Published:Updated:

எஸ்.பி முதல் எடப்பாடி வரை... நடவடிக்கை கோரும் தூத்துக்குடி மக்கள்!

துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
துப்பாக்கிச்சூடு

குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

எஸ்.பி முதல் எடப்பாடி வரை... நடவடிக்கை கோரும் தூத்துக்குடி மக்கள்!

குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

Published:Updated:
துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
துப்பாக்கிச்சூடு

‘தூத்துக்குடி’ என்றாலே ‘துப்பாக்கிச்சூடு’ நினைவுக்கு வரும் அளவுக்கு தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் அழியாத கறை படிந்துவிட்டது!

2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் பலியாகின. இது குறித்த அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இறுதி அறிக்கையின் சில பகுதிகள் கசிந்தன. அதில், ‘தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கைகளில் ஒன்று இந்த துப்பாக்கிச்சூடு. சிட்டுக்குருவியைச் சுடுவதைப்போல மக்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். யாருடைய உத்தரவும், தூண்டுதலும் இன்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அப்போது பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்ளிட்ட 17 பேர்தான் இதற்கு முழுப் பொறுப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.பி முதல் எடப்பாடி வரை... நடவடிக்கை கோரும் தூத்துக்குடி மக்கள்!
எஸ்.பி முதல் எடப்பாடி வரை... நடவடிக்கை கோரும் தூத்துக்குடி மக்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்’ கிருஷ்ணமூர்த்தி, “துப்பாக்கிச்சூட்டுக்கு போலீஸாரே காரணம் என்ற உண்மைநிலையைக் குறிப்பிட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திட விசாரணை ஆணைய அறிக்கை பரிந்துரை செய்திருப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த சி.பி.ஐ விசாரணையில், இதுவரை ஒரு காவலருக்கு எதிராகக்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அனைத்து குற்றப்பத்திரிகைகளும் பொதுமக்களைக் குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒருநபர் விசாரணை கமிஷனின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, மக்கள்மீது பதிவுசெய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகளை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

கிருஷ்ணமூர்த்தி - வாஞ்சிநாதன்
கிருஷ்ணமூர்த்தி - வாஞ்சிநாதன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம், ‘‘குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்கள்மீது கொலை வழக்கும் பதிவுசெய்யப்பட வேண்டும். மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி-யாக இருந்த திரிபாதி ஆகியோரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஆலை நிர்வாகத்தின் தொடர்பு குறித்தும் விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் முழு உண்மையும் வெளிவரும்” என்றார்.