Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: பா.ஜ.க தலைவர் - தி.மு.க பிரமுகர் `மீட்', எங்கே போச்சு 83 கோடி?

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

குடும்பம் குடும்பமாக ரயில்வே ட்ராக்குகளில் படுத்துறங்கி, ரயில்களில் அடிபட்டு இறந்தவர்கள் ஏராளம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர், 97 பேர் ரயில்வே ட்ராக்குகளில் இறந்ததாகத் தெரிவித்தார்.

"செயற்குழுவில் நடந்த காமெடி ஒன்றையும் சொல்கிறேன், கேளும்" என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார். "அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனுக்கு வயதாகிவிட்டது என்பதால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவரைக் கழற்றிவிட்டுவிட்டு, தானே அந்தப் பதவியில் அமர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானித்திருந்தாராம். இதற்காக, மதுசூதனனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். எடப்பாடியின் திட்டப்படி எல்லாம் கனிந்துவந்த நிலையில், செப்டம்பர் 25-ம் தேதி இரவு மதுசூதனனை திடீரெனச் சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், 'பதவியை நீங்கள் விட்டுக்கொடுத்தால், உங்கள் அரசியல் எதிர்காலம் என்னாவது?' என்று குழப்பிவிட்டாராம்.

சுதாரித்துக்கொண்ட மதுசூதனன் அன்றிலிருந்து தன்னைச் சந்திக்க வரும் கட்சியினரிடம், 'நான் நல்லா இருக்கேன்ப்பா. நீங்களே பாருங்க... நான் சத்தியமா நல்லாத்தானே இருக்கேன்...' என்று கைகளை மடித்துக்காட்டி புஜபலம் காட்டினாராம். அதேபோல கூட்டத்துக்கும் ஜம்மென்று வந்துவிட்ட மதுசூதனன், கூட்ட நிகழ்வுகளைக்கூடச் சரிவர கவனிக்காமல் அருகிலிருந்த கட்சி நிர்வாகிகளிடம் 'சத்தியமா நல்லாத்தான் இருக்கேன்' என்று கதற... என்னவென்று புரியாமல் தலை கிறுகிறுத்துப் போனார்களாம் நிர்வாகிகள்!"

"பா.ஜ.க தலைவர் ஒருவரை தி.மு.க பிரமுகர் சந்தித்தாராமே..?"

"ஆமாம். அமலாக்கத்துறையின் பிடியில் எக்கச்சக்கமாகச் சிக்கியிருக்கும் தி.மு.க பிரமுகரை, ஒரு ஹோட்டலில்வைத்து சந்தித்தாராம் அந்த பா.ஜ.க தலைவர். தன் மீதான அமலாக்கத்துறை விசாரணை இறுகும் நிலையில், மத்திய அரசு தனது விவகாரத்தில் அடக்கிவாசிக்க என்ன செய்ய வேண்டும் என்று சாந்தமாகக் கேட்டதாம் தி.மு.க பிரமுகர் தரப்பு."

> "தி.மு.க-வில் என்ன நடக்கிறது?" என்று கேட்டதற்கு கழுகார் அடுக்கிய தகவல்களை முழுமையான ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33fj9WH > மிஸ்டர் கழுகு: தி.மு.க-வில் வசூல் வேட்டை! https://bit.ly/33fj9WH

எங்கே போச்சு 83 கோடி?

தமிழக வருவாய்த்துறையின்கீழ் இயங்கும் 'பேரிடர் அபாயக் குறைப்பு முகமை'யிடம், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்பது கேள்விகளை ஆர்.டி-ஐ மூலமாக எழுப்பியிருந்தார். கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``கொரோனா பரவத் தொடங்கி, லாக்டௌன் நீட்டிக்கப்பட்டபோதுதான் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள், விவரிக்க முடியாத அளவுக்குப் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள். பெரும்பான்மையானவர்கள் நடந்தே சென்றது இந்த நூற்றாண்டின் கொடும் அவலம். குடும்பம் குடும்பமாக ரயில்வே ட்ராக்குகளில் படுத்துறங்கி, ரயில்களில் அடிபட்டு இறந்தவர்கள் ஏராளம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர், 97 பேர் ரயில்வே ட்ராக்குகளில் இறந்ததாகத் தெரிவித்தார்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

மே 28 வரையில் மொத்தமாக 238 தொழிலாளிகள் இறந்ததாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதேநேரம், `வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை' என்றார். `புள்ளிவிவரங்களே இல்லையென்றால், கொரோனா காலத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போய்ச் சேர்ந்தது?' என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று கோபத்தோடு, கையிலிருந்த தகவல்களைக் காட்டினார்...

- அதிர்ச்சியூட்டும் அரசின் `அக்கறை' தொடர்புடைய இந்தக் கட்டுரையை முழுமையாக ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3cQhJ8g > எங்கே போச்சு 83 கோடி? - யாரிடமிருக்கிறது வெளிமாநிலத் தொழிலாளர் கணக்கு? - அதிர்ச்சி கொடுக்கும் ஆர்.டி.ஐ பதில்! https://bit.ly/3cQhJ8g

பாலியல் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைகள்!

கொரோனா அச்சத்தால் அன்றாட உணவுக்கே வழியில்லாமல், பெருந்துயரத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள். மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொழில்'முறை' சார்ந்தும், தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தொழில்'முறை' சாராமலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டமும் தார்மிகமும் வெவ்வேறு என்றாலும் அவர்களின் 'பசித்திருக்கும் வயிறுகள்' ஒன்றுபோல ஒட்டியிருக்கின்றன. பல்வேறு விளிம்புநிலை சமூகங்களைப்போலவே நாடு முழுவதும் கண்ணீர்க் கதைகளால் நிரம்பியிருக்கிறது அவர்களின் வாழ்நிலை. இந்தநிலையில்தான், பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, ஆறுதளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!

ஜூ.வி பைட்ஸ்: பா.ஜ.க தலைவர் - தி.மு.க பிரமுகர் `மீட்', எங்கே போச்சு 83 கோடி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு விளிம்புநிலைத் தரப்பினருக்கும் ஆங்காங்கே உதவிகள் கிடைத்தாலும், பாலியல் தொழிலாளர்கள் என்கிற ஒரே காரணத்தால் இவர்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது இந்தச் சமூகம்.

பாலியல் தொழிலாளிகள் சிலரிடம் பேசினோம். அவர்களின் கண்ணீர்க் கதைகள் சில இங்கே முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3n35j1s > வறுமையில் கரையும் 'சிவப்பு விளக்கு'கள்! https://bit.ly/3n35j1s

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு