Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

பெண் பிரமுகரின் திருமண மோசடி... கண்டுகொள்ளாத காக்கி!

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழைய வில்லன் பெயரைக்கொண்ட பெண் அரசியல் பிரமுகர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் பணியாற்றிய மகிழ்ச்சியான எஸ்.ஐ ஒருவரிடம் புகார் கொடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது எஸ்.ஐ-க்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பெண்ணை, எஸ்.ஐ திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, இருவருக்கும் பிரச்னை ஏற்படவே... விவகாரம் அப்போதைய பெருநகர கமிஷனரான விஸ்வநாதன் வரைக்கும் செல்ல, அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பிறகும், அந்தப் பெண் சிலரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பண மோசடி செய்ததாகப் புகார்கள் வருகின்றனவாம். விசாரித்தால், சம்பந்தப்பட்ட பெண், ஊர் ஊராகச் சென்று இதே வேலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், தற்போது சென்னையின் சிலைப் பிரிவிலிருக்கும் அன்பான ஒருவரின் ஆசியால் அந்தப் புகார்கள் குப்பைக்குச் செல்கின்றனவாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஜூனியர் வாக்கி டாக்கி

விபத்தின் விலை 200 ரூபாய்!

ட்டி தலைகுந்தாவிலிருந்து மசினகுடி வழியாக, முதுமலை செல்லும் கல்லட்டி சாலையை கேரளா மற்றும் கர்நாடகா செல்பவர்கள் பயன்படுத்திவருகின்றனர். அடர்வனத்திலிருக்கும் செங்குத்தான இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாலும், வாகனங்கள் மோதுவதில் சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் இறப்பதாலும் இந்தச் சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக, ஊட்டி - கூடலூர் சாலையைப் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளா, கர்நாடகா செல்பவர்கள் மட்டுமல்லாமல், ‘த்ரில்’லாக வனச்சுற்றுலா செல்பவர்களும் தடையை மீறி இந்தச் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செல்பவர்கள், ஆங்காங்கே அமர்ந்து மது அருந்திவிட்டு, கானகத்தில் காலி மதுபாட்டில்களை வீசியெறிந்து உடைக்கிறார்கள். இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்களில் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் ஏறி, கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. விசாரித்தால், ‘‘தலைகுந்தா சோதனைச்சாவடியில் ஒரு வாகனத்துக்கு 200 ரூபாய் கொடுத்தால், வாகனத்தை உள்ளே அனுமதிப்பது மட்டுமன்றி, எந்தச் சோதனையும் செய்வதில்லை’’ என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்.ஐ-யின் செல்வாக்கு... வாயைப் பிளக்கும் உயரதிகாரிகள்!

மிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின்போது, அந்த மாவட்டத்தின் எஸ்.பி., டி.எஸ்.பி தொடங்கி வழக்கைச் சரியாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். ஆனால், அப்போதும் ஒரேயொரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்த, ஒரேயொரு எஸ்.ஐ மட்டும் இடம் மாற்றப்படவில்லை. நீண்டகாலமாக இதே ஏரியாவில் ‘பழம் தின்று கொட்டை போட்டவரான’ அந்த எஸ்.ஐ-தான் உள்ளூர் வி.ஐ.பி., வி.வி.ஐ.பி-களின் டீல்களையெல்லாம் முடித்துத் தருவாராம். அந்தச் சமயத்தில் அவர் மாற்றப்படாதது குறித்த சர்ச்சை வெடித்ததால், இரண்டு மாதங்கள் கழித்து அருகிலிருக்கும் மேடான பகுதியின் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை மாற்றினார்கள். ஆனாலும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் அதே காவல் சரகத்துக்கே மாறுதலாகி வந்து கல்லாகட்டுகிறார் அந்த ராஜதந்திர எஸ்.ஐ. இவரது செல்வாக்கைக் கண்டு உயரதிகாரிகளே வாய் பிளக்கிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஒஸ்தி’ பெண் அதிகாரி!

முக்காளத்துக்குப் பெயர்பெற்ற நகரக் காவல் நிலைய எல்லைக்குள் கந்துவட்டி, லாட்டரிச் சீட்டு, கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனை... எனச் சகலவிதமான சட்டவிரோதக் காரியங்களும் அரங்கேறுகின்றன. அங்கு பணியாற்றும் சர்ச்சை நடிகை பெயர்கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் ஆசியோடுதான் அனைத்தும் நடைபெறுகின்றனவாம். அனைத்திலும் மூக்கை நுழைத்து செமயாக கல்லாகட்டும் அந்த அதிகாரி, ‘ஒஸ்தி’ பட ஸ்டைலில், ‘‘என்னை கவனிச்சிட்டு என்ன வேணா பண்ணிக்கங்க... போங்க’’ என்று ஓப்பனாகவே டீல் பேசுகிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘மன்மத லீலை’ காவல் நிலையம்!

ஞ்சை மாவட்டத்திலிருக்கும் ‘முருகன் அருள் பெற்ற’ காவல் நிலையத்தில், படமெடுக்கும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருக்கிறார். அவர், அதே ஸ்டேஷனில் பணியாற்றும் ‘காதல் கடவுள்’ காவலருடன் அதிக நெருக்கத்தில் இருக்கிறாராம். இந்நிலையில், மலர்விட்டு மலர் தாவிய காவலர், இன்னொரு பெண் காவலருடன் ‘இசை’ந்து இருப்பதை அறிந்த அந்த இன்ஸ்பெக்டர், அந்தப் பெண் காவலரைக் கண்டித்தாராம். அதனால் கோபமும் வெறுப்பும் அடைந்த அந்தப் பெண் காவலர், காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதன் பிறகே இந்த மன்மத விவகாரங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்திருக்கின்றன!