Published:Updated:

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து சாத்தியமே! - சொல்கிறார் மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன்

ஏ.கே.ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.ராஜன்

“ ‘ஒரே யூனிஃபார்மாக இருக்கிறது’ என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே நீட் தேர்வை ஆதரித்துவிட முடியாது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து சாத்தியமே! - சொல்கிறார் மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன்

“ ‘ஒரே யூனிஃபார்மாக இருக்கிறது’ என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே நீட் தேர்வை ஆதரித்துவிட முடியாது.

Published:Updated:
ஏ.கே.ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.ராஜன்
‘இனியும் நீட் தேர்வு தொடர்ந்தால், சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுவிடும்’ என்ற அதிர்ச்சித் தகவலை, தமிழக அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது ‘நீட் தேர்வு பாதிப்பு’கள் குறித்த ஆய்வுகளைச் செய்து முடித்திருக்கும் குழு. இதையடுத்து, இந்தக் குழுவின் தலைவரான சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை நேரில் சந்தித்தோம்...

“தமிழ்நாட்டில், நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவுகிறபோது, இது குறித்து ஆய்வுசெய்ய ஓர் ஆய்வுக்குழு தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் இருக்கின்றனவே?’’

“நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்றாலும்கூட, நீட் தேர்வு பாதிப்பு குறித்து அரசாங்கம் வைத்திருக்கும் ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் எங்களுடைய அறிக்கையைத் தயார் செய்திருக்கிறோம். பொதுமக்கள் தரப்பிலிருந்து ‘நீட் தேர்வு வேண்டும், வேண்டாம்’ என இரண்டு தரப்பு கருத்துகளுமே கிடைத்தன. அவற்றில் சொல்லப்பட்ட கருத்தின் ஆழத்தை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அறிக்கையின் முடிவை நாங்கள் எழுதியிருக்கிறோம்!’’

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து சாத்தியமே! - சொல்கிறார் மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன்

“மருத்துவப் படிப்பில் சேருவதற்கு, எந்தவிதப் பாகுபாடும் இன்றி ‘நாடு முழுக்க ஒரேவிதமான நீட் தேர்வு’ என்பது சம வாய்ப்பை உருவாக்குகிறதுதானே?’’

“ ‘ஒரே யூனிஃபார்மாக இருக்கிறது’ என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே நீட் தேர்வை ஆதரித்துவிட முடியாது. போட்டி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். யானை, குதிரை, குரங்கு, பென்குயின், மீன் என எல்லாப் பிராணிகளையும் ஒரே வரிசையில் நிற்கவைத்து ஓட்டப் பந்தயம் நடத்துவது சமமான போட்டியாக இருக்காது. குதிரை என்றாலும்கூட, பந்தயக் குதிரையும் வண்டி இழுக்கிற குதிரையும் சமமல்ல. நகர்ப்புறத்தில் உள்ள படித்த பெற்றோரின் குழந்தையையும், கிராமப்புறத்திலுள்ள கல்வியறிவு பெறாத விவசாயியின் குழந்தையையும் ஒரேவிதமான தேர்வு எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது சமமான தேர்வுமுறை ஆகாது. அது சமத்துவமும் அல்ல!’’

“12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்போதும், ‘அரசுப் பள்ளி மாணவர், தனியார் பள்ளி மாணவர்’ என்ற சமத்துவமின்மை இருந்ததுதானே?’’

“ஆம். ஆனால், பிரச்னையின் வீரியம் குறைவு. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால், கிராமப்புறங்களிலிருந்து முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகினர், ஆனால், நீட் தேர்வு முறையில் வெற்றிபெற பிரத்யேகப் பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்திப் படிக்கவேண்டியிருக்கிறது. இது ஏழை மாணவர்களுக்குச் சாத்தியமற்றது!’’

“கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட ‘நீட் தேர்வு விலக்கு’ தீர்மானத்துக்கும், தற்போதைய தி.மு.க அரசு இயற்றியுள்ள தீர்மானத்துக்கும் என்ன வித்தியாசம்?’’

“கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது, ‘மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என ஜெயலலிதா ஒரு சட்டம் கொண்டுவந்தார். அந்தச் சட்டத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு, 2007-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க., நுழைவுத் தேர்வு குறித்து ஆராய அனந்தகிருஷ்ணன் தலைமையிலான ஒரு கமிட்டியை நியமித்து, அந்த கமிட்டி அளித்த ரிப்போர்ட்டை அடிப்படையாகவைத்து புதிதாக ஒரு சட்டம் இயற்றினார்கள். அதன் பிறகே ‘நுழைவுத்தேர்வு ரத்து சட்டம்’ செல்லுபடியானது. இந்த வித்தியாசம்தான்... இப்போதைய நீட் தேர்வு ரத்து விவகாரத்திலும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.’’

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து சாத்தியமே! - சொல்கிறார் மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன்

“சட்டரீதியாக ‘நீட் தேர்வு ரத்து’ என்பது சாத்தியமில்லை என்கிற விமர்சனம் இருக்கிறதே?”

“சாத்தியம்தான்... கல்வி விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றுசேர்ந்து முடிவெடுக்கலாம் என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், அதற்கு மாற்றாக மாநில அரசும் ஒரு சட்டம் இயற்ற முடியும். மாநில அரசு இயற்றிய அந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால், அது செல்லுபடியாகும் என்று சட்டத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. உண்மை இப்படியிருக்க... நீட் தேர்வு ரத்து குறித்து மாநில அரசால் சட்டம் இயற்ற முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

உதாரணமாக, 1956-ல் ‘இந்து திருமணச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. எனவே, அந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணங்களு’க்கு சட்டரீதியாக அங்கீகாரம் பெற முடியவில்லை. 1968-ல் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோதுதான், சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும்வகையில் மாநில அரசால் சட்டம் இயற்றப்பட்டது. வேறு மாநிலங்களில் ‘சுய மரியாதைத் திருமணம்’ செய்துகொண்டால் இன்றைக்கும் அதற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது. தமிழ்நாட்டில் உண்டு. இதேபோல், வேறு விஷயங்களிலும் சில மாநிலங்களுக்கென குறிப்பிட்ட சட்டங்கள் நடைமுறையில் இருந்துவருகின்றனதான். எனவே, மாநில அரசால் சட்டம் இயற்ற முடியாது என்று சொல்வது, விஷயம் தெரியாமல் சொல்வதேயாகும்.’’

“நீட் தேர்வு ஆய்வுக்குழு அறிக்கையில், ‘2010 முதல் 2014-ம் ஆண்டுவரை அரசுப் பள்ளியில் படித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே?’’

“அவர் படித்துப் பார்க்காமல் சொல்கிறார். எங்கள் ரிப்போர்ட்டில், 10 ஆண்டுத் தகவல்களும் அடங்கியிருக்கின்றன.’’