Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

“சொல்லு செல்லம்” என்று ரொம்பவே வழிகிறாராம். இதனால், அவர் அறைக்குச் செல்லும்போதெல்லாம் உடன் ஒரு ஆண் காக்கித் துணையுடன்தான் பெண் காவலர்கள் செல்கிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

“சொல்லு செல்லம்” என்று ரொம்பவே வழிகிறாராம். இதனால், அவர் அறைக்குச் செல்லும்போதெல்லாம் உடன் ஒரு ஆண் காக்கித் துணையுடன்தான் பெண் காவலர்கள் செல்கிறார்களாம்.

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

பன்றி வளர்ப்பு... பார்ட் டைம் பிசினஸ்!

அருவிகளுக்குப் பிரபலமான மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் பணிபுரிகிறார் ஜெயமான அதிகாரி. விறைப்பும் முறைப்புமான காக்கிப் பணி போரடித்துவிட... பார்ட் டைம் பிஸினஸாகப் பன்றிப்பண்ணை நடத்திவருகிறார். கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலைப் பகுதியில் பண்ணை இருப்பதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரி, அங்கன்வாடி மையம் எனக் கல்விச்சாலைகளுக்கு மத்தியிலுள்ள இந்தப் பன்றிப்பண்ணையை அப்புறப்படுத்த மக்கள் கொடுத்துவரும் மனுக்களையெல்லாம், தன்னுடைய காவல்துறை செல்வாக்கால், புஸ்ஸாக்கிவிட்டாராம். வேறு வழியில்லாமல், நேரடியாக ஜெயமான அதிகாரியிடமே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் கிராம மக்கள். ஆனால், ‘என்னுடைய பார்ட் டைம் பிசினஸ் பன்றி வளர்ப்பு. அதற்கு யார் இடைஞ்சல் செய்தாலும் சும்மா இருக்க மாட்டேன்’ என்று எச்சரித்து அனுப்பினாராம் அதிகாரி!

‘சாருக்கு உப்பு, புளி, மிளகா பார்சேல்...’’

புதுகையின் அறமான காவல் நிலையத்தில் ‘முதலாளி’ பெயர்கொண்டவர் உதவி அதிகாரியாகப் பணியாற்றுகிறார். தனது சொந்த காரிலேயே காவல் நிலையத்துக்கு வருபவர், புகார்கள் மீதான விசாரணை நடவடிக்கைகளுக்கும் தனது காரையை பயன்படுத்துகிறாராம். ‘அடடே...’ என்று அதற்குள் ஆச்சர்யப்பட்டுவிடாதீர்கள். வாடகை டாக்ஸி டிரைவர்போல கி.மீ எண்ணிக்கையைக் குறித்துவைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடம் டீசல், வாடகை என இரண்டையும் கணக்குபோட்டுக் கறந்துவிடுகிறாராம். அதோடு, புகார்தாரர் அல்லது எதிர்த்தரப்பினர் கடைவைத்திருக்கும் வியாபாரி என்றால், அவர்களிடம் உப்பு, புளி, மிளகாயில் ஆரம்பித்து கிரைண்டர், மிக்ஸி என வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கூச்சப்படாமல் கேட்டு வாங்கிவிடுகிறாராம். இவரால், இங்குள்ள வணிக நிறுவனத்தினர் பலரும் காவல் நிலையத்தில் கம்ப்ளெயின்ட் கொடுக்கவே அஞ்சுகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அடக்கி வாசிங்க ஆபீஸர்!

மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் உதவி அதிகாரி ஒருவர், உடன் பணியாற்றும் பெண் காவலர்களிடம் பேசும்போது, “சொல்லு செல்லம்” என்று ரொம்பவே வழிகிறாராம். இதனால், அவர் அறைக்குச் செல்லும்போதெல்லாம் உடன் ஒரு ஆண் காக்கித் துணையுடன்தான் பெண் காவலர்கள் செல்கிறார்களாம். அப்போதும்கூட அந்த அதிகாரி சில்மிஷத்தை விடுவதில்லையாம். லாட்ஜில் அறை எடுத்துத் தங்கும் அவர், இரவு நேரங்களில் ‘‘இங்க லாட்ஜுல சோதனை செய்யணும் வாங்க’’ என்று பெண் காவலர்களை உரிமையோடு அழைக்கிறாராம். இவரது டார்ச்சரைப் பொறுக்க முடியாமல், அந்தப் பகுதி உயரதிகாரிக்குப் புகார் சென்றுள்ளது. விசாரித்ததில் அந்த அதிகாரி, கடந்த காலங்களில் பணியாற்றிய இடங்களிலும் இதேபோல் ஏகத்துக்கும் ஜொள்ளு வடித்ததாக எக்கச்சக்க புகார்கள் உள்ளனவாம். இதையடுத்து ‘ஆணையிடவேண்டிய நீங்க இப்படிப் பண்ணலாமா... தப்பு... அடக்கி வாசிங்க...’ என்று எச்சரித்திருக்கிறார் உயரதிகாரி!

ஜூனியர் வாக்கி டாக்கி

அமைச்சரின் அல்லக்கைகளுக்கே விசிறிவிடும் காவலர்!

ராணிப்பேட்டையில் கரைவேட்டியைக் கட்டிக்கொண்டு ஓவர் அலப்பறை செய்கிறாராம், மகாபாரத பாத்திரத்தின் பெயர்கொண்ட தனிப்பிரிவு காவலர் ஒருவர். மாமனார், மனைவி, மைத்துனர் என இவரின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஆளுக்கோர் அரசியல் கட்சியில் மையம் கொண்டிருப்பதால், காக்கியைவிடவும் கரைவேட்டியையே உயர்வாக நினைக்கிறார் அந்தக் காவலர். லோக்கல் ‘அகிம்சை’ அமைச்சரிடம் இவர் காட்டிய அநியாய விசுவாசம், அவருடைய திருமதியை மக்கள் பிரதிநிதியாக உயர்த்தியிருக்கிறது. இந்த நன்றிக்கடனுக்காக அமைச்சர் வீட்டின் அல்லக்கைகளுக்கே விசிறிவிடும் அளவுக்குப் பணிகிறாராம் அந்தக் காவலர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘காசு கொடு, இல்லைன்னா... திறந்து காட்டு..!’’

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, நீலகிரியில் கோடை சீஸன் உச்சத்திலிருக்கும் சந்தர்ப்பத்தைச் சாதமாக்கிக்கொண்டு, ஊட்டி காக்கிகள் `நைட் ரவுண்ட்ஸ்’ என்ற பெயரில், ஜீப்பை நேராக காட்டேஜ்களுக்கு விடுகிறார்களாம். “டெய்லி கலெக்‌ஷன்ல 5,000 ரூபா குடு... இல்லைன்னா ஒவ்வொரு ரூமையும் திறந்து காட்டு... விசாரிக்கணும்” என அடாவடி செய்கிறார்களாம். அவர்களும் காட்டேஜ் பெயர் கெட்டுவிடும் எனக் கேட்கும் பணத்தைப் புலம்பிக்கொண்டே கொடுத்துவிடுகிறார்களாம். ஊட்டி நகரிலிருக்கும் ஸ்டேஷன் உயர் காக்கி ஒருவர், குறிப்பிட்ட காட்டேஜ்களுக்கு ஏட்டுகளை அனுப்பி தினமும் ‘பண்டல்’ வாங்கிவரச் சொல்கிறாராம்‌!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism