Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

நில்.. கவனி... செல்... நாகர்கோவில் ரிப்பீட்டு!

நாகர்கோவில் சிட்டியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் ‘ராஜ’ அதிகாரியின் ‘ரிப்பீட்டு வசூல்’ அங்குள்ள டாரஸ் லாரி டிரைவர்களைப் புலம்பவைத்திருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து கருங்கல், ஜல்லி கொண்டு செல்லும் டாரஸ் லாரிகள் நாகர்கோவிலில் உள்ள அவரது காவல் நிலைய எல்லைக்குள் நுழைந்தாலே கப்பம் செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டுமென்பது எழுதப்படாத விதி. “அதுகூட ஓகே... ஆனா, லாரிக்கு காலையில் பணம் வாங்கினாலும், திரும்பவும் சாயங்காலம் காலியா வர்றப்பவும் பணம் கேட்குறாரு” என்று அழாத குறையாகப் புலம்புகிறார்கள் டிரைவர்கள். லாரி உரிமையாளர்கள் மேலிடம் வரை புகார் கொடுத்தும் அதிகாரியின் ரிப்பீட்டு வசூல் மட்டும் நிற்கவே இல்லையாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

தங்கமே தங்கம்! - திருச்சி பஞ்சாயத்து மன்னன்

திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள ‘மௌன்ட்டன்’ காவல் அதிகாரியை ‘பஞ்சாயத்து மன்னன்’ என்றே சக போலீஸார் அழைக்கிறார்கள். தமிழகத்தில் தங்கம் அதிகமாகக் கடத்தி வரப்படும் விமான நிலையங்களில் ஒன்று திருச்சி. அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்திவரும் ‘குருவி’களில் சிலர், தங்கத்தைச் சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகளிடம் கொடுக்காமல் தலைமறைவாகிவிடுகிறார்கள். இந்தப் புகார்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட ‘குருவி’களைப் பிடித்து, உருட்டி மிரட்டி ஏஜென்ட்டுகளிடம் பொருள்களைச் சேர்ப்பதில் இவர் படுகில்லி என்கிறார்கள். இதனாலேயே இவர் கடத்தல் ஏஜென்ட்டுகளின் ‘தங்கமாக’ மாறிவிட, இவரது சொத்து மதிப்பு சமீபகாலமாக கிடுகிடுவென உயர்ந்திருக்கிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஊட்டி காக்கிகள் அட்ராசிட்டி!

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள பி-1 காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவரும் காக்கிகள் சிலரது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. ஏரியாவில் குப்பை கொட்டுவது முதல் கார் பார்க்கிங் வரை ஒவ்வொரு நாளும் காக்கிகளுக்கிடையே வார்த்தைப் போர் வரிசைகட்டுகிறது. கேத்தி போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருக்கும் காக்கி ஒருவர், சமீபத்தில் தன் ஐந்து வயது மகனை எஸ்‌.பி அலுவலகத்துக்குத் தனியாக அனுப்பி, காக்கிகளின் அட்ராசிட்டியைப் பற்றி வாய்மொழியாகப் புகார் சொல்லவைத்திருக்கிறார். அதில் கடுப்பான எஸ்‌.பி ஆசிஷ் ராவத், அட்ராசிட்டி செய்துவரும் காக்கிகளைக் குடியிருப்பைவிட்டே காலி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கரூர் எஸ்.ஐ-யின் கறார் வசூல்!

கரூர் தெற்கு எல்லையில் இருக்கும் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றும் சோழ மன்னன் பெயர்கொண்டவரின் கறார் வசூலைக் கண்டு பாதிக்கப்பட்டவர்கள் கதறுகிறார்கள். சாதாரண கேஸை முடித்துக்கொடுக்கவே பாதிக்கப்பட்டவர்களை வாரக்கணக்கில் அலையவிடுவாராம். விபத்து கேஸை முடிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை ஃபிக்ஸ்டு ரேட் வைத்திருக்கிறார். சமீபத்தில் வழக்கு ஒன்றில் இவர் பத்தாயிரம் ரூபாய் கேட்க... சம்பந்தப்பட்டவரோ... “சார் ஒரு ஐந்நூறு ரூபா கம்மியா இருக்கு” என்று கொடுத்தாராம். “அப்படியா” என்று வாங்கிக்கொண்டவர், வேலை முடிந்த பிறகும்கூட ஐந்து நாள்கள் அலையவைத்த பிறகே டாக்குமென்ட்களை திருப்பிக் கொடுத்தாராம். “ஏன் சார் இப்படி?” என்று கேட்டதற்கு, “ஐந்நூறு ரூபான்னா சும்மாவா?” என்று கேட்டு அதிரவைத்திருக்கிறார்! இந்த வசூலுக்காகவே மூன்றெழுத்துப் பெயர்கொண்ட ஏட்டு ஒருவரை நியமித்திருக்கிறார் எஸ்.ஐ.

ஜூனியர் வாக்கி டாக்கி

பாலியல் தொழிலுக்குப் பரிந்துரை! - திருவாரூர் எஸ்.எஸ்.ஐ ஆல் இன் ஆல்...

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நகரில் சமீபகாலமாக, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆல் இன் ஆலாக இருக்கிறார் சூரியப் பெயர்கொண்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர். புறக்காவல் நிலையம் ஒன்றில் இவர் பணியாற்றினாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.பி.சி.ஐ.டி-யில் பணியாற்றியதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி காவல்துறையினரிடம் இவருக்கு நன்கு பரிச்சயம் உண்டு. வெளிமாவட்டங்களிலிருந்து, சொகுசு கார்களில் இப்பகுதிக்கு ஏடாகூடமான பெண்களை புரோக்கர்கள் அழைத்து வரும்போது காவல்துறையினர் வழிமறித்தால், உடனடியாக அந்த எஸ்.எஸ்.ஐ-யிடமிருந்து அலைபேசி அழைப்பு வருமாம். “நான்தான் பேசறேன்... அவங்க எங்க கெஸ்ட்தான்...” என்று பவ்யமாகப் பேசி, ரூட்டை க்ளியர் பண்ணிவிடுகிறாராம். “இவரோட தலையீடு எங்க கொண்டுபோய் விடுமோ...” என்று புலம்புகிறார்கள் நேர்மையான காக்கிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism