Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

ஸ்நேகிதியே... ரகசிய ஸ்நேகிதியே..!

இனிப்பு மாவட்டத்தில், ‘அ பதிவேட்டைத்’ திருத்தி அரசு நிலத்தைப் பட்டா போட்ட வழக்கு விவகாரம் பரபரக்கிறது. அதில், பிரபல காற்றாடி கம்பெனியின் பெயர்கொண்ட மகளிர் காவல் அதிகாரியின் மகன் குடும்பத்தாரும் விசாரணை வளையத்தில் உள்ளனர். ஆனால், வழக்கை விசாரிக்கும் பாடகி பெயர்கொண்ட அம்மணியும், காற்றாடி அதிகாரியும் மிக நெருங்கிய தோழிகளாகப் பழகிவருகிறார்கள். “தன் தோழியின் மகன் குடும்பத்தாரையும், வழக்கில் சம்பந்தப்பட்ட அரசுத் தரப்பு அதிகாரிகள் சிலரையும் தப்பிக்கவைக்க பலே வேலைகளைப் பார்த்துவருகிறார் பாடகி அம்மணி” எனக் கிசுகிசுக்கிறார்கள் அப்பகுதி காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

இரண்டாவது மாடியில் ‘லீலை அதிகாரி’ அட்டகாசம்!

மைய நகரத்தின் இனிஷியல் காவல் நிலையத்தில், ‘லீலை கடவுள்’ பெயர்கொண்டவர் உயரதிகாரியாக இருக்கிறார். டியூட்டி முடிந்தாலும் அவர் வீட்டுக்குச் செல்வதில்லையாம். தன்னுடைய லிமிட்டிலுள்ள ஒரு ஹோட்டலின் இரண்டாவது மாடி ரூம் ஒன்றில் தங்கிவிடுகிறாராம். லீலை அதிகாரியை ஸ்டேஷனில் பார்க்க முடியாதவர்கள், ஹோட்டலுக்குச் சென்றால் தரிசிக்கலாமாம். ‘கை வலிக்குது, கால் வலிக்குது’ என அந்த ஹோட்டலில் இயங்கும் மசாஜ் சென்டரிலிருந்து, அழகிகளை வரவழைத்து ஓசியிலேயே புத்துணர்ச்சி பெற்றுவருகிறாராம். ‘இப்படி ஓசியில ஒரு ஹோட்டல் எங்களுக்குக் கிடைக்க மாட்டேங்குதே’ என சக போலீஸாரும், லீலை அதிகாரியின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் ஹோட்டல் நிர்வாகிகளும் பொருமுகின்றனர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

தூக்கியடிக்கப்பட்ட ஏட்டு... பின்னணியில் அந்தரங்க வீடியோ!

சென்னையை ஒட்டியிருக்கிறது ஒரு முக்கிய ஆன்மிகத் தலம். அதன் அருகேயுள்ள பேட்டையில் இருக்கிறது அந்தக் காவல் நிலையம். அங்கு உளவுத்துறை ஏட்டாகப் பணியாற்றிவந்த காவலர் ஒருவரை, அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் எஸ்.பி. இதன் பின்னணியில், ஏட்டையாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள். உளவுப்பிரிவில் பணியாற்றியதால் பந்தாவாக வலம்வந்த ஏட்டையா, காவல் நிலையத்தைச் சுத்தம் செய்ய வந்த இளம்பெண்ணை மிரட்டி, காவல் நிலையத்திலேயே பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். இது, காவல் நிலையத்திலுள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது. இதையடுத்துத்தான் ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டாராம். ஆனாலும், அப்பகுதியின் ஆன்மிகத் தலத்தின் தரிசனத்துக்கு அழைத்துச்செல்லும் வகையில் பல உயரதிகாரிகளுடன் ஏட்டையாவுக்குப் பழக்கமிருக்கிறது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையில், மீண்டும் பழைய இடத்துக்கே தன்னைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி உயரதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம் ஏட்டையா!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஆடும் ஆய்வாளர்... அத்துமீறும் அரசியல் புள்ளிகள்!

அரிதான மாவட்டத்தின் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் மதிப்புக்குரிய ஸ்டேஷனில், நடிகையின் பெயர்கொண்டவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மணல், டாஸ்மாக் கடை களிலிருந்து வரும் வருமானம் அம்மணிக்குப் போதவில்லை என்பதால், ‘தொழிலை’விட்டு ஒதுங்கியிருக்கும் நபர்களையும் தேடிப்பிடித்து மீண்டும் தொழிலுக்கு வரச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாராம். தொழில்புள்ளிகளை மிரட்டிப் படியவைக்க லோக்கலிலுள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களைப் பயன்படுத்திக்கொள்கிறாராம் அம்மணி. ஏற்கெனவே அவர் பிரமாண்ட ஸ்டேஷனில் பணியிலிருந்தபோதும், மாமூல் விவகாரத்தால்தான் தூக்கியடிக்கப்பட்டாராம். ஆனால், இங்கு வந்த பிறகும் அம்மணியின் ஆட்டம் அடங்கவில்லை. கூடவே அவருக்குத் துணையான அரசியல் கட்சியினரும் அத்துமீறி வருவதுதான் ஹைலைட்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘ஆய்வாளர் வருவார்... காசு தருவார்..!’’

தேர் நகரின் தாலுகா காவல் நிலைய ஆய்வாளரின் ஜீப் மோதியதில், டீக்கடைத் தொழிலாளி ஒருவரின் வலது கால் முறிந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், ‘வழக்கு எதுவும் வேண்டாம். சிகிச்சைச் செலவுடன் இழப்பீட்டுத் தொகையையும் தந்துவிடுகிறோம்’ எனப் பேரம் பேசியுள்ளனர். இந்தப் பேர விவகாரம் உயரதிகாரிக்குத் தெரியவர, உடனடியாக விபத்து வழக்கு பதிவு செய்ததோடு, ஆய்வாளரையும் ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டார். இந்தச் செய்தி எதுவும் அறியாத அப்பாவி டீக்கடைத் தொழிலாளி, ‘‘ஆய்வாளர் வருவார்... காசு தருவார்...’’ என்று மருத்துவமனையிலேயே கால்வலியோடு முனங்கிக் கிடக்கிறார்!