Published:Updated:

துணுக்குகள்..!

குழந்தைப் பிறப்பில் இந்தியா முதலிடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைப் பிறப்பில் இந்தியா முதலிடம்!

ஜூவி 2020

அரசுக்கே அரண்மனை!

நீர்மகால் அரண்மனை
நீர்மகால் அரண்மனை

திரிபுரா தலைநகர் அகர்தலா அருகேயுள்ள நீர்மகால் அரண்மனையை 1930-ம் ஆண்டு மன்னர் பிர் பிக்ராம் மாணிக்யா கட்டினார். ‘இந்த அரண்மனையை நிர்வகிப்பது யார்?’ என்று மன்னர் மாணிக்யா வாரிசான பிரத்யோத் கிஷோர் மாணிக்யாவுக்கும் திரிபுரா அரசுக்கும் இடையே நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், `அரண்மனை நிர்வாகம் அரசிடமே இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மக்கள் தொகை மர்மம்!

அமித் ஷா, இம்ரான் கான்
அமித் ஷா, இம்ரான் கான்

2017-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசு அதில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் எவ்வளவு பேர் என்கிற தகவல்களை வெளியிடவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாகிஸ்தானில் இந்துக்கள் மக்கள்தொகை குறைந்துவிட்டது’ என்று குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், ‘இரண்டு வருடங்களாகியும் சிறுபான்மையின மக்கள் தொகையைப் பாகிஸ்தான் வெளியிடாததன் மர்மம் என்னவோ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாயகனின் நாய்!

நாயகனின் நாய்!
நாயகனின் நாய்!

ஃபேஸ்புக் சி.இ.ஒ மார்க் ஸக்கர்பர்க், தன் வீட்டில் கொமோண்டோர் எனப்படும் ஹங்கேரிய நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அதன் பெயர் ஃபீஸ்ட். அதற்கென பிரத்யேக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும் இருக்கிறது. 2.6 மில்லியன் பேர் அந்தப் பக்கத்தைப் பின்தொடர்கின்றனர்.

குழந்தைப் பிறப்பில் இந்தியா முதலிடம்!

இந்தியா முதலிடம்
இந்தியா முதலிடம்

2020 புத்தாண்டு அன்று மட்டும் உலகம் முழுவதும் நான்கு லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், 67,385 குழந்தைப் பிறப்புகளுடன் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. 46,299 குழந்தைப் பிறப்புகளுடன் சீனா இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதே வேகத்தில் சென்றால், மக்கள் தொகையில் 2027-ல் இந்தியா, சீனாவை முந்தி முதலிடத்துக்கு வருமென்று யுனிசெஃப் கணித்துள்ளது.

அமேசான்... அடுத்து ஆஸ்திரேலியா!

அமேசான்... அடுத்து ஆஸ்திரேலியா!
அமேசான்... அடுத்து ஆஸ்திரேலியா!

2019-ல் அமேசான் காட்டுத் தீ கோடிக்கணக்கான உயிர்களை அழித்தது. பூர்வக்குடிகள் உட்பட பலரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. பிரேசில் அரசின் திட்டமிட்ட சதியே இந்தக் காட்டுத் தீக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. அமேசான் காட்டுத் தீ ஏற்படுத்திய தாக்கமே இன்னும் முடிய வில்லை... அதற்குள்ளாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பற்றிக்கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியக் காட்டுத் தீ. இதில் கோலாக் கரடிகள், கங்காருகள் எனக் கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழந்துள்ளன. காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு நிதி திரட்ட முடிவு செய்த பிரபல அமெரிக்க மாடல் கீலென் வேர்ட், பத்து டாலர் நிதியளித்தால் இன்ஸ்டாகிராமில் தன் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புவதாக அறிவித்தார். ஏராளமானோர் பத்து டாலர் வழங்க இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி திரண்டிருக்கிறது.

அநீதிப் பாதையில் ஆங் சான் சூகி!

துணுக்குகள்..!

ரோஹிங்யா மக்கள் மீதான மியான்மர் ராணுவத்தின் தாக்குதல் தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணையில், ஆஜராகி வாதிட்டு வருகிறார் மியான்மர் அரசின் ஸ்டேட் கவுன்சிலரான ஆங் சான் சூகி. 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர், ரோஹிங்யா மக்கள்மீது நிகழ்த்தப் பட்ட வன்முறை குறித்து வாய் திறக்காமல் அமைதி காப்பது... `மாபெரும் அநீதி’ என்கின்றனர் மக்கள்.

ரஷ்ய ராணுவத்தில் எலிகள் படை

துணுக்குகள்..!

.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்து வதற்காக திறமைவாய்ந்த ‘எலிகள் ராணுவப் படை’யை ரஷ்ய ராணுவம் தயார்படுத்தி வருகிறது. எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகம் என்பதால், இந்தத் திட்டமாம். எலிகளின் தலைக்குள் மைக்ரோ சிப் ஒன்று பொருத்தப்படுகிறது. அதன்மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது, எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்கள் எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்குத் தெரிய வருமாம். மோப்ப நாயைவிட எலிகள் அளவில் சிறியதாக இருப்பதால், எதிரிகளின் எல்லைக்குள் எளிதாக நுழைந்துவிட முடியும். இந்த விவகாரத்திலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம்தான். எலிகளுக்கு ராணுவப் பயிற்சியளிக்க மூன்று மாதங்கள் தேவைப்படும். இந்தக் கால அளவுதான் ரஷ்ய ராணுவத்துக்கு மிகப்பெரிய சவால்!

நித்திக்கே குரு

நித்திக்கே குரு
நித்திக்கே குரு

மெரிக்காவைச் சேர்ந்த ஜெரமையா ஹீட்டனின் மகள் எமிலிக்கு இளவரசி கதைகள் என்றால் மிகவும் விருப்பம். ‘அந்தக் கதைகளில் வரும் இளவரசி போல் நானும் இளவரசி ஆக முடியுமா அப்பா?’ என்று ஹீட்டனைப் பார்த்து கேட்டார் எமிலி. மகளின் ஆசையை நிறைவேற்றத் துடித்த ஹீட்டன், அதுபற்றித் தீவிரமாகத் தேடத் தொடங்கினார். எகிப்துக்கும் சூடானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிர் தாவில் எனும் பெயரில் கிட்டத்தட்ட 800 சதுர கி.மீ நிலம், இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாமல் சும்மா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக எகிப்து கிளம்பிச் சென்ற ஹீட்டன், அந்த இடத்தில் கால்பதித்து, ‘எனக்கே சொந்தம்’ என்று அறிவித்து தனது கொடியை நாட்டினார். அதோடு, அந்தப் பகுதிக்கு எமிலிதான் இளவரசி என்றும் அறிவித்துவிட்டார். இது நடந்து ஐந்தாண்டுகள் கழித்துதான் ‘கைலாசா தீவுக்கு நான்தான் அதிபர்’ என்று அறிவித்திருக்கிறார் நித்யானந்தா. அந்த வகையில் நித்திக்கே குரு, ஹீட்டன்தான்!