Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: சர்ச்சையில் விமல், சூரி; பழ.கருப்பையாவின் `ஃப்ளாஷ்பேக்' பகிரங்கம்!

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

நான் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா எழுந்துவிட்டார். நான் 20 மணித் துளிகள் பேசிய பேச்சுக்கு, அவர் 30 மணித்துளிகள் விடையளித்தார்

ஊரடங்கு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துவருகிறார்கள் கொடைக்கானல் மக்கள்.

இந்த நிலையில்தான், ஜூலை 17-ம் தேதி கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலுள்ள பேரிஜம் ஏரிக்குச் சென்ற நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் ஏரியில் மீன் பிடித்து ஜாலியாகப் பொழுதைக் கழித்துள்ளார்கள்.

அப்போது அங்கு பணியிலிருந்த வனத்துறை ஊழியர் பிரபு என்பவர் நடிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதைப் பெருமையோடு ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததுதான், விஷயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டது.

விமல், சூரி
விமல், சூரி

சில மாதங்களுக்கு முன்னர் கொடைக்கானல் வனப் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதற்காக அந்தக் குடும்பத்தினரை அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் அமர வைத்து, அபராதம் வாங்கிக்கொண்டு அனுப்பியது வனத்துறை. சில நாள்களுக்கு முன்னர் உள்ளூரைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கும் பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததற்காக, 40,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் பேரிஜம் பகுதிக்கு அத்துமீறிச் சென்று, மீன் பிடித்த நடிகர்களுக்கு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளது வனத்துறை. பிரச்னை பெரிதானதும், தற்காலிகப் பணியாளர்களான சூழல் காவலர்கள் மூன்று பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது வனத்துறை.

- இந்த சர்ச்சை தொடர்பான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3fdJ6bM> ஊரடங்கில் உல்லாசம்... தடையை மீறி ஏரியில் மீன்பிடித்த விமல், சூரி! https://bit.ly/3fdJ6bM

பழ.கருப்பையாவின் `ஃப்ளாஷ்பேக்' பகிரங்கம்!

"சட்டமன்ற உறுப்பினர் ஆனது குறித்தோ, அங்கு பேசுவது குறித்தோ எனக்கு எந்த வகை புல்லரிப்பும் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஜெயலலிதா முதல்வராக சபையில் பேசும்போது ஏற்படும் இடைவெளிகளில், ஒருவகை ஓசை ஒழுங்குடன் மேசையைத் தட்டுவார்கள் உடன் உறுப்பினர்கள். நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அருகிலிருக்கும் உறுப்பினர்கள், 'எல்லாமே கேமராவில் பதிவாகிக்கொண்டிருக்கிறது, அம்மா அதைப் போட்டுப் பார்ப்பார்கள், நீ ஒழிந்தாய்...' என்று அச்சுறுத்துவதுண்டு. எது எதற்குத்தான் ஒருவன் ஒழிவான் என்று கணக்கே இல்லாமல் போயிருந்தது.

...மானியக் கோரிக்கைகளில் புகழ்பெற்றது காவல்துறை கோரிக்கை. அதில் என்னைப் பேசும்படி ஜெயலலிதா சொல்லி நான் பேசினேன். அப்போது எல்லா உயரதிகாரிகளும் மாடங்களில் அமர்ந்திருப்பார்கள். முதலாம் ஆண்டு கோரிக்கையில் தி.மு.க-வினர்மீது போடப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளைப் பாராட்டிப் பேசினேன். 'இந்த வழக்குகளில் தி.மு.க-வினர் தண்டிக்கப்படுவதைப் பார்த்து, இனி அரசு நிலங்கள் அரசியல்வாதிகளின் கனவிலும் தோன்றக் கூடாது. ஆனால், தி.மு.க-வினர் தாங்களாகவே அந்த நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்க முடியாது. அதிகார வர்க்கம் துணை போயிருந்தால் மட்டுமே இத்தகைய காரியங்கள் நடக்க முடியும்.

 பழ.கருப்பையா, ஜெயலலிதா, கருணாநிதி
பழ.கருப்பையா, ஜெயலலிதா, கருணாநிதி

நாம் ஆட்சி நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுத்தோம். அதற்குத் துணையாக இருந்த அதிகாரவர்க்கத்தை, அதிகாரிகளை நடவடிக்கைக்கு உட்படுத்தவில்லையே... கண்காணிக்க வேண்டியவர்கள் களவுக்குத் துணை போனார்கள் என்றால், அவர்களைக் குற்ற வளையத்துக்குள் ஏன் கொண்டு வரவில்லை?'

இப்படி நான் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா எழுந்துவிட்டார். நான் 20 மணித் துளிகள் பேசிய பேச்சுக்கு, அவர் 30 மணித்துளிகள் விடையளித்தார். 'பழ.கருப்பையாவுக்கு ஆட்சி அனுபவம் இல்லை. ஆகவே அதிகாரவர்க்கத்தை அவர் புரிந்துகொள்ள முடியாது' என்பதுபோல் நீண்டது அவரது பேச்சு. இறுதியாக, 'இப்போது பழ.கருப்பையா சமாதானமடைந்திருப்பார் என நினைக்கிறேன்' என்றார். 'சரி அம்மா' என்று நான் அமர்ந்துவிட்டேன். இப்போது கொடிகட்டிப் பறக்கிற அமைச்சர் வேலுமணி அன்று என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் "... நீயெல்லாம் விளங்கப் போறதில்லை' என்றார். அதன்பின்..."

பழ.கருப்பையாவின் ஃப்ளாஷ்பேக் பகிர்வுகளை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3088Z8u > அரசியலில் விளங்காமல் போய்விட்டேன்! - பழ.கருப்பையா https://bit.ly/3088Z8u

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு