Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

டெல்டா மாவட்டத்தில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார் கங்கைகொண்ட மன்னனின் பெயர்கொண்டவர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

டெல்டா மாவட்டத்தில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார் கங்கைகொண்ட மன்னனின் பெயர்கொண்டவர்.

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஒரு கோடிப்பே...’ கலாய்க்கப்படும் ஏட்டு!

கரூர் மாவட்டத் தெற்கு எல்லையிலிருக்கும் காவல் நிலையத்தில், அங்கு பணியாற்றும் காப்பியப் புலவரின் பெயர்கொண்ட ஏட்டு வைத்ததுதான் சட்டமாம். சமீபத்தில் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெரியவர், ‘என் மகளை சாமியார் ஒருவர் மயக்கிவைத்திருக்கிறார். அவளை மீட்டுத் தாங்க’ என்று புகார் கொடுத்தார். அந்தச் சாமியாரின் முதல் மனைவியும் ‘என் குழந்தையைக் கணவரிடமிருந்து மீட்டுத் தாங்க’ என்று புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டு புகார்களையும் ஸ்டேஷனில் சட்டை செய்யவில்லையாம். காரணம், சம்பந்தப்பட்ட சாமியாரிடம் அந்த ஏட்டு குறி கேட்டதில், ‘‘உங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கப்போகுது’’ என்று சொன்னாராம். அந்தக் கனவிலிருந்த ஏட்டு, நன்றிக்கடனாக சாமியாருக்கு எதிராக வந்த புகார்கள்மீது நடவடிக்கை இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். இதனால் கோபமான அந்தப் பெரியவர், உயரதிகாரி ஒருவரைப் பார்த்து குமுற, அதன் பிறகே சாமியார் மீது வழக்கு பதிந்து உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இப்போது ஏட்டு விவகாரம் வெளியில் கசிந்து “ஒரு கோடிப்பே...” என்று சினிமா பட டயலாக்கை வைத்து அவரை சக காவலர்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

திருடன் கையில சாவி!

டெல்டா மாவட்டத்தில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார் கங்கைகொண்ட மன்னனின் பெயர்கொண்டவர். கொரோனா ஊரடங்கு சமயத்தில், விதிகளை மீறி மது பாட்டில்கள் விற்கவைத்து தினமும் 50,000 ரூபாய் வரை வசூல் பார்த்துவந்தாராம். இது தொடர்பாகப் புகார் எழுந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பக்கத்து டிவிஷனுக்கு மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இது இவருக்கு இன்னும் வசதியாகிப்போனது. கள்ளத்தனமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்பவர்களிடம் டீல் பேசி இப்போது தினமும் கல்லாகட்டுகிறாராம். ‘திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்த கதையா இருக்கே’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் அவரைப் பற்றிய விவரம் அறிந்த காக்கிகள்.

‘கூகுள் பே’ இன்ஸ்பெக்டர்!

திருச்சியில் ஃபுட்செல் இன்ஸ்பெக்டராக இருந்த விண்வெளி வீராங்கனை பெயர்கொண்ட அதிகாரியை, ‘கூகுள் பே’ என்ற அடைமொழியோடு அழைக்கிறார்கள் சக காவலர்கள். கடலூர் மாவட்டத்தில் இவர் பணியாற்றியபோது விஜிலென்ஸ் வழக்கில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர், உயரதிகாரிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து திருச்சிக்கு வந்தார். விஜிலென்ஸில் சிக்கிய பிறகு மாமூலை நேரடியாகவோ, ஆட்கள் மூலமாகவோ வாங்குவதில்லையாம். வேறொருவரின் ‘கூகுள் பே’ அக்கவுன்ட் மூலம் மட்டுமே வாங்குவாராம். அவ்வளவு உஷாராக இருந்தும், கரூரில் பயோடீசல் விற்பனையாளர்களிடம் மாதந்தோறும் ‘கூகுள் பே’ மூலமாகப் பணம் வாங்கியது சமீபத்தில் தெரியவந்தது. அரியலூரிலும் பயோடீசல் வழக்கில் சிக்க இருந்தவர், அதிகாரிகளை கவனித்து தலைநகரத்துக்கு அருகே மாறுதலாகிச் சென்றிருக்கிறார். இங்கு லஞ்சம் வாங்க என்ன யுக்தியைக் கையாளப்போகிறாரோ?

பணத்துக்குத் தகுந்த மாதிரி மெனக்கெடுவார்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் ‘அறமான’ காவல் நிலையத்தில் பணிபுரியும் மில்க் தலைமைக் காவலர், இளம்பெண்கள் மிஸ்ஸிங் கேஸ்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவராம். அதனால், அந்தக் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இளம்பெண்கள் மிஸ்ஸிங் புகார்கள் இவரிடமே கொடுக்கப் படுகின்றனவாம். புகாரைக் கையில் வாங்கிய உடனேயே பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கக் கிளம்பிவிடுவாராம். முதலில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணத்தைக் கறந்துவிடுவாராம். பெற்றோர் கொடுக்கும் பணத்துக்கு ஏற்பதான் புகாருக்காக மெனக்கெடுவாராம். யாராவது பணம் கொடுக்க மறுத்தாலோ, குறைவான பணம் கொடுத்தாலோ, ‘‘உங்க பொண்ணு கண்டிப்பா கிடைக்க மாட்டா’’ எனப் பெற்றோரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டு வந்துவிடுவாராம். ‘விசாரணையில் இருக்கு’ என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டுக் கிடப்பில் போட்டு விடுவாராம். ‘‘பொண்ணையும் தொலைச்சு, பணத்தையும் தொலைக்கவேண்டியதா இருக்கே...’’ என்று தலையிலடித்துகொள்கிறார்கள் பெற்றோர்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘ரெஸ்ட்டே இல்லை...’’ - செல்லுமிடமெல்லாம் புலம்பல்!

தேனி மற்றும் பெரியகுளம் சப்-டிவிஷனில் தலா நான்கு காவல் நிலையங்கள் இருக்கும் நிலையில், எட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகளிர் தொடர்பான வழக்குகளை தேனி அனைத்து மகளிர் போலீஸார்தான் கவனித்தாக வேண்டும். சுமார் 50 கிமீ சுற்றளவு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ‘‘தேனி கலெக்டர், எஸ்.பி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பெண்களையும் நாங்கள்தான் கவனிக்கணும். ஒரு இன்ஸ்பெக்டர், நாலு எஸ்.ஐ உட்பட 27 பேரைவெச்சுக்கிட்டு நாங்க எவ்வளவு வேலைதான் பார்க்க முடியும்... ரெஸ்ட்டே இல்லாம வேலை பார்க்கவேண்டியிருக்கு’’ என்று செல்லுமிடமெல்லாம் தேனி மகளிர் போலீஸார் புலம்பிவருவதால், அவர்களிடம் புகார் கொடுக்கவரும் பெண்களே, ‘நம்ம துயரத்தைவிட இவங்களோட துயரம் பெருசா இருக்கும்போலருக்கே!’ என்று குழம்பிப்போகிறார்கள்!