Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி!

ஜூனியர் வாக்கி டாக்கி!
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி!

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூர் பெண் காவல் அதிகாரி ஒருவரை உயரதிகாரிகள் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில்

ஜூனியர் வாக்கி டாக்கி!

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூர் பெண் காவல் அதிகாரி ஒருவரை உயரதிகாரிகள் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி!
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி!

புதுச்சேரியில் அதிகரித்த மசாஜ் மாமூல்!

புதுச்சேரி நகரப் பகுதியில், சமீபகாலமாக மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதால், மாமூல் காக்கிகள் குஷியாகியிருக்கிறார்கள். மசாஜுடன் சேர்த்து பாலியல் தொழிலும் பிஸியாக நடப்பதால், அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்க செமயாக கல்லாகட்டுகிறார்கள். முன்பு ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் 20,000 ரூபாய் மாமூல் வசூலித்தவர்கள், தற்போது அதை 30,000 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். மேலும், `முடிந்தவரை உள்ளூர்க்காரர்களைத் தவிர்க்கவும்’ என்று அட்வைஸும் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, நகரப் பகுதி ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் கேட்டு படையெடுக்கும் காக்கிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி!

சொத்துகளைக் குவித்தாரா தஞ்சை இன்ஸ்பெக்டர்?

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூர் பெண் காவல் அதிகாரி ஒருவரை உயரதிகாரிகள் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்மீது சொத்துக்குவிப்பு புகார்களை அடுக்குகிறார்கள் சக காக்கிகள். ‘‘சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வாங்கியிருக்கிறார். அவர் இதுவரை சேர்த்துவைத்திருக்கும் சொத்து மதிப்பைக் கேட்டால் தலை கிறுகிறுத்துப்போய்விடும்’’ என்று உயரதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள். அத்துடன், ‘‘ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸ் யூனிஃபார்மே அவர் அணிவதில்லை. கர்ப்பிணி காவலர்கள் உடுத்தும் சேலையைத்தான் அணிகிறார். இதுவே வீதிமீறல்தான்’’ என்றும் சொல்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்தப் பெண் அதிகாரியோ, ‘‘கவனிக்க வேண்டிய எல்லாரையும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது’’ என பந்தாவாக வலம்வருகிறாராம்.

‘‘நைட் ரவுண்ட்ஸ்தான் வேணும்!’’

கரூரின் ‘மலை’ ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ ஒருவர், பகல் டூட்டியைவிட இரவு நேர ரவுண்ட்ஸ் டூட்டியைத்தான் அதிகம் விரும்புகிறார். நைட் ரவுண்ட்ஸ் போகும்போதுதான் பிளாக்கில் சரக்கு விற்பனை, கஞ்சா விற்பனை, பாலியல் தொழில், நெடுஞ்சாலையில் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்கள்... எனப் பல்வேறு விஷயங்களில் கல்லாகட்ட முடியும் என்பதால், மேலிடத்தில் அடம்பிடித்தாவது நைட் ரவுண்ட்ஸ் டூட்டியை வாங்கிவிடுகிறார். அதையும் மீறி உயரதிகாரிகள் வேறு யாரையாவது நைட் ரவுண்ட்ஸுக்கு அனுப்பினால், “உங்களுக்கு எதுக்கு சிரமம்... ஏன் உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?” என்று கேட்டு, டூட்டியை தனக்கு மாற்றிக்கொள்கிறாராம். இவரைப் பார்த்து சக காக்கிகள், “ஜெகஜ்ஜால ஜித்தன்யா... கல்லாகட்டுறதுக்கு எப்படியெல்லாம் ரூட் பிடிக்கிறாரு...” என்கிறார்கள் நமட்டுச் சிரிப்புடன்.

ஜூனியர் வாக்கி டாக்கி!

இரட்டை அர்த்தத்தில் பேசும் ஏட்டு!

தூத்துக்குடி நகரின் காவல் நிலையம் ஒன்றில் இருக்கும் மூன்றெழுத்து ஏட்டு ஒருவர் ஜொள்ளு பார்ட்டியாம். பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருக்கும் பெண்களிடம் வெரிஃபிகேஷன் என்ற பெயரில் தனிப்பட்ட விஷயங்களை விசாரித்து, தெரிந்துகொள்வார். தொடர்ந்து போனில் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். சமீபத்தில் இப்படித்தான் அந்த ஏட்டு கடற்கரை ஏரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேச, புகார் உள்ளூர் தி.மு.க பெண் வி.வி.ஐ.பி-க்குச் சென்றிருக்கிறது. ஜொள்ளு ஏட்டை வீட்டுக்கு வரவழைத்த பெண் வி.வி.ஐ.பி., அவரைக் கடுமையாகக் கண்டித்ததுடன், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவைத்து அனுப்பினார். அதன் பிறகும் திருந்தவில்லை ஏட்டு. அடுத்த மூன்று நாள்களிலேயே பெண் காவலர் ஒருவரிடம் ஏட்டு இரட்டை அர்த்தத்தில் பேச... விவகாரம் எஸ்.பி அலுவலகம் வரை சென்றிருக்கிறது. ஆனாலும், ஏட்டு மீது நடவடிக்கை இல்லை. கேட்டால், அதிகாரி ஒருவரின் சாதிப்பாசம் என்கிறார்கள்!

‘‘லிஸ்ட் பெருசா போகுதே!’’

கோவையில் வி.ஐ.பி-க்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்றெழுத்து காவலர், எல்லாவற்றிலும் வேறு மாதிரி யோசிப்பவராம். சாலையோரத்திலுள்ள கடைகளில் தினசரி கட்டிங் வசூலிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு கடையிலும் தன் குடும்பத்தினரைவிட்டு பர்சேஸ் செய்துவிடுகிறார். மூன்று வேளையும் கையேந்தி பவன் உள்ளிட்ட உணவகங்களில் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள், பை நிறைய பார்சலும் வாங்கிச் செல்கிறார்களாம். லிஸ்ட் பெரிதாகச் செல்வதால், கடைக்காரர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.