக்கு அனுப்பிவிடுவார். அந்தக் குழு ‘ஆஹா ஓஹோ...’ என்று எக்ஸ்ட்ரா பிஜிஎம்முடன் அதைச் சமூக வலைதளங்களில் பறக்கவிடுமாம். இதைப் பார்க்கும் போடிப் பகுதி மக்கள், `அடடா... இப்படியொரு ஆபீஸரா?’ என உச்சுக்கொட்டுவதும் நடக்கிறதாம். இந்த பில்டப்புகளைப் பார்த்து, ‘கொடுக்குற காசுக்கு மேல கூவுறானுங்களே...’ என சக அதிகாரிகள் காண்டானாலும், தவறாக எதுவும் நடந்துவிடவில்லை என்பதால், சிரித்தபடி கடந்து விடுகிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘இந்த டீல் நல்லாருக்கே!’’

கரூர் - திருச்சி வழியிலிருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றிய யாசகப் பேர் கொண்ட அதிகாரி கல்லா கட்டுவதிலும், புகார் சொல்பவர்களைச் சரிக்கட்டுவதிலும் கில்லி. மணல் கொள்ளை மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டிருக்கும் ஆளுங்கட்சியினர், இந்த அதிகாரியை மாதந்தோறும் கவனித்துவிடுகிறார் களாம். அதற்குக் கைமாறாக மணல் கொள்ளை பற்றிப் புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் குறித்த தகவல்களை ஆளுங்கட்சியினரிடம் போட்டுகொடுக்கும் காவல்துறை அதிகாரி, ``என்னைப்போல அவங்களையும் கவனிச்சுருங்க தலைவரே’’ என்று சொல்கிறாராம். ‘‘அட... இந்த டீல் நல்லாருக்கே’’ என்று ஆளுங்கட்சியினர், சமூக ஆர்வலர்களை சரிக்கட்டும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார் களாம். உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதையடுத்து, சமீபத்தில் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால், உள்ளூர் ஆளுங்கட்சி தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

உத்தமராசா உளவுத்துறை அதிகாரி!

கோவை உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ‘பாரதிராஜா பட’ அதிகாரி தற்போது சென்னையில் பணியாற்றுகிறார். கோவையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட காவல்துறைக்குச் சொந்தமான பைக்கை அவர் திரும்ப ஒப்படைக்காமல் இருந்திருக்கிறார். அந்த பைக்கில்தான் அவரின் மகன் கல்லூரிக்குச் சென்றுவந்திருக்கிறார். இந்தத் தகவல் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்ற பிறகே, காவல்துறைவசம் பைக் ஒப்படைக்கப்பட்டதாம். சென்னையில் பணியாற்றும் அவர், கோவையில் பயணப்படி வாங்குவது குறித்தும் சர்ச்சை எழுந் திருக்கிறது. மேலும், ஒவ்வொரு வார விடுமுறைக்கும் சென்னை டு கோவை விமானத்தில் வந்து செல்லும் அளவுக்கு அந்த உத்தம ராசா உளவுத்துறை அதிகாரிக்குக் காவல்துறையில் செல்வாக்கு இருக்கிறதாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘வசூலுக்கு நீ.... ஸ்டேஷனுக்கு வேற ஆள்!’’

ஈரோடு மாவட்ட காவல் துறையிலிருக்கும் ‘பழைய ஜோக்’ உயரதிகாரி ஒருவர் எதையும் கண்டுகொள்வதில்லையாம். அதனால், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற அதிகாரிகள் கன்னா பின்னாவென கல்லாகட்டுகிறார்களாம். போதைப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தாத வடக்குப் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டேய அதிகாரி ஒருவர், தனக்கு வேண்டப்பட்ட காவலரிடம், ‘‘வசூல் வேலையை நீ பார்த்துக்க... ஸ்டேஷன் வேலையை வேற ஆளைவெச்சு பார்த்துக்கறேன்” என வெளிப்படையாகவே பேசியிருக்கிறாராம். மார்க்கண்டேயரை வேறு இடத்துக்கு மாற்றிய பிறகும், பொறுப்பேற்க அங்கு செல்லாமல், இங்கே வசூல் வேட்டையைத் தொடர்ந்தபடி இருக்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

வசூல் ராணி ஐ.பி.எஸ்!

சென்னையில் பணியாற்றும் ‘பிரகாசமான’ பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையங்களில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இனிப்பான தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையின் மொத்த டீலராம். அவரின் உறவினர் ஒருவர் மாதந்தோறும் காடு, மலை பெயர்கொண்ட காவல் நிலையங்களுக்கும், ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் பதவி அடிப்படையில் லட்சங்களில் மாமூல் கொடுத்துவருகிறாராம். இந்தத் தகவலை காவல்துறை அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டிய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியோ, எந்த ரிப்போர்ட்டும் போடாமல் சிவனே என்றிருக்கிறாராம். காரணம், அவருக்கும் கட்டிங் செல்வதால்தான் என்கிறார்கள். தற்போது அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிமீது விஜிலென்ஸின் பார்வை விழுந்திருக்கிறதாம்.